recent posts...

Monday, January 12, 2009

ஏன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு golden globe கிடைத்தது?

ARRன் Slumdog Millionaire படத்துக்கு கோல்டன் க்ளோப் விருது கிடைத்தது அனைவருக்கும் தெரிந்ததே.
இனி நமது ரஹ்மானின் புகழ் மேன்மேலும் பெருகும்.
அவரின் திறமைக்கும், நற் குணத்துக்கும் இந்த பரிசெல்லாம் பத்தாது. இதற்கு மேலும் கிட்டினாலும் பத்தாது.

Slumdog Millionaire படத்தை பொறுத்தவரை, என் தனிப்பட்ட கருத்தாக, ARRehmanன் இசை, noisyயாக இருந்ததாக என் திரைப் பார்வை பதிவில், குறிப்பிட்டிருந்தேன்.
உன்ன யாருடா கேட்டது? வந்துட்டாரு சொல்றதுக்குன்னு நீங்க கத்தரது கேக்குது.
ஆனாலும், நெனச்சத நெனச்ச மாதிரி சொல்லலன்னா எனக்கு சரிபட்டு வராது :)

திரும்பவும் சொல்றேன், slumdog படத்தை பொறுத்தவரை, முதல் முறை படத்தை பாக்கும்போது, படத்தின் இசை எனக்கு இறைச்சலாய் தான் கேட்டது.

ஆனா, இப்போ, கோல்டன் க்ளோபெல்லாம் கொடுத்துட்டாங்க. விஷயம் இல்லாம கொடுக்க மாட்டாங்க.

background score நான் பயங்கரமாக ரசித்த பல படங்களில் (இந்தி கஜினி உட்பட), அந்த இசைக் கோர்வையால், படத்தின் காட்சி, பல மடங்கு மேலே கொண்டு செல்லப்பட்டிருக்கும்.

(இளையராஜாவின் பல படங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்)

slumdogல், இசையை விட, படத்தின் விஷுவலுக்கு சக்தி பன்மடங்கு அதிகமாய் இருந்ததாலோ என்னவோ, அதன் இசை என் மனதில் பதியவே இல்லை.

குட்டி வயசு ஜமாலும், சலீமும் போலீஸை டபாய்ச்சுட்டு கும்பலா, மும்பை ஸ்லம்மில் ஓடுவாங்க. போர வழியெல்லாம், ஏழ்மையின் கோரதாண்டவம் ஒரு பக்கமும், இன்னொரு பக்கம், இவ்வளவு கலீஜுக்கு மத்தியிலும், சிறுவர்களின் ஆனந்த ஓட்டமும் செம சூப்பரா படம் பிடிக்கப்பட்டிருக்கும்.
அந்த காட்சிகளுக்கு, ரஹ்மான் "ஆ"ன்னு அழகா இசை சேர்த்திருப்பாரு.
ஆனா, எனக்கு அந்த இடம் ரொம்ப ஏமாற்றமா இருந்தது.
அந்த விஷுவலுக்கும், அது காட்டிய அழுத்தமான காட்சிகளுக்கும், அந்த 'ஆ' ஆலாபனை என்னைப் பொறுத்தவரை பத்தலை.

* பசங்க ஓடராங்க, கேமரா பின்தொடருது
* கேமரா சாக்கடையில குப்பை அள்ர ஒரு ஆள காட்டுது
* திரும்ப பசங்க ஓடராங்க போலீஸ்காரர் விரட்டராரு
* கன்னா பின்னான்னு கொட்டிக் கிடக்கும் குப்பைக் கூளங்களை காட்ராங்க
* etc.. etc..

பசங்க ஓடும்போது, ரயில் ஓடும் பீட்டும், ரஹ்மானின் 'ஆ' பாட்டுக்கு பதிலாய், குட்டிப் பசங்கள விட்டு ஏதாவது ஒரு ஜாலியான ஹம்மிங் பண்ண விட்டிருக்கலாம்.
சாக்கடை யதார்த்தத்தை காட்டும் ஒரு விநாடிக்கு, 'திக்'னு ஏதாவது ஒரு அழுத்தமான இசையை அங்கங்க சொறுகியிருக்கலாம்.
ஜாலியும், 'திக்'கும் மாறி மாறி கலங்கியிருந்தா, என்னைப் பொறுத்த மட்டிலும், 'பன்ச்' பல மடங்கு ஏறியிருக்கும்.

ஆனா, நான் ஒரு ஞான சூன்யம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

இங்கே suresh kumarனு ஒருத்தர், அந்த படத்தின் பின்னணி இசையை புட்டு புட்டு வச்சு வெளக்கி சொல்றாரு. நான் இன்னும் முழுசா பாக்கலை. யூ.ட்யூபில் போடாமல், பெரிய ஃபைலை தரவிரக்கம் பண்ணி பாக்கணும்னு, user-unfriendlyயா பதிவை போட்டு வச்சிருக்காரு (பிற்சேர்க்கை: பதிவில் யூ.ட்யூப் வீடியோ ஏற்றப்பட்டு விட்டது). நேரம் இருந்தா கேட்டுப் பாருங்க.

படத்தை இரண்டாம் முறை பாத்துட்டு, இசையின் மேல் கவனம் செலுத்தி, திரும்ப வந்து சொல்றேன். என்னை ஈர்த்ததா இல்லியான்னு ;)

எது எப்படியோ,

Rahman சாரே, SALUTES to you. You made us all really really really proud. You are awesome!

slumdog millionaireல் வரும் கடைசி பாட்டு ஜெய் ஹோ இங்கே.

பி.கு1: இத படிச்சுட்ட், 'அட ஆமாம்'னு, ஏ.ஆர்.ஆருக்கு தோணி, "கூப்பிடுங்க சர்வேனை, தட் மான் ஹாஸ் குட் மீஜிக் ஸென்ஸ்"னு சொன்னார்னா, சர்வேசன்2005 அட்டு யாஹு.காமுக்கு தொடர்பு கொள்ளவும் ;)

பி.கு2: கானா பிரபா எங்கிருந்தாலும் மேடைக்கு வந்து, s.mன் பின்னணி இசையை அலசி ஆராஞ்சு, பிரிச்சு மேஞ்சு ஒரு பதிவை போடுமாறு கன்னா பின்னான்னூ கேட்டுக்கறேன் ;)
இந்த படத்தை பாத்த வெவரம் தெரிஞ்சவங்க எல்லாரும் அப்படியே செஞ்சா, தெரியாத பல விஷயங்கள் தெரிஞ்சுக்கவும், இனி வரும் படங்களில், இன்னும் அதீத தீவிரமா இசையை கவனிக்கவும் அந்த மாதிரி பதிவுகள் உதவும். பதிவு எழுத முடியாதவங்க பின்னூட்டமா சொல்லிட்டுப் போங்க.

40 comments:

சரவணகுமரன் said...

//படத்தின் இசை எனக்கு இறைச்சலாய் தான் கேட்டது.//

நீங்க பார்த்த தியேட்டர் சரி இல்லாம இருந்திருக்குமோ?

SurveySan said...

//நீங்க பார்த்த தியேட்டர் சரி இல்லாம இருந்திருக்குமோ?//

:) no way.

it wasn't due to speaker issues, most certainly.
the 'sound' was certainly good.

innikku Rehman pathi vara matha news ellam padikkumbodhu, romba sandhoshamaa irukku.
he is amazing.

SurveySan said...

Latikas theme - http://www.youtube.com/watch?v=4UiOaQzBccE&feature=related

Ringa Ringa - http://www.youtube.com/watch?v=zfFxWrc5lPc&feature=related

O saya - http://www.youtube.com/watch?v=vHUQht1HRmY&feature=related

Dreams on Fire (sounds more namma ooru style :) very nice one )- http://www.youtube.com/watch?v=oDafaCTLun0&feature=related

SurveySan said...

train sequence - http://www.youtube.com/watch?v=mV912uiRM_A&feature=related

SurveySan said...

THE moment(ARRs thank you note) - http://www.youtube.com/watch?v=0cBy0crMuCk

his humbleness should take him a million more miles.

ஆ! இதழ்கள் said...

இன்னும் படத்தை பார்க்கல் சர்வே...

சீக்கிரமே பாத்துர்ரேன்.

திருடா திருடால

தட்டலங்கா பொட்டலங்கானு ஒரு பாட்டு பொட்ருப்பாரு. பிரசாந்தும் ஆனந்தும் திருடீட்டு ஓடும் போது. அத மாதிரி எதிர்பார்த்தீங்களோ.

ரகுமானைப் பொறுத்தவரை. His policy is "Expect the unexpected". கண்டிப்பாய் இரண்டாவது முறையோ மூன்றாவது முறையோ நீங்கள் கேட்கும்போது. you will feel that you cannot replace that bit.

பல்லு பிச்சை said...

//எல்லாத்திலையும் குத்தம் கண்டுபிடிக்கும், சிலரை, "லகுடபாண்டியாரே"ன்னு கூப்பிடணும் போல இருக்கு. :)//

இத யார் சொன்னதுனு நியாபகம் இருக்குதா?

"உழவன்" "Uzhavan" said...

மிகவும் அருமையான பதிவு.


தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.

கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க


உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்

Truth said...

நான் இந்த படத்தை sunday தான் பாத்தேன். உங்க பதிவை படம் பாக்கும் முன்னாடியே படிச்சிட்டேன். music noisy-a இருக்கும்ன்னு இருந்திச்சு. ஆனா, நான் பாக்கும் போது எனக்கு அப்படி எனக்கு தோனல. நான் ரொம்ப ரசிச்சு கேட்டேன். மறுபடியும் பாருங்க, உங்களுக்கும் பிடிக்கும்

P.S. Suresh Kumar said...

Surveysan - I have put up the videos in metacafe and Youtube now... Ippo ellarum easiya paarkalaam

SurveySan said...

பல்லு பிச்சை,

//இத யார் சொன்னதுனு நியாபகம் இருக்குதா?//

;) எங்கியோ கேட்ட மாதிரி கீதே.

குத்தம் சொல்லல நானு. ஒரு ரசிகனின் ஏமாற்றமும் அதற்கான கேள்விகளும் மட்டுமே ;)

SurveySan said...

உழவன், நன்றி.

அவார்டுக்கு இன்னும் யாருக்கும் வாக்கலை. படிச்சுட்டு பிடிச்சிருந்தா வாக்கரேன்.

SurveySan said...

Truth,

///முன்னாடியே படிச்சிட்டேன். music noisy-a இருக்கும்ன்னு இருந்திச்சு. ஆனா, நான் பாக்கும் போது எனக்கு அப்படி எனக்கு தோனல.///

:) good to know. அப்ப கண்டிப்பா என் காதுலதான் ப்ரச்சனை :)

SurveySan said...

Suresh,

அருமை. கலக்கிட்டீங்க. நன்றீஸ் பல.

கானா பிரபா said...

வந்துடேஏஏஏஏன் ;-)

சர்வேசன்

நீங்கள் சொன்ன அதே மனநிலை தான் எனக்கும் இருந்தது. நேற்றுத் தான் படத்தைப் பார்த்தேன். ரஹ்மானுக்கு இந்த விருது கிடைத்தது பெருமைக்குரிய விஷயமாக இருந்தாலும், அவரால் இதை விட சிறப்பாகவே காட்சிகளின் கனத்தை உணர்ந்து கொடுக்க முடியும். அதற்கு அவரின் பல படங்கள் உதாரணம்.

என்னைப் பொறுத்தவரை இந்தப் படத்துக்கு தனியே இசைபிரிப்பைச் செய்யத்தேவை இல்லை. மொத்தம் 11 பிஜிஎம் ஐ அவரே படம் வருவதற்கு முன் செஞ்சு முடிச்சிட்டார். பின்னணி இசை என்பது படத்தை பர்ஸ்ட் காப்பியில் பார்த்துக் கொண்டே கோர்க்கும் விஷயம். ஏற்கனவே செஞ்ச சட்டை என்பதால் தான் பொருத்தம் இல்லாம இருக்கு.

SurveySan said...

கானா பிரபா,

///மொத்தம் 11 பிஜிஎம் ஐ அவரே படம் வருவதற்கு முன் செஞ்சு முடிச்சிட்டார். பின்னணி இசை என்பது படத்தை பர்ஸ்ட் காப்பியில் பார்த்துக் கொண்டே கோர்க்கும் விஷயம். ஏற்கனவே செஞ்ச சட்டை என்பதால் தான் பொருத்தம் இல்லாம இருக்கு.
////

அட! இதுதான் மேட்டரா.
நெத்தியடி மேட்டர் சொல்லியிருக்கீங்க.
நிச்சயமா, 'செஞ்ச சட்டை'யால் தான் இந்த இழப்பு போலருக்கு :(

உஸ்ஸ் அப்பாடி, இப்ப நிம்மதி எனக்கு :)

anyway, நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயம்தான் இது.

btw, golden globe வரிசையில் ரஹ்மானுடன் போட்டியில் இருந்தவர்களில் ஒருவர், Clint Eastwoodஆம். அவரு மீஜிக் எல்லாம் கூட போடறாரா? அடேங்கப்பா! தல தலதான். :)

SurveySan said...

கானா பிரபா, ரஹ்மான் படத்தை பாட்த்துதான் மீஜிக் போட்டிருக்காருன்னு இந்த interviewல இருக்கு பாருங்க.
http://nymag.com/daily/entertainment/2008/11/ar_rahman_on_slumdogs_sound.html

Was it different working with him than a Bollywood director?
Usually, it’s very different. Danny used my stuff in a very different way. I really loved the film, so I would compose pieces to fit the images, so I would do a lot of templates. With this, there’s not many cues in the film. Usually a big film has 130 cues. This had just seventeen or eighteen: the end credits, beginning credits, that stuff.

SurveySan said...

music review இங்கே
http://entertainment.oneindia.in/music/reviews/2009/slumdog-millionaire-music-review-130109.html

கானா பிரபா said...

http://www.musicindiaonline.com/music/hindi_bollywood/s/movie_name.10198/

இங்கே பாடல்கள் உட்பட பிஜிஎம் எல்லாம் இருக்கு. எனக்கென்னவோ இவர் முதலே போட்ட பாங்கில் தான் இருக்கு. அதனால் தான் படத்தோட ஒட்டவில்லை என்று சொன்னேன். அவரே சொல்லீட்டார், எனவே அப்பீட்டாகிறேன்.

புருனோ Bruno said...

"அங்கே இசையமைத்தேன், இங்கே இசையமைத்தேன்” என்று பீலா மட்டும் விட்டு ஊரை ஏமாற்றியவர்களால் சோர்ந்திருந்த தமிழர்களுக்கு இந்த தமிழனின் சாதனை நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே

ராமலக்ஷ்மி said...

நாட்டுக்குப் பெருமை
நமக்கும் பெருமை!

SurveySan said...

Gana Prabha,

//அவரே சொல்லீட்டார், எனவே அப்பீட்டாகிறேன்.//

ok. uppeatu granted ;)

SurveySan said...

Bruno,

//தமிழர்களுக்கு இந்த தமிழனின் சாதனை நிச்சயம் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதே///

no doubt about that :)

SurveySan said...

ராமலக்ஷ்மி,

///
நாட்டுக்குப் பெருமை
நமக்கும் பெருமை!
///

absolutely!

RAMASUBRAMANIA SHARMA said...

GOOD ARTICLE...A.R.REHMAN...THE GREAT MUSIC DIRECTOR OF INDIAN MUSIC HISTORY...HAS PROVED HIS METTLE, BY LOTS OF CREATION IN THE INDIAN CINEMA MUSIC, ALSO THRU "VANTHAE MATHARAM"....WHICH HAS REACHED...ALL THE NOOK AND CORNERS OF "INDIA"...RATHER THIRU REHMAN, HAS REALLY CREATED POPULARITY FOR THIS INDIAN FREEDOM STRUGGLE SONG...LOTS OF MILE STONES...COULD NOT LIST ALL HERE...THIS "SLUMDOG MILLIONAIRE" IS ANOTHER DIAMOND IN HIS THROWN...GREAT...

Anonymous said...

*Dead man walking - A Hollywood
movie that effectively used eastern music (Nusrat Fateh Ali Khan)
Rahman is a fan of Khan's music. In
my opinion Rahman's music did not
blend very well in slumdog millionaire. He had better soundtracks for Bombay and Guru.
He used the theme music from Bombay
in Deepa Mehta's Fire, effectively!

*Many Hollywood directors use already popular songs in their films. An example would be Celine Dion's song in Titanic. Danny Boyle and Rahman used a song from Mia's grammy nominated album Paper Planes. (Maya Arulprakasam).

*The director showed India in a
poor light. Latest person to slam this movie is Amitabh Bachchan.

* In an earlier movie called Trainspotting, Danny Boyle showed
the hero swimming in a dirty toilet
bowl. I cannot understand this type of creative thinking!

SurveySan said...

Danny Boyles 'creative' thinking is sure to be questioned :)

showing India in poor light is a regular thing for some directorys.

while I strongly criticize it, I am starting to think lately, that its realism and lets not be ashamed to show our imperfections.
atleast, that will invite some good soulds to try and fix issues.

Nivedita said...

Hello sir... I really felt the same way as u did for the music score. when i told this others, they looked at me as an alien:-)There are also some rumors like the song jai ho has been recorded for the hindi movie YUVRAJ.

SurveySan said...

Nivedita, I am delighted to see someone else had the same observation as I did ;)

some people, just assumes music will be good after reading good reviews. they dont listen right :)

mayavi said...

The main reason for arrahman winnign the golden globe is his humbleness. this is what he said when he landed in chennai airport.

The 43-year-old man, who has captured the imagination of a nation of a billion people and has taken Indian music to dizzy heights refused to agree that he was the best musician in the country. He said: "In fact, there are greater musicians in the world than me. I am very happy and I dedicate this award to my country".

Later he met the media at his house and said: "Personally the award means nothing to me. I don't think that Slumdog Millionaire which fetched me the Golden Globe was my best album in the last 16 years. But I thought that I should get it for India. It was worrying me that if I don't get it, I will be letting down millions of people. So when I got it, I was very happy."

"For me, this film is a dedication to H.Sridhar my sound engineer, who was like a brother, who passed away in December".

i am so tired of reading the comparision between arrahman and illayaraja.

they both of 2 generes...each is mnaster in what we do.. to be frank..those who slam illayaraja or arrahman.. can put a tune on their owna nd try in kodambakakm.
in hoolywood no one compares brad pitt with clint eastwood..but in india sharukh is compared to amitabh..arrahman to illayaraja.. vijay to rajini.... who dont ppl understand.

one more thing.. amitabh has slammed slumdog millionaire because it has showed india in poor lights... to show a boy grown in slum... should the director go to austria.. swiss... and show...slums or what...
it was so idiotic of him.. saying that and its not a bollywood movie.. for ehaven sake its a ENGLISH movie where india have acted thats it.

Please everyone be proud of what a fellow india has acheived.

SurveySan said...

mayavi, very very well said.

I am a big fan of Rahman for his humbleness.

I didnt knew sridhar passed away. very sad to hear that.
Rahmans, most songs came to life with rich sound because of Sridhars expertise.

Rahman will achieve greater heights.

ராஜ நடராஜன் said...

உங்க மாதிரி ஆளுகப் பதிவுகளுக்கு வராம இருக்குறது நல்லதுன்னு நினைக்கிறேன்!IKEA போற காலு கஜனி இந்திப் பதிவைப் பார்த்த எபக்ட்ல பக்கத்துல இருந்த சினிமா கேலரிக்கு நடந்துருச்சு. அநாவசியமா ஜனவரி 1ம் தேதி தியேட்டருக்கும்,ஸ்டார்பக்ஸ்க்கும் அழுததுதான் மிச்சம்.

இந்தப் பதிவிலும் எவ்வளவு புளுகுறீங்களோன்னு படம் பார்த்துடலாமுன்னு சின்னதா ஒரு சபலம்:)ஆமா படத்தோட பேரு என்ன சொன்னீங்க?

ராஜ நடராஜன் said...

வில்லு தான் ஓடுதாம்! காசை உண்டி(ய)ல போட்டு வைக்கிறேன்.நேரம் வரும்போது உதவும்.

SurveySan said...

ராஜ நடராஜன்,

///அநாவசியமா ஜனவரி 1ம் தேதி தியேட்டருக்கும்,ஸ்டார்பக்ஸ்க்கும் அழுததுதான் மிச்சம்.///

வாட் கொடுமைங்க திஸ்?
இந்தி கஜினி புடிக்கலியா?
ஒலகமே கொண்டாடுதே :)

//இந்தப் பதிவிலும் எவ்வளவு புளுகுறீங்களோன்னு படம் பார்த்துடலாமுன்னு சின்னதா ஒரு சபலம்:)ஆமா படத்தோட பேரு என்ன சொன்னீங்க?
///

slumdog millionaire. இந்த படம் பிடிக்காம போக சான்ஸே இல்லை. தரமான படம். ஆனா, சில முகச் சுளிவுகள் நிச்சயம், யதார்த்தத்தினால் ;))

SurveySan said...

ராஜ நடராஜன்,

///வில்லு தான் ஓடுதாம்!//
நெஜமாவா?

///காசை உண்டி(ய)ல போட்டு வைக்கிறேன்.நேரம் வரும்போது உதவும்.///

:) வில்லு பாக்கரதுக்கு பதிலா, உங்க வீட்டு மூலைல ஒக்காந்துக்கிட்டு, ரெண்டு செவுரும், எப்படி ஒட்டிக்கினே நிக்கர மாடிரி மேஸ்திரி அழகா கட்டியிருக்காருன்னு, ஒரு மூணு மணி நேரம் ஆராயலாம். will be more interesting way to spend time :)

ராஜ நடராஜன் said...

//வாட் கொடுமைங்க திஸ்?
இந்தி கஜினி புடிக்கலியா?
ஒலகமே கொண்டாடுதே :)//

பிடிக்கலைன்னு யாரு சொன்னா?IKEA போலாமுன்னு திட்டமிட்டு சினிமாத் தியேட்டருக்குள்ள பூந்துட்டேன் உங்க கஜனிப் பதிவைப் பார்த்துட்டு:) தமிழில் உள்ள குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்திருக்கிறார்கள்.

இதைப் பற்றி அடுத்த நாள் சூடா ஒரு பதிவு போடலாமுன்னு பார்த்தேன்.ஆனால் கிளிநொச்சி தாக்கத்தில் முடியாமப் போச்சு :(

Anonymous said...

//சில முகச் சுளிவுகள் நிச்சயம், யதார்த்தத்தினால் ;))//I cannot imagine the human waste scene (someone deliberately falling into) happening in real life.
Maybe Amitabh wasn't told how his image will be used in the movie. They do not show
real Amitabh signing the paper.
*In a game show like the one shown
the participants take a written test first. Not anyone can become
a participant. People are quick to
criticize our directors. Yes it is a well made movie. The reason why it is popular among westerners is because it confirms every stereotype they can think of, when they think of India. I am surprised that a snake charmer was
missing!

SurveySan said...

tamil,

///I cannot imagine the human waste scene (someone deliberately falling into) happening in real life///

you must be kidding me.

Thousands of municipal workers, do this a few times everyday in our cities for a megre amount (rs.100? per day or even less)

I can a bet a million rupees that we can find a million 'fans' who will do this for no money, if their 'thalaivar' says it.

kandippaa adhu yadhaarthamdhaan.


///The reason why it is popular among westerners is because it confirms every stereotype they can think of, when they think of India.////

very True! I get immensely angry when Shyam benegal likes project india in a bad taste.
but lately, i am starting to think, the more slums we show, the better results we will get from some good hearted people, in fixing the issues.

///I am surprised that a snake charmer was
missing!////

:) u probably didnt pay attention.

Anonymous said...

I have seen people doing sewer work. But I have never seen any
news report where someone doing what the kid did to meet his idol. To me it's degrading, creating an unpleasant image of the level Indians would stoop to.
* let's move the story to Bhopal.
It has been 24 years since the gas leak @ the union carbide plant. 8000 people died. The land around the area is still polluted, unfit for anyone to live. Still people live there. According to a news report children wash their bottoms
in the polluted cesspool. Let's make our hero an orphan from that tragedy. Hollywood would never go
for this storyline. It will prick their conscience. They wanted to make a movie to play on the stereotypes that will work with the
western audience. People in power,
at the highest level, whether its,
politicians or business people always know how to push the right buttons to get what they need.
We should not fall for this :-(

Unknown said...

வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !
dated: 24.02.2009