recent posts...

Friday, July 11, 2008

ஒரு பெரிய சோகம்!

சென்ற ஜூலையில் உயிரைக் காப்பாற்ற உதவுங்கள் என்ற பதிவில் பாஸ்டனைச் சேர்ந்த Vinay என்பவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

Leukemia என்ற கொடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட Vinayக்கு எலும்பு மஜ்ஜை ( bone-marrow) தேவைப்பட்டிருந்தது.
இந்த bone marrow தேவைப்படுபவர்களுக்கு, இரத்த தானம் போன்று சுலபமாக, மாற்று மஜ்ஜையைப் பெற முடியாது.
ஒரு south-Asianக்கு இது தேவைப்பட்டால், அதே 'இன' மனிதர்கள் வெகு சிலரின் bone-marrow மட்டும் தான் பொருந்துமாம்.
இந்தியா போன்ற developing நாட்டில் உள்ளவர்களுக்கு, இந்த மாதிரி விஷயங்கள் தானமாய்க் கிட்டுவது மேலும் கடினம்.
மஜ்ஜை தானம் செய்ய பெயர் பதிவு செய்துள்ளவர்களின் தொகை மிக மிகக் குறைவாக உள்ளதே இதற்க்குக் காரணம்.

சில ஆயிரம் பேரில், ஏதாவது ஒருவரது மஜ்ஜையே தன் உயிர் பிழைக்க உதவும் என்ற கொடுமை நிலை இந்த leukemia நோயால் பாதிக்கப்படும் மனிதர்களுக்கு.

நண்பர் VSK இந்த bone marrowவைப் பற்றி விளக்கமாக ஒரு பதிவும் இட்டிருந்தார்.

இப்படி ஒரு கொடுமையிலும், Vinayயின் பெற்றோரும், மனைவியும், நண்பர்களும், இணையமும் சேர்ந்து, பல இடத்தில் இதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, சென்ற ஆண்டின் இறுதியில் இவருக்கான bone-marrowவை தேடிப்பிடித்திருந்தது.

அருவை சிகிச்சை முடிந்த Vinay மூன்று மாதங்கள் இயல்பாக வாழ்ந்ததாகத் தெரிகிறது.

எல்லாம் சரி ஆகிவிட்டது என்று சந்தோஷப் பட்ட தருணத்தில், மீண்டும் leukemia வந்து தொல்லை கொடுத்தது. மேலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு இந்த may மாதம் வீட்டிற்கு திரும்பியிருந்தார் Vinay. தினமும் மூன்று மணி நேரம், உடற்பயிற்சி பெற்று, பழைய நிலைக்கு திரும்புவேன் என்று அன்றைய தினம் தனது ப்ளாகில் குறிப்பிட்டிருந்தார்.
....I am doing well so far and will be transferring to a physical rehab center here in Boston to get my overall strength back. I hope to be home for good in 2-3 weeks! The rehab facility will provide 3 hours of physical therapy seven days a week, quite intense but should be better for me in the long run.....

ஆனால், விதி வலியது என்பது போல், சென்ற மாதம் ஜூன் 25ஆம் தேதி, Vinay காலமாகிவிட்டார்.

அவரைப் பிரிந்து வாடும் அவரது துணைவியார் Rashmi, பெற்றோர், மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும் ப்ரார்த்தனைகளும்.

சின்ன ஜலதோஷம், ஜொரம் வந்தாலே, மூணு நாளு பொரட்டிப் போட்ட மாதிரி ஆயிடும் எனக்கெல்லாம்.
இந்த சின்ன வயசுல, இவ்ளோ பெரிய கொடுமையெல்லாம் தாங்கிக்கொண்டு எதிர் நீச்சல் போட்ட Vinay வியப்பைத் தருகிறார்.

அதுமட்டுமல்லாமல், Sameer என்ற இன்னொரு leukemiaவால் அவதிப்பட்ட நண்பருக்கும் பெரிய moral support ஆக இருந்துள்ளார்.

Sameerம் March மாதம் காலமாகிவிட்டார்.

தலைவலியும், வயிற்று வலியும் தனக்கு வந்தால் தான் தெரியும்னு சொல்லுவாங்க.

தனக்கு வர எல்லாம் காத்திருக்காமல், நம்மில் இருக்கும் ஏதாவது, மற்றவரின் உயிரைக் காக்க உதவும் என்றால், அதை இன்றே தானமாக கொடுங்கள்.

  • இரத்தம், வருஷத்துக்கு ரெண்டு தடவையாவது கொடுக்கலாம் (அதிகபட்சம் 6 தடவை கொடுக்கலாமாம்).

  • Bone marrowவை தானமாகக் கொடுக்க உங்கள் பெயரை பதிந்து வைக்கலாம். யாருக்காவது தேவைப்பட்டு, உங்கள் மஜ்ஜை சேருமானால், அன்று, வலியில்லாமல், உங்களிடம் இருந்து கொஞ்சம் மஜ்ஜையை எடுத்துக் கொள்வார்கள். மேலும் விவரங்களுக்கு VSK பதிவைப் பாருங்கள்.

  • உடல் உறுப்புக்கள் சில, உங்கள் மரணத்திர்க்குப் பிறகு, மற்றவர்களுக்காக தானம் கொடுக்கலாம். அதை இப்பவே, உங்கள் விருப்பமாக உங்கள் உற்றார் உறவினரிடம் சொல்லிவைத்து வேறு என்ன சட்ட ரீதியாக செய்யவேண்டுமோ அதை செய்து வைக்கலாம்.

  • பணம் பத்தும் செய்யும். அது இல்லாதவங்களுக்கு, கொஞ்சமாவது, உங்களால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள்.

    Hindu நாளிதழில் மே மாதம் இவரைப் பற்றி வந்திருந்த செய்தி இங்கே.

    Vinay இடம்பெற்ற PBS Cancer/Leukemia பற்றிய documentary இங்கே

    ஹ்ம்! :(
  • 8 comments:

    Boston Bala said...

    :(

    ---இரத்தம், வருஷத்துக்கு ரெண்டு தடவை கொடுக்கலாம்.---

    இன்னும் அதிகமாவே கொடுக்கமுடியும்னு நினைக்கிறேன்

    Vassan said...

    சீப்யா.கோம் ல் படித்த செய்தி தமிழில் கண்டேன். நன்றி.

    SurveySan said...

    பாலா,

    //இன்னும் அதிகமாவே கொடுக்கமுடியும்னு நினைக்கிறேன்//

    ஆமாம். திருத்திட்டேன்.
    அதிகப்படியா 6 தடவ கொடுக்கலாமாம்.

    SurveySan said...

    Vassan,

    வருகைக்கு நன்றி.

    செய்தியின் உரல் இருந்த்தா கொடுங்க.

    Vassan said...

    Vinay

    வல்லிசிம்ஹன் said...

    போன் மேரோ யார் வேணும்னாலும் கொடுக்கலாமா.

    SurveySan said...

    வல்லிசிம்ஹன்,

    bone marrow யார் வேணும்னாலும், கொடுக்கறேன்னு தங்கள் பெயரை பதிந்து வைத்துக் கொள்ளலாம்.

    யாருக்காவது தேவை ஏற்படும்போது, இதுவரை பதிந்துள்ள ஆயிரமாயிரம் பேர்களில் எவரது, மேரோ பொறுந்தமோ, அவங்களை அழைத்து தானம் எடுத்துக் கொள்வார்கள்.

    நீங்க, உங்க வீட்டுக் கிட்ட இருக்கர, மேரோ வங்கி எங்க்க இருக்கோ, அங்க போய் பெயர் பதியும் போது, உங்க, எச்சில் சேம்பிள் வாங்கி வச்சிப்பாங்க. அதிலேருந்து, உங்க வகை மேரோ என்னன்னு அவங்களுக்குத் தெரிஞ்சுடும்.

    step1) register your name at your local bone marrow donation bank. they will collect your saliva sample to figure out your marrow type and other properties.

    step2) when a need arise, the bank data will be used to find a match

    step3) if your marrow matches the requirement they will get in touc with you to complete the donation. there is no pain involved and it will be just a 1 or 2 hours procedure.

    Sathiya said...

    //விதி வலியது//
    100% true
    May his soul rest in peace!