recent posts...

Tuesday, May 20, 2008

இதையெல்லாம் ஏன்யா தடுக்கணும்?

பதிவர் நண்பர் ரிஷான் ஷெரீப், நார்வேயில் சில சைக்கோக்கள் விளையாடும், விபரீத வீர விளையாட்டை பத்தி பதிவு எழுதியிருந்தார்.

பனிப்பாறைகளில் வாழும் ஸீல் எனும் அப்பாவியான விலங்கினத்தை மனிதர்கள், விளையாட்டு என்ற பெயரில், வேட்டையாடும் கொடுமையைப் பற்றி புகைப்படங்களுடன் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவில் பல்வேறு கருத்துக்கள் வந்து குவிந்திருந்தன.
சில பேரு, ஐயோ பாவம்னும், சிலரு அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாங்கர மாதிரியும் கருத்து சொல்லியிருந்தாங்க.

மனுஷன், மிருகங்களை கொல்றது, இன்னிக்கோ நேத்தோ நடக்கரதில்லை.
ஆதாம், ஏவாள் காலத்துலேருந்தே நடக்கரதுதான்.

சிங்கம் மானைக் கொல்றதும்,
ஸீல் மீனைக் கொல்றதும்,
பனிக் கரடி, ஸீலைக் கொல்றதும்

பனிக் கரடியையும், ஸீலையும், சிங்கத்தையும், மீனையும், மனுஷனையும், மனுஷன் கொல்றது

உலக நியதி.

என்ன ஒரே தப்புன்னா, இதை, விளையாட்டுக்காக கொல்றது, கொஞ்சம் சைக்கோத்தனம்.

எனக்குத் தெரிஞ்சு, எந்த மிருகமும், விளையாட்டுக்காக இன்னொரு மிருகத்தைக் கொல்லாது. பசியாலும், பயத்தாலும் தான் கொல்லும்.

ஆட்டையும், மாட்டையும், நாம ஷூ போட்டு, பெல்ட் கட்டி, ஜாக்கெட் போட கொல்றதும் கொஞ்சம் வருத்தமான செயல்தான்.
ஆனா, அதையெல்லாம் நிறுத்தப் போறோமா என்ன?

சில நாடுகள்ள, சில மிருகங்களின் தோலினால் ஆன ஜாக்கெட்டெல்லாம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலை, பனிக் கரடி மாதிரி விலங்குகள்.

இதற்கு முதன்மை காரணம், அந்த ஜீவராசிகள் அழிந்து வரும் நிலையை அடைந்துள்ளதுதான்.

இன்னும் கொஞ்ச நாள்ள, கடல் மீன்கள் திவாலாகும் நிலை வர உள்ளது. ( 2050? )
ஆடு, மாடு, கோழியெல்லாம் வளக்கர மாதிரி, மீன்களை அவ்வளவு சுலபமா இதுவரை வளக்கும் யுக்தியை கண்டுபிடிக்கலை. ( ஆஸ்திரேலிய அமெரிக்காவில் மீன் பண்ணையில், மீன்கள் வளர்க்கப்பட்டாலும், உலகின் மொத்த தேவையை பூர்த்தி செய்யும் அளவு இவை பெரிதல்ல )

அப்படி, ஸீல் வகையினங்கள் அழியும் நிலை வரும்போது, சில நிறுவனங்கள் கொய்யோ மொய்யோன்னு கத்தி, இந்த விளையாட்டையெல்லாம் தடை செய்வாங்க. அட்லீஸ்ட், ஸீல்ல ரெண்ட புடிச்சு ஒரு Zooல வச்சு, அதை குட்டி போட வச்சு, நம்ம வருங்காலத்துக்கு ஸீல் இதுதான்னு கண்டிப்பா காட்டுவாங்க.

2007ல் வெளிவந்த "அடப்பாவமே, போதுங்கய்யா விட்டுடுங்க பாவம்யா பாவம்!" என்ற சர்வேயின் முடிவைப் பார்த்தாலே நமது லட்சணம் நன்கு விளங்கிவிடும்.

பி.கு1: அடேயப்பா, மேற்கோள் காட்டர அளவுக்கு போன வருஷம் சர்வே போட்டிருக்கோம்ல :)

பி.கு2: பாரதி நாதனுக்கு காது குத்தும் ஒரு சுபயோக சுபதினத்தில், ஒரு பாவப்பட்ட ஆட்டை ஃபோட்டோவெல்லாம் எடுத்து, அதுக்கப்பால அதை மர்டர் பண்ணி, மட்டன் பிரியாணி செஞ்சு, நமக்கெல்லாம் பார்சல் அனுப்பாம, மொத்தமா ரவுண்டு கட்டி அடிச்ச கொடுமையும் நடக்கத்தான் செய்யுது. இளவஞ்சியை மிறுக வதை சட்டம் தண்டிக்குமா? ( ;) ஹி ஹி )

பி.கு3: கொசு, கறப்பான் பூச்சியெல்லாம், ரவுண்டு கட்டி சாகடிக்கறமே, அந்த ஜீவராசி extinct ஆயிடுச்சுன்னா பரவால்லயா? அது என்ன ஞாயம்? அப்ப, மனுஷனுக்கு தேவையானது மட்டும் இருக்கணும், மத்ததெல்லாம் எப்படியோ போவலாமா? :)


லூஸ்ல விடுங்கப்பா. நம்ம ப்ரச்சனையே ஆயிரத்தெட்டு இருக்கு. அதை மொதல்ல கவனிப்போம்.

கருத்ஸ்?

14 comments:

M.Rishan Shareef said...

//பனிக் கரடியையும், ஸீலையும், சிங்கத்தையும், மீனையும், மனுஷனையும், மனுஷன் கொல்றது

உலக நியதி.

என்ன ஒரே தப்புன்னா, இதை, விளையாட்டுக்காக கொல்றது, கொஞ்சம் சைக்கோத்தனம்.

எனக்குத் தெரிஞ்சு, எந்த மிருகமும், விளையாட்டுக்காக இன்னொரு மிருகத்தைக் கொல்லாது. பசியாலும், பயத்தாலும் தான் கொல்லும்.//

இது சரியான கருத்து.இந்த சைக்கோத்தனத்தைத்தான் ஏதாவது பண்ணனும்.அப்பதான் இந்த மாதிரி செயலை இனிமே செய்யமாட்டங்கள்ல?

உங்கள் கருத்தையே தனிப்பதிவாக இட்டமைக்கு நன்றி நண்பரே...! :)

SurveySan said...

ரிஷான்,பதிவு எழுத மேட்டர் தந்த உங்களுக்கும் நன்னி :)

உங்கள் பதிவையே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, digg.com மாதிரி இடங்களுக்கு அனுப்பினீங்கன்னா நல்ல உபயோகம் இருக்கும்.

இல்லன்னா, அந்த படமெல்லாம், Slide show வாக்கி, 'heal the world make it a better place'மாதிரி ஒரு பாட்டை பின்னணியில் ஓட விட்டு youtubeல் போட்டீங்கன்னாலும், செம ஹிட்டாகும். ஏதாவது நல்லதும் நடக்கும்.

நம்ம ஆளுங்க 'கொன்றால் பாவம் தின்றால் போகும் டைப்பு' :)

M.Rishan Shareef said...

அட..இந்த எண்ணம் எனக்குத் தோணாமப் போச்சே... :(

சுட்டிக்காட்டியமைக்கும் சுட்டி தந்தமைக்கும் நன்றி நண்பரே :)
பார்க்கலாம்.ஆபிஸில் அதிகம் ஆணி பிடுங்க வைத்திருக்கிறார்கள் இப்போது.
நேரம் அனுமதிக்கும் போது கட்டாயம் செய்யமுயல்கிறேன்.

இல்லாவிட்டால்,பதிப்புரிமையை உங்களுக்குத்தந்தால் நீங்கள் குறிப்பிட்டவற்றைச் செய்ய முடியுமா நண்பரே? :)

SurveySan said...

sure.

இல்லண்ணா ஒரு போட்டி வச்சு எல்லாரையும் செய்ய சொல்லவேண்டியதுதான்.

இனியாள் said...

Indru kaalaiyil thaan Mathan oda "Manithanukkulle mirugam" padikka nernthathu, manithan mattum thaan oru uyir inathai muzhuvathum aliththe vidukiran nu list kuduththirunthanga.......... romba kodumainga, ethukaagavum innoru uyira azhikka koodathungrathu en karuththu.
Post interesting a irunthathu.

இனியாள் said...

Indru kaalaiyil thaan Mathan oda "Manithanukkulle mirugam" padikka nernthathu, manithan mattum thaan oru uyir inathai muzhuvathum aliththe vidukiran nu list kuduththirunthanga.......... romba kodumainga, ethukaagavum innoru uyira azhikka koodathungrathu en karuththu.
Post interesting a irunthathu.

ilavanji said...

சர்வேசன்,

// என்ன ஒரே தப்புன்னா, இதை, விளையாட்டுக்காக கொல்றது, கொஞ்சம் சைக்கோத்தனம்.//

இது கரெக்கிட்டாத்தேன் சொல்லியிருக்கீங்க :)

// ஒரு பாவப்பட்ட ஆட்டை ஃபோட்டோவெல்லாம் எடுத்து, அதுக்கப்பால அதை மர்டர் பண்ணி, மட்டன் பிரியாணி செஞ்சு, //

இதயே நாங்க எப்படி எழுதுவமுன்னா,

”முனியப்பனுக்கு நேர்ந்துவிட்ட ஆட்டை, பூசையெல்லாம் செஞ்சு, சாமிக்கு படையலாக்கி, கடைசியா சொந்தபந்தத்துக்கு விருந்தோம்புனோம்...”

இந்தமாதிரி விசயத்துல எல்லாம் அவங்கவங்க பார்வைதான். அந்த பார்வைகள் அவங்கவங்க சமூக வளப்பும் பழக்கவழக்கங்களும் கொண்டு வர்றதுதான். இதுல

சரிதப்புன்னெல்லாம் பேசிக்கினு இருந்தா முடியற காரியமா?

ஆட்டை சந்தோசமாத்தான் நேர்ந்துக்க்கிட்டோம். மாமன்மச்சானுங்க கூடிக்குழாவி சந்தோசமாத்தாம் பிரியாணி சாப்புட்டோம். அது பற்றிய என்பார்வையிலான பதிவு

இது. இதுவே நான் ”சூப்பரு பிரியாணி”ன்னும் சொல்லிட்டு கூடவே , ச்சும்மா ”மிருகவதை சபைநாகரீக”முன்னுட்டு “அய்யோ பாவம்! ஆடு!” அப்படின்னு நான்

எழுதியிருந்தன்னா அதான் இரட்டைவேட ஆபாசமா இருந்திருக்கும்!

ஒரு புகைப்படம் ஒரு செய்தியை மக்களுக்குச சொல்கிறது. அது எந்த விதமான எதிர்வினைகளை பார்க்கிறவர் மனதில் உருவாக்குகிறது என்பது அவரவர்

கண்ணோடமில்லையா!? :) ஒரு புகைப்படக்காரனாக நடந்த நிகழ்ச்சியின் பதிவு இது. ஒரு வாசகனாக எனக்கு கெடா வெட்டு சொந்தத்துக்கு பிரியாணி போட்டது

மகிழ்வளிக்கும் நிகழ்வு. உங்களுக்கு அது மிருகவதை! அம்புட்டுத்தேன் மேட்டரு! :)

திவாண்ணா said...

gods must be crazy படம் பார்த்த போது வியந்தது என்னவென்றால் பாலைவனவாசி மிருகத்தை வேட்டையாடிவிட்டு அருகே போய் "என்னை மன்னித்துக்கொள். என் குடும்பம் குழந்தைகள் பசியோட இருக்காங்க. அதுக்காக உன்னை கொல்லறேன்" என்பார்!

உணவுக்கோ பாதுகாப்புக்கோ கொல்லுவதை புரிஞ்சுக்கலாம். மத்தது கொடூரம்தான்.

SurveySan said...

iniyal,
//ethukaagavum innoru uyira azhikka koodathungrathu en karuththu.//

நல்ல கருத்து. ஆனா, சாப்பிடறதுக்காக அழிக்கலாம் என்பது என் கருத்து.

அப்படியே, அன்றாடத் தேவைகளான ஷூ, பெல்ட், ஜேக்கட் இதுக்காகவும் அழிக்கலாமான்னுதான் தெரியல.

//Post interesting a irunthathu.//

நன்றி.

SurveySan said...

இளவஞ்சி,

வருகைக்கு நன்னி.
உங்க அருமையான D80 புகைப்படங்களைப் பார்த பொறாமையில் வந்த பதிவு இது ;)

//மகிழ்வளிக்கும் நிகழ்வு. உங்களுக்கு அது மிருகவதை! அம்புட்டுத்தேன் மேட்டரு! :)//

எங்களுக்கும் மகிழிவளித்த நிகழ்வு உங்க புகைப்படம் மூலம்.
எனக்கு இது மிருகவதையா தெரியல.
நானும் பல 'மிருகவதை' செய்யரத பாத்தவந்தான். பிரியாணி சாப்பிட்டவந்தான் ;)

SurveySan said...

திவா,

//பாலைவனவாசி மிருகத்தை வேட்டையாடிவிட்டு அருகே போய் "என்னை மன்னித்துக்கொள். //

கரெக்டு. அருமையான காட்சி அது.
மனுஷனின் அன்றாட அதி அத்யாவசய்மான தேவைக்காக மிருகத்தை கொல்வதிலும் இயற்கை அழிப்பதிலும் தவறில்லை.

ஆனா, சில சமயம், அந்த அத்யாவச்யம் என்னங்கரதுல பலருக்கு பல மாறுபட்ட கருத்து உருவாயிடுது.
சிலருக்கு, முதலை ஜாக்கெட்தான அத்யாவச்யம்.
சிலருக்கு, எலிக்கறி தான் அத்யாவச்யம்.

அடுத்தவனோட அத்யாவச்யம் எதுங்கரது தீர்மானிக்க நாம யாரு? :)

இப்படி.

SurveySan said...

kayams

M.Rishan Shareef said...

அன்பின் சர்வேசன்,

http://rishansharif.blogspot.com/2008/06/blog-post.html&id=136077

இங்கே இன்னும் உங்களைக் காணோமே நண்பரே? :)

SurveySan said...

ரிஷான், ஆறிப்போச்சேன்னு விட்டுட்டேன் :)