recent posts...

Thursday, May 15, 2008

ஹாப்பி வெள்ளி சர்வே ~ ஜா'வா, சு'வா?

நண்பர்காள். வாங்க வாங்க.

ரொம்ப நாளா ஒரு கொழப்பமுங்க.

தமிழ் சினிமாவப் பத்தி பேச ஆரம்பிச்சா, அப்படியே நழுவி தமிழிசையைப் பத்தி பேச ஆரம்பிச்சு, அப்படியே நழுவி, ராஜாவா ரஹ்மானான்னு டைவர்ட் ஆகி, எஸ்.பி.பி சூப்பரா யேசுதாஸ் சூப்பரான்னு பேசி, இன்னும் ஒரு படி மேலே போய், சுசீலா கலக்கலா ஜானகி கலக்கலான்னு இழுப்போம்.
நானும் என்னமோ, எனக்கு இவங்கெல்லாம் மாசா மாசம் சம்பளம் அனுப்பர மாதிரி, ராஜா, எஸ்.பி.பி, ஜானகிக்கு வக்காலத்து வாங்கிகிட்டு இருப்பேன்.

நம்ப என்ன வாதாடினாலும், கத்தினாலும், இவங்க எல்லாருமே A-Class என்பதில் மறுப்பேதுமில்லை.
ஆனாலும், எல்லாருக்கும் அவங்கவங்க விருப்பு வெறுப்பு இருக்குமில்ல. எல்லாரையும் புடிச்சிருந்தாலும், யாராச்சும் ஒருத்தர தூக்கலா புடிச்சிருக்குமில்ல?

நம்ம மத்தியில் "யார் மனசுல யாரு, அவங்களுக்கென்ன பேருன்னு" கண்டுபிடிக்கவே இந்த சர்வே.

கானா பிரபாவின், றேடியோஸ்பதியில், பிடிச்ச அஞ்சு பாட்டை அனுப்பச் சொல்லியிருந்தாரு. அதுல தெரியாத் தனமா, ஜானகிதான் சூப்பருன்னு சொல்லிட்டேன்.
ஜி.ரா கலிபோர்னியாவுக்கு, ஆட்டோ அனுப்ப ட்ரை பண்ணிக்கிட்டிருக்காராம் :)

இனி நீங்களே சொல்லுங்க. உங்களுக்கு சுசீலா பாடரது ரொம்ப பிடிக்குமா? ஜானகி பாடரது ரொம்ப பிடிக்குமா?

ஜானகி ஸேம்பிள்:


சுசீலா ஸேம்பிள் (நன்றி ஜி.ரா):


இனி, வாக்குங்க.
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி. ரெண்டு பேரும் டாப்-ஸ்டார்ஸ்.
ஆனா, உங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்ச பாடகி யாருன்னு யோசிச்சிட்டு குத்துங்க.
அப்படியே உங்களுக்கு இவங்க பாடின பாட்டுல ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சது எதுன்னும் சொல்லிட்டுப் போங்க.



பி.கு: சிறந்த பாடகர் 2007க்கு உனக்கென இருப்பேன், பாட்டை பாடி அனுப்பச் சொன்னேன். VSK, ஷைலஜா, உள்பட, எல்லாரும் டிமிக்கி கொடுத்துட்டே இருக்கீங்க. நல்லால்ல.

நன்றி! ஹாப்பி வெள்ளி!

வாழ்க்கை வாழ்வதற்கே! ;)

11 comments:

SurveySan said...

உங்களுக்கு இவங்க பாடினதுல ரொம்ப பிடிச்ச பாட்டையும் சொல்லிட்டுப் போங்க.

SurveySan said...

10 votes so far going 50:50

நெல்லை சிவா said...

ஜானகி குரலிசை இன்னிசைதான் என்றாலும், சுசீலாவின் குரலினிமை + இளமைக்கு ஈடு வராது.

சுசிலாம்மா குஷ்புக்குப் பாடின 'பூப்பூக்கும் மாசம்' பாட்டு கேட்டாலே புரியுமே..

SurveySan said...

ஹ்ம். அப்படீங்கறீங்க.

பூ பூக்கும் மாசம், நல்ல பாட்டு, ஆனா என் காதுகளுக்கு, ரொம்ப சாதாரணமான பாட்டு மாதிரி தான் தெரியுது. ஸ்கூல் ரைம் மாதிரி :)

Anonymous said...

என்னோட முதல் சாய்ஸ் ஜானகிதான். ஹம்மிங்ல அவங்க தான் பெஸ்ட். சின்னசின்ன வண்ணக்குயில்(மவுன ராகம்) தொடங்கும் முன்னால், லலலலா லலலலா ன்னு ஒரு துவக்கம் குடுப்பாங்க. அப்பறம் வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதெ பாட்டுக்கு நடுவுல ஒரு லலலலாலலா லலலல குடுப்பாங்க. அந்த மாதிரி யாரும் பாடினதும் இல்ல பாடப்போறதும் இல்ல

நெல்லை சிவா said...

என்ன தலைவரே..

'பூப்பூக்கும் மாசம் தைமாசம்' - பாட்ட குஷ்பூக்கு சுசிலாம்மா பாடுனப்ப அவங்க வயசையும், அந்தக் குரலினிமையையும் பாருங்கங்கிறதுக்காகச் சொன்னா, நீங்க 'பாட்ட' ரைம் பாட்டுன்னு பாடலப் பத்தி கமெண்டு சொல்றீங்களே..குரலப் பாருங்கய்யா..

கானா பிரபா said...

தல

இரண்டு கண்ணில் எது சிறந்தது என்று கேட்பது போல இருக்கு, ஒராளை நான் சொல்ல மாட்டேன், சொன்னா ரெண்டு பேரையும் தான் சொல்வேன்.

G.Ragavan said...

வாங்க சர்வேசன். இந்த ரெண்டு பாட்டுமே எனக்குப் பிடிக்கும். என்னாலயும் ஓட்டுப் போட முடியாது. ரெண்டு பேருக்கும் ஓட்டுப் போடும் வாய்ப்பு இல்லாததால நான் வாக்குப் பதியலை.

ஆனா ஓரு பதிவு பதிஞ்சிட்டேன். இதோ இங்கே.
http://gragavan.blogspot.com/2008/05/psuseela-psusheela-sjanaki.html

Anonymous said...

//இரண்டு கண்ணில் எது சிறந்தது என்று கேட்பது போல இருக்கு, ஒராளை நான் சொல்ல மாட்டேன், சொன்னா ரெண்டு பேரையும் தான் சொல்வேன்.//

ரிப்பிட்டே....

இந்த சர்வே ஏதோ தேவையில்லாத ஒன்று என்று தோன்றுகிறது. :(
எப்ப நீங்க உங்கள் சார்பை சொல்லிட்டீங்களோ அதுக்கு அப்பறமா நீங்க அது பற்றிய சர்வே எடுக்கும் தகுதி இழந்து விடுகிறீர்கள். :)

இதுல கொடுமை ரைம்ஸ் மாதிரியிருக்கு அது/இதுன்னு இம்மெசூர்ட் கமெண்ட் வேற.

SurveySan said...

ஜி.ரா, உங்க பதிவு அருமை. நல்ல தொகுப்பு.

SurveySan said...

அனானி, சர்வே போடறவங்களுக்கு ஒரு கருத்து இருக்குமில்ல?
அத தனியா இன்னொரு பதிவு போட்டு சொல்லலாங்கறீங்க - சரிதான் :)

//இதுல கொடுமை ரைம்ஸ் மாதிரியிருக்கு அது/இதுன்னு இம்மெசூர்ட் கமெண்ட் வேற.///

ரைம்ஸ் மாதிரி இருக்குன்னா ஏங்க இம்மெசூர்ட்? ஒரு ஏத்த இறக்கம் இல்லாத தொடக்கங்க அந்த பாட்டுல. :)