recent posts...

Tuesday, July 24, 2007

என்ன பாவம் செய்தனை... Feelings பா.

சில வருடங்கள் வெளியூர்களில் வேலை செய்துவிட்டு, தாய் வீடு திரும்பிய மாதிரி சிலிக்கான் வேலி என்றழைக்கப்படும் வ.கலிபோர்னியாவுக்கே திரும்ப வந்தாச்சு.
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இருந்தத விட இப்ப நம்ம மக்களின் ஜனத் தொகை இரு மடங்காகியிருக்கு (பாத்தா, பத்து மடங்கான மாதிரி தெரியுது :) ).

காலைல அலுவலகம் செல்லும்போது, வழி நெடுகிலும், எல்லா பேருந்து நிலையங்களிலும், நம்ம ஊர் பசங்களும் பொண்ணுங்களும் வரிசை கட்டி நிக்கும் காட்சி வியப்பைத் தருது.
சாதாரணமாகவே, மற்ற நகரங்களைக் காட்டிலும், இங்கு இந்திய உணவகங்களும், காய்கரிக் கடைகளும் எக்கச்சக்கமா இருக்கும்.
கடந்த சில வருடங்களில், இந்தக் கடைகளின் எண்ணிக்கை கன்னா பின்னான்னு ஏறிடுச்சு. சரவணா பவன் முதல், முனியாண்டி விலாஸ் வரை 10 நிமிட சுற்றளவில் எல்லாமே இருக்கு.

வந்தவுடன் முனியாண்டி விலாஸ் போய் ஒரு கட்டு கட்டணும்னு மெனுவ பாத்தா, உவ்வே. முயல்கறி மொதல் ஐட்டம். பாத்தவுடன், மீ த எஸ்கேப்! :)

என் அலுவலகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் இந்திய முகம். தெலுங்கரும், தமிழரும், 'இந்தி'யர்களும் இல்லாத ஒரு டீமும் இல்லை.
கணினித் துறையில் நம் ஆளுமை அடேங்கப்பா ரகம். நாமின்றி அணுவும் அசையாது. (அப்படின்னு நெனச்சுக்கிட்டிருக்கோம்... மத்தவங்க சுதாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. குறிப்பா, ரஷ்யா, சைனா,...)

வார இறுதியில் ஊர் சுற்றச் செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமையே 'weekend' மேனியா ஆரம்பமாயிடும்.
இயற்கை வளங்கள் கொழிக்கும் ஊர் இது.

அது தவிர, இவர்களே நிறுவியுள்ள பூங்காக்களும் விளையாட்டு மைதானங்களும், நீச்சல் குளங்களும், குளம், குட்டைகளும் ஏராளம் ஏராளம்.
வீட்டுக்குப் பக்கத்தில் (10 நிமிட தூரத்தில்) 25 ஏக்கர் பரப்பளவில் அழகான புல்தரையுடன் ஒரு பூங்கா.

அதுனுள்ளே, 4 டென்னிஸ் கோர்ட், 2 கூடைப் பந்துக் களம், பேஸ் பாள் க்ரவுண்டு (கிரிக்கெட்டு இங்கதான் ஆடராங்க நம்ம பயலுவ). குழந்தைகளுக்கு என்று ஸ்லைடு, ஊஞ்சல் மாதிரி ஐட்டங்களும் இங்கயே இருக்கும். எல்லாமே இலவச உபயோகத்திர்க்கு.

இந்த மாதிரி பூங்காக்கள் கிட்டத்தட்ட 10 மைலுக்கு ஒன்று எல்லா மூலை முடுக்கிலும் இருக்கும்.
இதைத் தவிர, நீச்சல் குளங்கள், indoor விளையாட்டு வசதிகள், லைப்ரரி என்று பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் நடந்தெத்தும் தூரத்தில்.

இவற்றின் பராமரிப்பும் மிக மிக அருமையா செய்யறாங்க.


இது பத்தலன்னா, சுற்றிப் பார்க்க இயற்க்கை வளங்களும் ஏராளம். Lakes, மலைகள், கடற்கரை என்று சகலமும் உண்டு. சில வாரங்களுக்கு முன் அருகில் இருக்கும் ஒரு Lakeக்கு போயிட்டு வந்தோம். கண்ணாடி மாதிரி தண்ணி, ஏக்கர் கணக்குல அதைச் சுற்றி, பச்சைப் பசேல் புல்வெளி, வாடகைப் படகு, Lakeல் குளிக்க வசதி, குளிப்பவர்களை பாதுகாக்க நாலஞ்சு baywatch காவலாளிகள்.

சூப்பர் குளியல் போட்டு, சிக்கன், மீன் வகையராக்களை Barbeque செய்து, உண்டு விழுங்கி, காத்தாடியெல்லாம் விட்டு, கொஞ்சம் கிரிக்கெட்டும் விளையாடி, நண்பர்களுடன் அளவளாவி மகிழ்ந்து வீட்டுக்குத் திரும்ப இரவானது.

இங்கிருக்கும் சாலை வசதிகளும், மற்ற infrastructure வசதிகளும், சொல்லி மாளாது.
சுலப வாழ்க்கை சுலப வாழ்க்கை!

எல்லாம் முடித்துவிட்டு அன்றைய இரவு உறங்கும்போது பல கேள்விகள் மனதில் எழுதன.

நம்ம ஊர் (குறிப்பா சென்னை) நெலம என்ன?

'தார்' பார்த்து 10 வருடங்களுக்கும் மேலான எங்கள் தெருச் சாலை. பாலைவனம் போல் காட்சி அளிக்கும் மரங்களற்றச் சூழல் (மரம் வைக்க முயற்சி பண்ணேன். அது தோல்வி அடஞ்சது தனிக் கதை).
ஒரு நல்ல ரோடு போட்டு, மண்ணு பறக்காம இருக்க, ரோட்டின் இரு பக்கமும் புல்லும், மரங்களும் வைத்து பராமரிக்கக் கூடவா தெரியாது நமக்கு?

எவனோ பணம் பண்ண, drainage கட்டப் போறோம்னு, அங்கங்க நோண்டி வச்சு, மூன்று வருடங்களாக வாய் பிளந்திருக்கும் சாலை.

drainage வர வரைக்கும் இது இருக்கட்டும்னு, திறந்த வெளி சாக்கடை கால்வாய் கட்டிவிட்டு, அதை பராமரிக்காமல் கப்படிக்க விட்டிருக்கும், லோக்கல் முனிசிபாலிடி பாடிகள். இதைக் கட்ட அவங்க கொள்ளையடிச்சது தனி கதை.

தினம் தினம் பல்லவனிலும், எலெக்ட்ரிக் ரயிலிலும் முட்டி மோதி புளி மூட்டையாய் பிதுங்கி வரும் வயதானவர்களும், பெண்களும், சிறுவர் சிறுமிகளும்.

விளையாட்டு மைதானமெல்லாம், இனி புத்தகத்திலும், டி.வியிலும் மட்டுமே பார்க்க முடியும் என்பது கூடத் தெரியாமல், விட்டுக்குள்ளே 'புக் கிரிக்கெட்' ஆடும் நண்பர்களின் பிள்ளைகள்.

சென்னையைச் சுற்றி பச்சைப் பசேல்னு நெல்லு வெளஞ்ச எடமெல்லாம் இன்னிக்கு பில்டிங்கா மாறியிருக்கு. சரியான திட்டமிட்டுதான் இதை எல்லாம் செய்யரானுவளா? இல்ல, வரும் காசை அள்ளிப் போட்டுக்கிட்டு எவன் எப்படிப் போனா என்ன, தன் வயிறு நெரஞ்சா போதும்னு சில அல்லக்கைகளின் வழக்கமான நோண்டல் தானா?

ஒழுங்கான ரோடே இல்ல, அப்பரம் எங்க லைப்ரரி, நீச்சல் குளம், பூங்கா, barbeque, ஊஞ்சல், சருக்கு மரம் இதெல்லாம் எதிர்பாக்கரது?

வீட்டுக்கு பக்கத்துல ஒரு பெரிய கொளம் இருக்கு (lake). அதையும் ஓரத்துல எவனோ 'ஆக்ரமிக்க' ஆரம்பிச்சிருக்கான். இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல, அங்கயும் flat வந்தா ஆச்சரியப் பட ஓண்ணுமில்ல.

Spencersக்குள்ள போனா, நல்லாதான் இருக்கு, ஆனா, அந்த மெயின் ரோடுக்கு, லெப்டும் ரைட்டும் உள்ள போனா, கலீஜாதான் இருக்கு, இன்னிக்கும்.
என்னிக்கும் இப்படிதான் இருக்கும் என்கிர ரீதியில, நாளுக்கு நாள் மோசமாகிட்டேதான் இருக்கு.

அரசாங்க அலுவலகங்களில், எந்த ஒரு சின்ன வேலை முடிக்கவும் (கரெண்டு கனெக்ஷன், தொலைபேசி, passport verifications, etc...) லஞ்சம் கொடுத்தே பழக்கப் பட்டுப்போன வீட்டுப் பெருசுகள்.

என் கண்ணுக்கு மட்டும்தான் அப்படித் தெரியுதா? உங்க கண்ணுக்கு சிங்காரச் சென்னை தெரியுதா? தெரிஞ்சா சொல்லுங்க, அந்த எடத்துல ஒரு லேண்ட் வாங்கிப் போடறேன்.

இப்படி நாஸ்தியாகுதே நம்ம ஊரு?

எங்கங்க கோட்ட விட்டோம்?

என்ன பாவம் செஞ்சோம்?

பாவங்க நம்ம வருங்காலச் சந்ததி :(

இதையெல்லாம் யோசிக்க யோசிக்க விரக்தியும், இயலாமையும், கையாலாகாத் தனமும் பீரிட்டு வருது.
ஆனா, root cause இதுக்கெல்லாம் நாம தானோ?

கொஞ்சூண்டு பொறுப்பா இருந்திருந்தா கூட, இந்தளவுக்கு மோசமாயிருக்காது.

சரி பண்ண முடியாத அளவுக்கு லேட் ஆயிடுச்சோ? தேவையில்லாத கவலையோ?

உங்க பீலிங்க்ஸையும் பதிவா போடுங்க! பதில் தெரிஞ்சா சொல்லுங்க!

பீலிங்க்ஸ் தொடரும்...

18 comments:

வவ்வால் said...

சர்வேசன்,

யாரையும் குற்றம் சொல்ல முடியாது எல்லாருக்கும் தனிப்பட்ட வேலைகள் இருக்கு. அதைத்தான் பார்க்க முடியும்.that is the reality! பதிவு மட்டும் போட்டா போதுமானு உங்களை கேட்கலாம். ஏன் பதிவு மட்டும் போட்டீர்கள் என்பதற்கு கையடக்கமாக உங்களிடம் ஒரு விளக்கம் இருக்கும். அப்புறம் என்ன இருக்கு இதைப்பற்றிப்பேச.

SurveySan said...

வவ்வால்,

//யாரையும் குற்றம் சொல்ல முடியாது எல்லாருக்கும் தனிப்பட்ட வேலைகள் இருக்கு. அதைத்தான் பார்க்க முடியும்.that is the reality! பதிவு மட்டும் போட்டா போதுமானு உங்களை கேட்கலாம். ஏன் பதிவு மட்டும் போட்டீர்கள் என்பதற்கு கையடக்கமாக உங்களிடம் ஒரு விளக்கம் இருக்கும். அப்புறம் என்ன இருக்கு இதைப்பற்றிப்பேச.//

நீங்க சொல்ல வர்ரது புரியல? என் மனசில் எழுந்த கேள்விக்கு பதில் தேட பதிவப் போட்டேன்.

தனிப்பட்ட வேலைகள் எல்லாருக்கும் இருக்கு சாரே. ஆனா, சிலர் அவங்க கடமையான தனிப்பட்ட வேலைய செய்யாததாலயும், அத நம்ம கேள்வி கேக்காததாலயும் தான் இந்த நெலமேலோ இருக்கோமோ?

that is the realityன்னு கண்டுக்காம விட்டுடலாங்கறீங்களா?

Anonymous said...

சர்வேஸ், இதுக்கு ஒரு சர்வே போடலாமே?

SurveySan said...

அனானி, சர்வே போட்டிருக்கலாம்தான்.
ஆனா, சர்வே போட்டா, விலாவாரியா யாரும் கருத்த சொல்ல மாட்ராங்க.

இந்த பீலிங்க்ஸுக்கு, கருத்துத் தேவ.

அப்பரமா இன்னோர் பதிவுல, சர்வே போட்ருவம் :)

வவ்வால் said...

சர்வேசன் இது கண்டிப்பா புரிஞ்சு இருந்தாலும் புரியாத போல தான் நீங்க பேசி ஆகனும் அதான் நிலமை!

சரி விடுங்க , உங்க ஃபீலிங்ச்கு ஒரு 100 பின்னூட்டம் வந்து பதில் சொன்னா என்ன பண்ணுவிங்க , சொல்லுங்க, ஒரு சிறிது நேர அல்ப சந்தோஷம் அடட 100 பின்னூடம் என்று! பிறகு, அடுத்த வீக் எண்ட் கு எங்கே போகலாம்னு பிளான் பண்ண போவிங்க?அல்லது அடுத்த பதிவு என்னனு ?அவ்வளவு தானே, உடனே இந்தியவில் எல்லா நிலமையும் மாறிடுமா ,இல்லை நீங்க தான் அடுத்த பிளைட்ல சென்னைக்கு ஓடி வரப்போறிங்களா, அப்பறம் என்னாத்துக்கு உங்க போதைக்கு அடுத்தவங்களை ஊறுகாய் ஆக்கப்பார்க்கறிங்க!(இது வரைக்கும் எத்தனை ஃபீலிங்ஸ் ஆப் இந்தியாவை பார்த்து இருப்போம்)

SurveySan said...

வவ்வால்,

நீங்க சொல்ரது புரியுது. வாய்ப்பேச்சு பேசி ஒண்ணும் ஆகப் போறதிங்கரது சரிதான் :(
என் கேள்விக்கு விடை கொடுக்கும்போதாவது, ஒரு சிலர் யோசிச்சு, ஒண்ணு ரெண்டு நல்லது பண்ணா நல்லது தானே?

//இல்லை நீங்க தான் அடுத்த பிளைட்ல சென்னைக்கு ஓடி வரப்போறிங்களா//

அடுத்த ப்ளைட்ல வரலாங்கர முடிவுக்கு வந்தாச்சு. அதனால தான் இந்த சிந்தனையெல்லாம் சமீபகாலமா ஜாஸ்தியா இருக்கு.

Anonymous said...

உங்க கேள்விக்கு சுருக்கமா பதில் சொல்கிறேன். நகர வளர்ச்சி, நாட்டு வளர்ச்சியெல்லாம் திட்டமிட்டு நடக்கணும். மேற்கு நாடுகளில நகர்ப்புறங்கள் எல்லாம் எப்படி வளரணும்ன்னு திட்டம்
வச்சிருப்பாங்க. எல்லா இடத்திலேயும் நினச்சதயெல்லாம் கட்ட முடியாது. எதாவது மாற்றம் வேணும்னா, நிபுணர்கள்
மட்டுமில்லாம பொது மக்களிடமும் கருத்து கேட்பாங்க. இப்பவும் இந்தியாவில எதுவும் குடி முழுகிப் போகல. சென்னையில (MADRAS METROPOLITAN DEVELOPMENT AUTHORITY)
ஒரு அரசு அலுவலகம் இருக்கு. அது எந்த அளவுக்கு உருப்படியா வேலை செய்துன்னு தெரியல. இந்த மாதிரி அமைப்பு
சிறு நகரங்களுக்குக் கூட வேணும். அரசியல்வாதிங்க தலையீடு சுத்தமா இருக்கக் கூடாது.

இன்னுமொரு முக்கியமான விஷயம். கல்வி கற்ப்பிக்கும் முறை மாறணும். குழந்தைகளை, மற்ற குழந்தைங்களோட ஒத்துழைச்சு காரியம் செய்யப் பழக்கணும். வளர்ந்த பின்ன சமுதாயத்தில
எல்லா நிலையிலும் ஒத்துழைச்சு காரியம் செய்யப் பழகிடுவாங்க

SurveySan said...

அனானி,
MMDA சரியா வேலை செய்யாத மாதிரிதான் தெரியுது.
right-to-information act எல்லாம் இப்ப கைவசம் இருக்கு. இதை உபயோகித்து, 'ஏன்'னு நெறைய கேள்வி கேக்க ஆரம்பிச்சாலே, சில மாற்றங்கள் வரலாம்.
போரடிக்குதேன்னு வீட்ல தூங்கிக்கிட்டு இருந்தா, ப்ரச்சனை பெருசாயிட்டே இருக்கும்.

//கல்வி கற்ப்பிக்கும் முறை மாறணும். குழந்தைகளை, மற்ற குழந்தைங்களோட ஒத்துழைச்சு காரியம் செய்யப் பழக்கணும். வளர்ந்த பின்ன சமுதாயத்தில
எல்லா நிலையிலும் ஒத்துழைச்சு காரியம் செய்யப் பழகிடுவாங்க
//

நல்ல விஷயம் சொன்னீங்க. நம் பள்ளிகள் சமூக லீடர்கள் உருவாக்குவதிலும் பின் தங்கி இருக்கர மாதிரி தான் தெரியுது.

SurveySan said...

//சரி விடுங்க , உங்க ஃபீலிங்ச்கு ஒரு 100 பின்னூட்டம் வந்து பதில் சொன்னா என்ன பண்ணுவிங்க , சொல்லுங்க, ஒரு சிறிது நேர அல்ப சந்தோஷம் அடட 100 பின்னூடம் என்று! பிறகு, அடுத்த வீக் எண்ட் கு எங்கே போகலாம்னு பிளான் பண்ண போவிங்க?அல்லது அடுத்த பதிவு என்னனு ?அவ்வளவு தானே, //

ஹ்ம். 100 பேருக்கு மேல படிச்சிருக்காங்க. ஆனா 100 பின்னூட்டம் வரல. பதில் தெரியா கேள்வி கேட்டுட்டேன் போல.
நான் அடுத்த வேலைய பாக்கப் போவேன் என்பது மிகச் சரி.
நான் தான் சொல்லிட்டேனே, இயலாமை, கையாலாகாத்தனம், எக்ஸட்ரா எக்ஸட்ரா எல்லாம் இருக்குன்னு. முடிஞ்சவங்க யாராவது ஏதாவது செய்யமாட்டாங்களா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடே பதிவு :)

சதங்கா (Sathanga) said...

சர்வே-சன்,

அருமையான பதிவு என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தத் தலைமுறையினர் சிந்திக்கத் தொடங்கவேண்டும்.

//உடனே இந்தியவில் எல்லா நிலமையும் மாறிடுமா//

சிங்கப்பூர் கண்டிப்பாக உங்களுக்கு தெரிந்த சுத்தத்திற்கு (புறம் + அகம் ... அதாவது ஊரும், அரசியலும்) பெயர் பெற்ற ஒரு நாடு.

சிங்கப்பூர் முப்பது ஆண்டுகள் முன்னால் எப்படி இருந்தது என்று தெரியுமா ?

அதன் இன்றைய வளர்ச்சிக்குக் காரணம் லீ-குவான்-யூ என்னும் மனிதர். அவர் அரசியல்வாதி என்பதும் கவணிக்கத்தக்கது.

எப்படியோ இருந்த சிங்கப்பூரை இப்படிக் கொண்டுவரவேண்டும் என்று அவர் நினைக்க காரணம், சொன்னா அசந்துருவீங்க. 'அப்போதைய' இலங்கையைத் தான் அவர் உதாரணம் கொண்டார். எனது நாட்டையும் இந்த அளவிற்கு வளமையானதாய் ஆக்குவேன் என்று சபதமிட்டு, செய்தும் காண்பித்தார்.

இதைப் பற்றி மேலும் தெரிந்தவர்கள் இங்கே விரிவாகச் சொல்லுங்கள்.

நம்ம ஊர்ல இன்னும் இலவச T.V, Gas கொடுக்கும் அரசியல்வாதிகள் இருக்கும்வரை நம் நாடு திருந்தப் போவதில்லை. இதனால், 'ராவணன் ஆண்டாலும், ராமன் ஆண்டாலும்' எனக்கொரு கவலையில்லே என்கிற மனப்பாண்மை தான் வளரும்.

வயல்களில் கட்டிடம் முளைப்பதைப் பற்றி சில மாதங்கள் முன்பு ஒரு கதை எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது வாசித்துப் பாருங்கள்

யாத்ரீகன் said...

got to see any Shankar movie recently ?!

>>>> இது கண்டிப்பா புரிஞ்சு இருந்தாலும் புரியாத போல தான் நீங்க பேசி ஆகனும் அதான் நிலமை <<<<

very well said Vavval !!!

SurveySan said...

Sathanga,

I do know the good qualities in Singapore. I have worked there for a year. Lee-Kien-yew is an exemplary leader.
too bad, we didnt have anyone like him back home :(

I didnt knew he was inspired by SriLanka. Hope our leaders get inspired by something and start acting soon :)

SurveySan said...

Yathreegan,

//got to see any Shankar movie recently ?! //

haha. too bad, we need movie makers to kindle our thinkings and set right basic amenities and needs. :(

Anonymous said...

//right-to-information act எல்லாம் இப்ப கைவசம் இருக்கு. இதை உபயோகித்து, 'ஏன்'னு நெறைய கேள்வி கேக்க ஆரம்பிச்சாலே, சில மாற்றங்கள் வரலாம்.//

யாராவது ஒரு வலைத்தளம் ஆரம்பிச்சு, மக்களோட குறைகளை பதிவு செய்யலாம். என்ன சொல்ல வராங்க என்பதை
படமாக்கி, அதுக்கு பக்கத்தில ஒரு கவுன்டரயும் வச்சிரலாம். கவுன்டர், எத்தனை நாளுக்கு பிரச்ச்னை அப்படியே இருக்குன்னு
காட்ட. வலைத்தளங்களுக்கு வந்து போறவங்கள ஒரு ஈ - மெயில் அனுப்பச் சொல்லலாம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு.
பொது மக்களுக்கு உதவக்கூடியவங்க விவரங்களையும் வெளியிடலாம். We need people to oraganize, and guide
public to get things done! Net will be a great way
to accomplish things in the near future!

SurveySan said...

//யாராவது ஒரு வலைத்தளம் ஆரம்பிச்சு, மக்களோட குறைகளை பதிவு செய்யலாம். என்ன சொல்ல வராங்க என்பதை
படமாக்கி, அதுக்கு பக்கத்தில ஒரு கவுன்டரயும் வச்சிரலாம்//

good idea. I have been thinking to do something like this.
a collective effort will be necessary to accomplish this. i will start and will find people to pull it.

Anonymous said...

உங்கள் முயற்சியில் வெற்றி பெற மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!!!

SurveySan said...

நன்றி அனானி!

SurveySan said...

சஜெஷன்ஸ்?