ஊர்ல நடத்தப்படர TRP rating எல்லாம், சன் டிவி தான் அதிகம் பாக்கப்படுதுன்னு சொல்லுது.
அது உண்மையாவும் இருக்கலாம்.
ஏன்னா, அவங்க பண்ண, வியாபார தந்திரங்கள் அபாரம்.
கேபிள் விநியோகமும் கையில் இருந்த காலத்தில், சன் நிறுவனம், சில பல இடங்களில், மற்ற சானலின், தரத்தை, குறைத்து ஒளிபரப்பியதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்.
கலைஞர் டிவியும், நமிதா, குஷ்பு துணையுடன், மானாடிக்கொண்டே, ரேட்டிங்கில், தன் பங்கை, பெரிது படுத்திக் கொண்டே இருக்கிறது.
ஊரில் நடக்கும் TRP ரேட்டிங்கில், விஜய் டி.வி, ராஜ் டிவிக்கு மேல இருந்தாலே பெரிய விஷயம்.
விஜயில் காட்டப்படும் பல நிகழ்ச்சிகள், 'sophisticated'ஆக இருப்பதைப் போல் ஒரு தோற்றம் தருவதால், கிராமப் புறங்களில் இதுக்கு பெரிய வரவேற்பு இருக்கரதில்லையாம்.
ஆனால், பதிவர்கள் மத்தியிலும், பதிவு வாசிப்பவர்கள் மத்தியிலும், விஜய் டிவிக்கு பயங்கர வரவேற்ப்பு இருப்பது, எமது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
என்ன இருந்தாலும், நாமெல்லாம், 'sophisticated' பந்தாவாசிகளாச்சே.
எந்த காலத்துல நமக்கு சன் பிடிச்சிருக்கு? :)
நமிதா இருந்தவரைக்கும், கலைஞர் டிவி ஓ.கே.
இப்ப அதுவும் இல்லை.
விஜய் டிவியின்,
நீயா நானா? --- ஆரம்பத்தில் சூப்பரா இருந்துச்சு, இப்ப அவங்களுக்கும் தலைப்பு பஞ்சம் போல. போன வாரம், 70s vs 2000 fashion பத்தி ஒரு நிகழ்ச்சி இருந்தது. அதுல ரெண்டு ஹிப்பீஸ் வந்து, "ரீனா மீனா.." பாட்டுக்கு ஆடினது அமக்களம் ;)
ஜோடி நெம்பர் 1 --- எவ்வளவுதான் டிராமா/அறுவையா இருந்தாலும், ஒக்காந்து ஒரு மணி நேரம் பாக்க வச்சிடறாங்க.
கலக்கப் போவது யாரு -- அருமையான ப்ரோக்ராம்
இப்படிக்கு ரோஸ் -- ஸ்ஸ்ஸ்ஸ். நல்ல மூஜிக் இதுல. எடுத்துக்கர ப்ரச்சனைகளும் நல்ல சுவாரஸ்யமானவை - உ.ம் கிட்னி திரூட்டு, விவாகரத்துப் ப்ரச்சனைகள், etc.. ஆனா, என்ன எழவெடுத்து தலைப்புக்கு ஆளுங்கள கூட்டிக்கிட்டு பேட்டி எடுத்தாலும், எப்படியாவது, "உங்க செக்ஸ் லைஃப் எப்படியிருக்குன்னு" கலீஜா கேக்கரத சகிக்க முடீல. ரோஸ், மாறுங்க!
ரீல் பாதி ரியல் பாதி -- செம்ம நெக்குலு!
இனி, வாக்கெடுப்பின் முடிவுகள் கீழே!
ஹாப்பி வெள்ளி!