வாரணம் ஆயிரமும், ஏமாற்றவில்லை.
(may contain spoilers, so read, at your own risk :) )
ஆனா என்ன ஒரே வித்யாசம்னா, கௌதம் மேனனின், மற்ற படங்களெல்லாம், டிவிடி வாங்கி வச்சுக்கிட்டு, மூணு நாலு மாசத்துக்கு ஒரு தரம், திரும்ப பாத்தாலும் போரடிக்காத வகையைச் சேர்ந்தவை.
வாரணத்தை, அப்படியெல்லாம் திரும்ப திரும்ப பாக்கமுடியாது.
ஒரு மகனுக்கு தந்தையிடமிருந்து கிட்டும், பாஸிடிவ் உந்துதல்களை படம் பிடித்திருக்கும் முயற்சி பாராட்டியே ஆகணும். கௌதம் தன் அப்பாவுக்கு இந்தப் படத்தை 'சமர்ப்பிக்கும்' விதமாய் எடுத்திருக்கிறார். தன் சொந்த வாழ்வின் சில நிகழ்வுகளை திரைக்கதையா அமச்சிருக்காரோ என்னமோ. அதனாலேயே, படத்தின் நீளத்தை குறைக்க முடியாமல் ரொம்பவே திண்டாடிப் போயிருக்கார் போல. நம்மையும் சில நேரங்களில் திண்டாட வச்சிடறாரு.
காஷ்மீரில் மேஜர் சூர்யாவாக ஒரு மிஷனுக்கு தன் குழுவுடன், ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கும்போது, தந்தை மறைந்துவிட்டதாக தொலைபேசி வருகிறது. அப்பொழுது, தன் தந்தையின் அருமை பெருமைகள் அவர் மனதில் அசைபோடும்போது, ஃப்ளாஷ்பேக்கி, நமக்கும் கதை சொல்றாங்க.
அப்பாவும் சூர்யா. அம்மா சிம்ரன்.
'டாடி டாடி' என்ற பாசமான ஸ்கூல் பையனும் சூர்யா.
ஒரு தங்கை.
அழகான குடும்பம். ஆனா, ரொம்ப ஆங்கிலத்தனமான குடும்பம்.
ஏதோ ஆங்கிலோ இண்டியன்ஸ் குடும்பம் மாதிரி குடும்பத்தினர் அனைவரும், ரொம்பவே பீட்டர் விடுவது செம எரிச்சல் தந்தது. நிஜத்தில் சில குடும்பங்கள் அப்படி இருந்தாலும், டமில் படத்தில் அப்படியே அதை காட்டுவது ரொம்ப ஓவர்டோஸா இருந்தது.
அப்பா சூர்யா, அம்மா சிம்ரனின், ஃப்ளாஷ் பேக், நல்லா படம்பிடிக்கப் பட்டிருந்தது. ஆனா, சிம்ரன், காலேஜ் உடையில், சகிக்கலை. சிம்ரனுக்கும் வயசாகும் என்பது, திகிலான உண்மை.
அப்பா சூர்யாவுக்கும், பையன் சூர்யாவுக்கும் இருக்கும் பாசப் பிணைப்பைதான் படத்தின் மையமா சொல்ல ட்ரை பண்ணியிருக்காரு கௌதம். ஆனா, அதுக்குண்டான அழுத்தமான, மனதை பிசையும் காட்சிகள்னு படத்தில் எதையும் சொருகல.
அப்பா சூர்யா, அடிக்கடி, 'life has to go on' தத்துவத்தில், பையன் சூர்யாவுக்கு புத்திமதிகள் அள்ளிவீசுவாரு. சில நேரம் நல்லா இருந்தது. ஆனா, இதுவும் ஓவர்-டோஸ்.
* "டாடி, என்ன அவன் அடிச்சுட்டான் டாடி"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, நீயும் ஒடம்ப வளத்து வச்சிருக்கல்ல, திருப்பி அடின்னு அட்வைஸு.
* "டாடி, I love மேக்னா daddy"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, அவளை தேடிப் பிடிச்சு வீட்டுக்குக் கூட்டிட்டு வான்னு ஒரு அட்வைஸு.
* "டாடி, அவ அமெரிக்கா படிக்கப் போயிட்டா. நான் அமெரிக்கா போய் அவள கூட்டிட்டு வரணும்"ன்னு வந்து நிக்கர பையன் கிட்ட, சரிடா மவனே உடனே போன்னு வாழ்த்தி அனுப்பறாரு.
* "டாடி, அவ செத்துட்டா டாடின்னு" அழுது அலப்பரை பண்ணும் போது, 'life has to go on', திரும்ப வாடான்னு சொல்றாரு.
* "டாடி, I want to join armed forces"னு திரும்ப வந்து நிக்கும்போதும், சரிடா மவனே, இஷ்டப்படி செய்னு திரும்பவும் அனுப்பறாரு.
* "டாடி, I love குத்து ரம்யா"ன்னு வந்து நிக்கும்போதும், அதே ஆமோதித்தல்.
etc.. etc..
ஒரே ஆறுதலான விஷயம், போதைப் பழக்கத்தில் விழும் சூர்யாவுக்கு புத்தி மதிகள் சொல்லுமிடம்.
சூர்யா - அசத்தலோ அசத்தல்!
என்னமா உழைச்சிருக்காரு. கலக்கல் ரகம்.
ஸ்கூல் பையனா வரும்போது, உண்மையாவே சின்னப் பையனா தெரியராரு.
காலேஜ் பையனா கிட்டார் தூக்கிட்டு அலையும்போதும் அம்சமா இருக்காரு.
முதல் காதலி 'மேக்னா' (சமீரா ரெட்டி) கிட்ட ரயிலில் காதலை சொல்லுமிடத்திலும் அசத்தியிருக்காரு. அதுவும், அந்த கிட்டாரில், 'என் இனிய பொன்நிலாவே'ன்னு வாசிச்சுக்கிட்டு அலப்பரை பண்ற காட்சிகளில், துள்ளல் சூர்யா.
காதலியை தேடிக்கிட்டு அமெரிக்கா போயி, அங்கே ஆடல் பாடல் காட்சிகளிலெல்லாம் அமக்களம்.
6-pack சூர்யாவும் மிரட்டறாரு. தாடி வச்ச சூர்யா, மேஜர் சூர்யான்னு பலப் பல பரிணாமங்களில் தன் உழைப்பை அனாயாசமா காட்டியிருக்காரு.
அப்பா சூர்யாவும் ஓ.கே. மேக்கப் உதவியில்லாமல் நல்லாவே சமாளிச்சிருக்காரு.
ஆங்கில டயலாக் தான் நெருடல்.
ஹீரோயின் மேக்னா (sameera reddy) முதல் காட்சியில் பாக்கும்போது, "வேர ஹீரோயினே கிடைக்கலியா இவங்களுக்குன்னு" தோணிச்சு. ஆனா, தொடர்ந்து வரும் காட்சிகளில், ஸ்டைலிஷ்ஷா நடிச்சு அசத்திடறாங்க. நம்மளையும் வசீகரிச்சிடறாங்க. நல்ல ஸ்மைல்.
ஆனா, சூர்யா பக்கத்தில் நிக்கும்போது மட்டும், அரேபிய குதிரை கணக்கான், கில்மாவா இருக்காங்க. இவங்க பக்கத்தில் சூர்யா, 'சோட்டாவா' தெரியறாரு.
இரண்டாவது ஹீரோயின், 'குத்து' ரம்யா, குத்து வாங்கிய ரம்யா மாதிரி இருக்காங்க. பொல்லாதவன் படத்தில் பார்த்த, 'நச்' மிஸ்ஸிங். குறிப்பா, க்ளோஸ்-அப் காட்சிகளில், வசீகரமே இல்லாதிருந்தது. ஆனா, அலட்டிக்காம நடிச்சிருக்காங்க.
முதல் பாதி வரை, ஸ்கூல், காலேஜ், வாழ்க்கையில் முன்னேறுதல், மேக்னா, அமெரிக்கான்னு, படம் சூப்பரா பயணிச்சுது.
ஹாரிஸின் இசையும், ஒலிப்பதிவும், ஒளிப்பதிவும் படத்தை ஒரு லெவலுக்கு கொண்டு போயிடுச்சு.
ஹாரிஸ் பின்னி எடுக்கறாரு.
"அடியே கொல்லுதே", "ஓ சாந்தி சாந்தி" (SPB சரனுக்கு நிறைய பாட்டு கொடுங்கைய்யா சாமிகளா. கலக்கறாரு), "நெச்சுக்குள் பெய்திடும்", "அணல் மேலே பனித்துளி" (
இந்த வரிசையில் ஒரு பெரிய 'அழுக்கு', ஒரு டண்டனக்கா குத்துப் பாட்டு.
அமைதியாக பயணித்துக் கொண்டிருந்த தெளிந்த நீரோடையில் ஒரு கல்லப் போட்ட மாதிரி அந்த பாட்டு.
இடைவேளை வரை தாலாட்டிய காட்சியமைப்புகள், இடைவேளைக்குப் பிறகு, இந்தக் குத்துப் பாட்டுக்கப்பரம் தடம் புரள ஆரம்பிச்சது.
காதலியை இழந்த சூர்யா, குடிக்க ஆரம்பிக்கறாரு. அதிலிருந்து மீள, டெல்லி, காஷ்மீர்னு சுத்தறாராம். இடையில் ஒரு கிட்னாப்பு, ஆர்மீல சேறராருன்ன், செகண்ட் காதலின்னு ஜவ்வ்வா இழுத்திருக்காங்க.
போதைப் பழக்கத்திலிருந்து மீள, ஒரு பாஸிடிவ் விஷயத்தில் நேரத்தை செலவு பண்ணனும்னு ஒரு நல்ல விஷயம் சொல்லியிருந்தாலும், அந்த நல்ல விஷயத்தை, 'நறுக்'னு முடிச்சிருக்கலாம்.
படத்தில் ஒரு 30 நிமிஷம் ஈஸியா குறைச்ச்சிருக்கலாம். குறைச்சிருந்தா, கௌதமின், மற்ற படங்களைப் போல இத்தையும், டிவிடி வாங்கி வச்சு அடிக்கடி பாத்திருக்கலாம்.
பட், விதி வலியது. அவரு 30 நிமிஷத்தை கட் பண்ணலை. நமக்கும் டிவிடி செலவு மிச்சம்.
முப்பது நிமிஷத்தை எப்படி குறைச்சிருக்கலாம்? ( கௌதம் சார், அதிகப் பிரசிங்கத்தனத்தை மன்னிக்க :) )
சீன்1: சூர்யா காஷ்மீர்ல அந்த ஆப்புரேஷன், டிஷ்ஷூம் டிஷ்ஷூம்னு, முடிக்கறாரு ( இதை படத்தின் கடைசியில் வச்சது சொதப்பல். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் முதலில் இப்படி தொடங்கியிருக்கலாம் ) - 15 நிமிஷம்
சீன்2: சக்ஸஸ்ஃபுல்லா முடிச்சிட்டு வந்ததும், அப்பா சூர்யா, இறந்திட்டாருன்னு சேதி வருது. ஃப்ளைட்ல ஊருக்கு திரும்ப வராரு. அப்பா ஃப்ளாஷ்பேக் தொடங்குது - 5 நிமிஷம்
சீன்3: அப்பா சூர்யா, அம்மா சிம்ரன் காட்சிகள், குடும்பம், பாசம், நல்ல அப்பா - 20 நிமிஷம்
சீன்4: பையன் சூர்யா, மொதல் காதலி மேக்னா, பாடல், அட்வைஸு கேட்பது, அமெரிக்கா - 45 நிமிஷம்
இடைவேளை
சீன்5: சோகமான சூர்யா, போதை, அப்பா அட்வைஸு, வழிப் படுத்தல் (கிட்னாப் எல்லாம் தேவையில்லாத சொறுகல்) - 15 நிமிஷம்
சீன்6: 'குத்து' ரம்யாவுடன் செகண்ட் இனிங்க்ஸ், கூட்டுக் குடும்பம், ஜாலிகள், அப்பா பையன் பேரன் பாசக் காட்சிகள் (இதெல்லாம் படத்துல மிஸ்ஸிங். இதனால் தான் அழுத்தம் கம்மி) - 20 நிமிஷம்
சீன்7: அப்பா சூர்யா செத்துப் போயிடறாரு. சீன்2ல் யோசிக்கும் சூர்யா வீட்டுக்கு வந்திடறாரு. ஒரு டச்சிங் சோகப் பாட்டு. முற்றும் - 15 நிமிஷம்.
ஸோ, மொத்தத்தில்,
வாரணம் ஆயிரம் -- 500 சூப்பர்! 300 ஓ.கே! 100 சுமார்! 100 இழுவை!
நீங்க பாத்தாச்சா? வாக்குங்க! (பொட்டி தெரியலன்னா இங்க க்ளிக்கி வாக்குங்க)
கருத்த சொல்லுங்க. தமிழ்மண டூல்பார்ல, வாக்கும் போட மறக்காதிங்க, படிச்சது பிடிச்சிருந்தா ;)