முதலில், 85ஆம் பிறந்த நாள் காணும் நமது தமிழகத்தின் முதல்வர் டாக்டர். கருணாநிதி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
நான் பாலிடிக்ஸ் பற்றி பெரிய அறிவில்லாதவன்.
உள்ளூர் அரசியலின் வரலாறு அவ்வளவா தெரிஞ்சுக்காதவன்.
அரசியல்ல, யார் நல்லவரு யார் கெட்டவருன்னெல்லாம் பெரிய ஆராய்ச்செயெல்லாம் பண்ணி தெரிஞ்சுக்க முயற்சிக்கல.
ஆனா, அரசியலெல்லாம் கவனிக்கணும்.
ஊர்ல என்ன நடக்குதுன்னு உன்னிப்பா கவனிக்கணும்.
இதுவரைக்கும் என்னென்ன எப்பெப்ப எங்கெங்க யார் யார்க்கு எப்படி எப்படியெல்லாம் நடந்ததுன்னும் தெரிஞ்சுக்கணும், புரிஞ்சுக்கணும், அறிஞ்சுக்கணும்.
அப்பதான், எல்லாரும் சேந்து ஒரு நல்ல சமுதயாத்தை உருவாக்க முடியும் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.
நமது இம்சை அரசன் சொன்னது போல், "வரலாறு மிக அவசியம் அமைச்சரே!" (நன்றி லக்கி).
இப்ப விஷயத்துக்கு வாரேன்.
நமது முதல்வர். 85 வயதிலும், அயராது உழைக்கும் பெரியவர்.
இந்து நாளிதழில் கண்ணில் பட்ட, திரு.கருணாநிதியின் அன்றாட schedule'ஐப் பாருங்கள்:
After being sworn in, he has made it a point to come to office in the afternoon too. He spends the evenings at the party office and goes home after 8-30 p.m. on days he does not attend meetings. He has attended office even on Sundays.
Asked why he would not rest, Mr.Karunanidhi repeated Anna's words: "I will rest only after I am gone."
கலக்கறாருல்ல? எப்படிதான் முடியுதோ?
இந்த உந்துதல் எங்கேருந்து ஒரு மனுஷனுக்கு கிடைக்கும்?
அரசியல் சார்பு நம்மில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும்.
என்னோட இன்றைய நிலையில், ஊரை விட்டு வெளியே சுற்ற ஆரம்பித்து சில பல வருடங்கள் ஆகி விட்டதால், எந்த கட்சியின் சார்பும் இல்லாததாய்த்தான் இருக்கிறேன்.
எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காதுன்னு சொல்லி என்ன ஆகப் போகுது?
இப்ப சர்வேக்கு வாரேன்.
85ஆம் பிறந்த நாள் காணும் நமது முதல்வர், அவர் வாழ்வின் மிகப் பெரும்பான்மையை பொதுவிர்க்காகவே வாழ்ந்தவர். அதே சமயம், இவரின் தமிழார்வமும் கலையார்வமும் நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரியணும்னு இல்ல.
ஸோ, கேள்வி என்னென்னா,
உங்களுக்கு 'தலைவர்' கருணாநிதியைப் ரொம்பப் பிடிக்குமா?
'கலைஞர்' கருணாநிதியைப் ரொம்பப் பிடிக்குமா?
'தலைவர்' + 'கலைஞர்' ரெண்டும் பிடிக்குமா?
ரெண்டுக் கருணாநிதியைமும் பிடிக்காதா?
நோ காமெண்ட்ஸா?
யோசிச்சுக் குத்துங்க? குத்திட்டு ஏன் அந்த ஆப்ஷனை குத்தினீங்கன்னு, ஏதாவது அவரின் வாழ்க்கையிலிருந்து மேற்கோள் சொன்னீங்கன்னா, வரலாறு தெரிஞ்சுக்கலாம், எல்லாரும். நன்றி!
again,
Happy B'Day Dr. Karunanidhi sir! Hats off!