recent posts...

Showing posts with label paul potts philosophy. Show all posts
Showing posts with label paul potts philosophy. Show all posts

Wednesday, October 28, 2009

ஆளப் பாத்து முடிவு பண்ணாதே... ஆழமா பாரு!

Looks can be deceivingன்னு சொல்லுவாங்க.
சூப்பர் ஸ்மார்ட்டா இருக்கர ஆளு, சூப்பர் ஹீரோவா இருக்கணும்னு அவசியம் இல்லை.
அதேப் போல, டொக்கா இருக்கர ஆளு, மொக்கையாதான் இருக்கணும்னும் அவசியம் இல்லை.

இந்த தத்துவம் எல்லாம் நமக்கு தெரிஞ்சாலும், புரிஞ்சாலும், நாமளும் கூட இந்த வெளித் தோற்றத்தை கண்டுதான் ஒரு மனிதரை கணக்கிடுகிறோம்.

ஆ, இவன் இப்படி இருக்கானே,இவன் கண்டிப்பா அப்படிதான்.
ஆஹா, இவன் அப்படி இருக்கானே, இவன் கண்டிப்பா இப்படிதான், இருப்பான்னு நாம ஒரு முன் முடிவு செஞ்சுட்டுத்தான் ஒரு ஆளை அணுகுவோம்.

அவன் உண்மையான குணாதிசியம் என்ன, அவன் திறமை என்ன, அவனால் முடிவது என்னன்னெல்லாம் பின்னாலதான் ஆராய்வோம்.

ஆனா, இப்படி இருக்கரதுக்கு,அந்த் ஆளும் ஒரு காரணமா இருக்கான். ஆள் பாதி ஆடை பாதிங்கர கணக்கின் படி, யாரு, தங்கள் வசீகரத்தை ஏத்தி காட்டறாங்களோ, அவங்களுக்கு எப்பவுமே தனிக் கவனம் கிட்டுவது உண்டு.

ஆனா, என்ன வசீகரிச்சாலும், 'டொக்கா'தான் இருப்போங்கர ஆளுங்க என்னதான் பண்ணுவாங்க?
ஸோ, அவங்க வசீகரச்சாதான் நான் கவனிப்பேன், நல்ல விதமா நடத்துவேன் என்ற அளவுகோலிலிருந்து வெளிய வரப் பாருங்க.

'அன்பே சிவ'த்துல, கோட்டு டை போட்டுக்கிட்டு வர உத்தமன் மாதிரி ஆளுங்களும் இருப்பாங்க, அதே சமயம், நல்லது மட்டுமே செய்யத் தெரிஞ்ச, 'அன்பே சிவம்' சொறி நாய் மாதிரியும் ஆளுங்க இருப்பாங்க.

ஆழமா பாத்து, ஒரு ஆளை மதிக்கப் பழகுங்க.

மேலோட்ட தோற்றத்தைப் பார்த்தல்ல.

"அடங்கு! இன்னாத்துக்கு இப்ப இவ்ளோ பில்டப்பு?"ன்னு மனசுக்குள்ள நெனைக்கும் வாசகரே, "சர்வேசன்னாலே மொக்கை" என்ற முன் முடிவை மாத்துங்க, கொஞ்சம் ஆழமா படிங்க ;)

யூ-ட்யூபில் வழக்கம் போல் எத்தையோ பாக்கப் போய், எத்தை எத்தையோ பார்த்து, கடைசியில் இத்தைப் பார்த்தேன்.
ப்ரிட்டானிய பாடல் போட்டி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்று பாடிய Paul Pottsன் வீடியோ கண்ணில் பட்டது.

அவர் முகம் பார்த்ததும், "ஹையா, ஏதோ அபச்வரமா பாடி, காமெடியா இருக்கப் போவுது ஜாலி"ன்னு முன் முடிவு பண்ணி வீடியோவ பார்க்க ஆரம்பிச்சேன்.

மனுஷன் பாடினது ஓப்ரா.

நீங்களும் மொதல்ல வீடியோ பாருங்க, அப்பரம் மேலப் படிக்கலாம்.




பாத்தாச்சா? மனசுக்குள்ள ஒரு கனமான பீலிங் வரல?

எனக்கு இந்த ஓப்ரா வகை பாடல்கள் மேல் பெரிய ஈடுபாடில்லை, ஆனாலும், முன்னொரு பதிவில் சொல்லியிருந்த படி, சில பாடல்கள் ரொம்பவே வசீகரிக்கும் டைப்பு, இந்த ஓப்ராவில்.

இந்த Paul Potts பாடினத கேட்டுட்டு, மூச்சு பேச்சு வரல எனக்கு. கண்ணுல கண்ட மேனிக்கு தண்ணி வரும் அபாயமே வந்துடுச்சுன்னா பாருங்க.

மொபைல் சேல்ஸ்மேனுக்கு உள்ள என்னா தெறமைய்யா?

காலக் காட்டு பாலு! அசத்திட்டீங்க சாரே!

மக்கள்ஸே, தோற்றத்தை பார்த்து ஏமாறாதீர்.

தீர ஆராய்ந்த பின்னேரே ஒருவரைப் பற்றி எந்த முடிவுக்கும் வரவும்.

வாழ்க Paul Potts! very inspirational!