recent posts...

Showing posts with label news செய்தி. Show all posts
Showing posts with label news செய்தி. Show all posts

Sunday, April 27, 2008

2007's winners, losers, performers, etc...

1) 2007ல் அதிக லாபமீட்டிய ஸ்தாபனம் எண்ணெய் வர்த்தகம் செய்யும் Exxon Oil கம்பெனியாம்.
லாபம் எம்புட்டு தெரியுமா? $40.61 billion.
சும்மாவா, ஒரு gallon $4.00 க்கு விக்கரானுங்க?

அதிக லாபமீட்டிய மற்ற ஸ்தாபனங்கள் இங்க போய் பாருங்க.

2) 2007ல் அதிக அளவில் நஷ்டமடைந்த நிறுவனம் General Motors. அடைந்த நட்டம் $38.73 billion.
அடேங்கப்பா, ஐயோ பாவம். இவங்களும் மாத்தி மாத்தி என்னென்னமோ பண்ணிப் பாக்கராங்க, ஒண்ணும் வேலைக்காக மாட்ரது.
இவங்க ஃபாக்டரி இருக்கர டெட்ராய்ட் மாகாணத்தில், வேலை இழந்த மக்கள், அவங்க வீட்ட அப்படியே அம்போன்னு விட்டு ஊர விட்டு போயிடறாங்களாம்.

அதிக நட்டமடைந்த மற்ற நிறுவனங்கள் இங்க போய் பாருங்க.

3) பங்குவர்த்தம் செய்யறவங்களா நீங்க? Stocks எல்லாம் வாங்கி விக்கரதுண்டா? ஒக்காந்த எடத்துலேருந்தே லட்சங்கள் ஈட்டவும், சம்பாதித்த லட்சங்களை ஒரே நாளில் இழக்கவும், இந்த பங்குவர்த்தகத்தின் மூலம் செய்ய முடியும்.
2007ல் அமெரிக்க பங்குச்சந்தையில் பலமடங்கு லாபம் ஈட்டிக் கொடுத்த stock எது தெரியுமா?
Mosaic என்ற நிறுவனம் தான் அது.
341.7% லாபம் கொடுத்ததாம்.
(இந்த வருஷமும் இப்படியே கொடுக்குமான்னு தெரிஞ்சவங்க யாராச்சும் சொல்லிட்டுப் போங்க ;) )
இந்த மாதிரி பல மடங்கு அள்ளி வழங்கிய மற்ற stocks என்னதுன்னு தெரிஞ்சுக்க இங்க போங்க.

உங்களுக்கு தெரிஞ்ச 2007 பெரிய மேட்டர் ஏதாவது இருந்தா சொல்லிட்டுப் போங்க.