recent posts...

Showing posts with label happy friday corporate lessons தத்துவம். Show all posts
Showing posts with label happy friday corporate lessons தத்துவம். Show all posts

Thursday, January 14, 2010

தத்துவம்ப்பா...



1) ஒரு ஊர்ல ஒரு முயல் இருந்துச்சாம். சதா சர்வ காலமும் ஒரு மரத்த சுத்தி இருக்கர புல் வெளீல மேஞ்சுக்கினே இருக்குமாம். நாள் முழுக்க அங்கையும் இங்கையும் ஓடி தின்னாதான், ஓரளவுக்காவது வயிறு நிரம்புமாம்.
சாயங்காலம் ஆனா, நாள் முழுக்க நடந்த களைப்புல அக்கடான்னு வானத்தை பாத்துக்கிட்டு படுக்குமாம்.
அந்த மரத்துக்குக்கு மேல ஒரு காக்கா இருந்துச்சாம். அது எப்பப் பாத்தாலும், ஒன்னியும் பண்ணாம, மரக் கிளைல ஜாலியா ஒக்காந்துக்கினே இருக்குமாம்.
ஒரு நாள் காக்காவ பாத்த முயல், "காக்கா நீ மட்டும் ஒன்னியும் பண்ணாம ஒக்காந்த எடத்துலையே ஒக்காந்துக்கினு இருக்கியே, நானும் அப்படி வெட்டியா ஒக்காரலாமா"ன்னு.
காக்கா "ஓ, தாராளமா இரேன்"னு சொல்லிச்சாம்.
முயலும், "மரத்துக்குக் கீழ ஒய்யாரமா அக்கடான்னு ஒக்காந்துக்கிச்சாம்".
கொஞ்ச நேரத்துல எல்லாம், அந்தப் பக்கமா வந்த நரி, முயலை லபக்னு கவ்விக்கிட்டு போயிடுச்சாம்.

கதை கூறும் கருத்ஸ்?: வெட்டியா ஒக்காரணும்னா, பெரிய பதவில இருக்கணும். உங்க மேனேஜர் வெட்டியா இருக்கலாம். நீங்க இருக்கக் கூடாது.
Moral of the story: To be sitting and doing nothing, you must be sitting very high up.

2) ஒரு கோழி மாடு கிட்ட கேட்டுதாம், "மாடு, எனக்கு அந்த மரத்து மேல ஏறி உச்சில போயி நிக்கணும்"னு. மாடு சொல்லிச்சாம், "அதுக்கென்ன, சாணத்தைச் (B.S bull shit) சாப்பிட்டா, உனக்கு தேவையான சத்து கெடைக்கும், அப்பாலிக்கா மரத்துக்கு மேல சட்டுனு ஏறிடலாம்"னு.
கோழியும், மாட்டு சாணத்தை தின்னுட்டு, கிடு கிடுன்னு மரத்துக்கு உச்சில போயி ஒக்காந்துக்குச்சாம்.
அந்த நேரம் பாத்து அங்க வந்த கழுகு, கோழிய லபக்னு தூக்கிக்கினு போயிடுச்சாம்.

கதை கூறும் கருத்ஸ்?: B.S கொஞ்ச காலத்துக்கு ஒதவி, உங்கள பெரிய பதவியில் ஒக்கார வைக்குமாம். ஆனா, ரொம்ப காலம், வெறும் B.Sனே இருந்தீங்கன்னா, அங்க நீங்க ரொம்ப காலம் தாக்குப் பிடிக்க முடியாதாம்.
Moral of the story: B.S. might get you to the top, but it won't keep you there.

ஓ,கே? இப்ப இதையும் படிங்க, சந்தோஷமா இருங்க. ஹாப்பி வெள்ளி!
http://miami.craigslist.org/mdc/mis/1539838256.html