recent posts...

Showing posts with label enthiran movie review tamil cinema திரை விமர்சனம் திரைப் பார்வை எந்திரன் சினிமா. Show all posts
Showing posts with label enthiran movie review tamil cinema திரை விமர்சனம் திரைப் பார்வை எந்திரன் சினிமா. Show all posts

Saturday, October 02, 2010

எந்திரன்


நானும் ரஜினி ரசிகனாக மாறியது, பாட்ஷா படத்தில் வரும் "எனக்கு இன்னோர் பேரும் இருக்கு"ன்னு கல்லூரி முதல்வரிடம் ரஜினி சொன்னதும், அப்படியே கேமரா பின்னால் நகர்ந்து, கண்ணாடி ரூமுக்குள் இருவரும் பேசிக் கொள்வதைக் காட்டும் காட்சி. பின்னணி இசையில், 'பாட்ஷா பாட்ஷா'ன்னு தேவா பின்னியிருப்பாரு.

எனக்கே புல்லரிச்சுது அந்த காட்சியின் போதுன்னா, ரஜினி தீவிர ரசிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும்னு புரிஞ்சுது.

என் பார்வையில், ரஜினி நல்ல நடிகரெல்லாம் கிடையாது. யதார்த்தமான நடிப்பெல்லாம் நடிச்சுப் பாத்ததா ஞாபகமே இல்லை. டைரக்டர் சொல்வதை செயற்கைத்தனமா நடிச்சுக் காண்பிப்பதைப் போல்தான் தெரியும். (சந்திரமுகியில் ரொம்பவே அப்பட்டமாய்).

ஆனா, ரஜினி என்ற பிரமாண்டத்தின் முன், எல்லா நெளிவு சுளிவுகளும் காணாமல் போய், ஒரு ஜாலியான ரசிப்புத்தன்மை தானா வந்திடும். ஒரு ஈர்ப்பு இருக்கும்.
அவரு பத்து பேரை அடிச்சு, 'கண்ணாஆஆ'ன்னு பன்ச் டயலாக் பேசி, வெறுப்பேற்றும் வில்லனை அடிச்சு ஒதச்சு, நாட்டுக்கு ஏதாவது பெருசா நல்லது செய்யரமாதிரி படம் வந்தாதான், அது ரஜினி படத்துக்கு உண்டான தன்மையுடன் இருக்கும். நமக்கும், நாம் எதிர்பார்க்கும் ரஜினி போதை கிட்டும்.

எந்திரனுக்கு கொடுக்கப்பட்ட பில்ட்-அப்புகள், ட்ரெயிலர், ரஹ்மானின் பாட்டு, இதையெல்லாம் பார்க்கும்போதே, இது ரஜினி படமாக இருக்காது என்று புரிந்தது.

படமும், அப்படியே அமைந்து போனது.

ஒரு விநாடி ரஜினியை மறந்துட்டு, எந்திரன் படத்தை மட்டும் பாத்தீங்கன்னா, படம் மொத்த குடும்பத்துக்கான ஒரு நல்ல sci-fi பொழுதுபோக்கு சித்திரம்.
பிரமாண்டமான கிராஃபிக்ஸ். கடைசி 20 நிமிடங்கள் அதகளம்.

ஆனா, "இந்தியாவிலேயே இதுவரை யாரும் செய்திராத" போன்ற பில்ட் அப்பெல்லாம் ஒத்துக்க முடியாதது. ஏன்னா, படம் முடிஞ்சு பெயர் போட ஆரம்பிச்சாங்க. அதுல இந்தியப் பெயர்கள் வருவதை விரல் விட்டு எண்ணிடலாம் போலருக்கு. 165கோடி செலவு செஞ்சிருக்காங்களாம். அது எல்லாம் ஏதோ ஒரு ஹாலிவுட் கிராஃபிக்ஸ் கொம்பேனிக்குத்தான் மொய் எழுதியிருக்காங்க போலருக்கு.

ஷங்கர் & teamன் கற்பனைத்திறனுக்கு ஒரு சபாஷ் சொல்லலாம். ரோபோக்களை வைத்து மிரட்டி இருக்கிறார்கள். குறிப்பாக, உள்ளூர் ரவுடிகள் சுற்றி நிற்கும்போது அவர்களின் கத்தி கபடா எல்லாம் ரோபோ ரஜினியின் மேல் ஒட்டி, அவர் ஒரு மாரியம்மன் லுக்குக்கு மாறுவார். பிரமாதமான சீன். ரோபோக்கள் பாம்பாக உருவெடுத்து கபளீகரம் செய்ததும், உருண்டையாக மாறி உலுக்குவதும் கலக்கல். ரோபோ நடை பயில்வதும், டான்ஸ், சண்டை எல்லாம் பண்ணிக் காட்டும் காட்சியும், ஒரு பெருமிதத்தை தந்தது. 'சாதிச்சுட்டாங்கய்யா'ன்னு ஒரு ஃபீல் வந்தது. ஆனா, அதுவும், 'புஸ்ஸாயிடுச்சு' மேலே சொன்ன காரணத்தினால்.

ஆனால், ஷங்கரின் சில கற்பனை சலிப்பைத் தந்தது, 'காதல் ரத்து' செய்யும் ரஜினியையும் ஐஸ்வர்யாவையும் பாத்து. ஸ்ஸ்ஸ். அல்பமா இருந்தது. அதுவும், படத்தின் ஆரம்பத்திலேயே இந்த சீன் வந்ததும், ஐயையோ குடுத்த $20 முதலாகாம போயிடுமோன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். ஆனா, அப்பாலிக்கா, இந்த மாத்ரி அல்ப்பத்தனங்கள் படத்தில் இல்லாம பாத்துக்கிட்டாரு.
நடூல ஒரு கொசு கிராஃபிக்ஸும் கொஞ்சம் இம்சை. ஆனால், அதன் மூலம் ஏதோ 'மெசேஜ்' சொல்ல ஆரம்பிச்சாரு, ஆனா, அதுவும் இம்ப்ரெஸ்ஸிவ்வா இல்லை.

இரண்டு கெட்டப்பில் ரஜினி. ரோபோட்டிக் ப்ரொஃபஸர் ஒருத்தரு. வயசு நல்லாவே தெரிய ஆரம்பிச்சிடுது இந்த கெட்டப்பில். மெச்சும்படியாக ஒன்னியும் சொல்வதற்கில்லை.

ரோபோ ரஜினி அமக்களப்படுத்தியிருக்காரு. ஆனா, இது அவருதானா? டூப்புக்கு மாஸ்க் போட்டு எடுத்திருக்காங்களான்னு, பல சீன்களில் 'கேள்வி' எழுகிறது. சண்டையில் கண்டிப்பா டூப் போட்டிருப்பாங்க. மத்த காட்சிகளிலும் கூட, ரோபோ ரஜினியின் முகத்தில் வியர்வை எப்பவும் இருக்கர மாதிரி எடுத்திருக்காங்க? ஏன் வேர்த்துக்கிட்டே இருக்குது ரோபோவுக்கு? ரோபோவுக்கு வேற்க்குமா ஷங்கர் ஜி?

வில்லனாக மாறும் ரோபோ ரஜினி மட்டுமே கண்ணில் நிற்கிறார். பழைய வில்லன் ரஜினியின் குதூகலம் இருந்தது அந்த காட்சிகளைப் பார்க்கும்போது. நல்லா பண்ணியிருக்காரு.

ஐஷ்வர்யா வயசு தெரிஞ்சாலும் அழகா இருக்காங்க. ஆனா, ரொம்ப 'gap' விட்டுத்தான் ஹீரோவோட நடிச்சிருக்காங்க. பாடல்களில் ஆட்டமெல்லாம் ரொம்பவே அழகு. ஐஸ் ஐஸ்தான்.
படத்தில் இவர்களைத் தவிர, சந்தானம், கருணாஸ், டானி டென்ஸோங்கப்பா மட்டுமே. ரஜினி படத்தில் வரும் பெரிய பட்டாளம் இதில் மிஸ்ஸிங்க். இவங்க நாலு பேரை வச்சே படத்தை முடிச்சிடராங்க. ஆனா, ரோபோக்கள் நிறைந்திருப்பதால், அது பெரிய மைனஸ்ஸா தெரியலை.

பாடல்களும், பின்னணி இசையும் நல்லாவே அமைஞ்சிருக்கு.
ரெசூல் பூக்குட்டி, (பழசிராஜா போல் இதிலும்) டங்குவாரு கிழியர அளவுக்கு வால்யூம் கூட்டிவிட்டுட்டாரு, கடைசி 20 நிமிட டிஷூம் டிஷூம் காட்சிகளில்.

செட்டும், கிராஃபிக்ஸும், உடை அலங்காரமும், ரிச்சாக இருந்தது.

கண்டிப்பாய் ஒரு தபா பார்க்க வேண்டிய படம்தான்.
premium $s குடுத்து பாக்கணுமான்னு கேட்டீங்கன்னா, பிரீமியம் கொடுத்து முதல் சில நாட்களில் பார்த்தால், ரசிகர் பட்டாளமுடன் உற்சாகமாய் காணும் ஃபீலிங்க் கிட்டும். அது அவசியம் இல்லன்னா, ரெண்டு மூணு வாரம் வெயிட்டீஸ்.

ஆனா, இது ஒரு 'மைல்'கல்னு, இன்னும் பலரும், இந்த மைல் கல்லை கடக்க நினைத்தால், நமக்கு அது பெரிய துரதிர்ஷ்டம். sci-fi படங்கள் எல்லாம் இங்கிலிபீஷ்ல வருஷத்துக்கு பத்து வருது. தமிழில், இம்மாம் பெரிய பட்ஜெட் போட்டு படங்கள் எடுக்க முடியும்னா, வேற நல்ல சப்ஜெக்ட்டா, காலத்துக்கும் மனசுல நிக்கர மாதிரி ஏதாவது யோசிச்சு எடுத்தா பெட்டர். இல்ல, இப்படித்தான் எடுக்கணும்னா, டெக்னாலிஜியை உள்ளூரில் உருவாக்கி, அதை உபயோகித்து எடுக்க முயலலாம். outsourcing வேண்டாம்.

படத்தை பார்க்கும் அனுபவம், படத்தை விட அருமையாய் இருந்தது. தியேட்டரில் 'தலைவா' குரல்களும், ஆட்டமும் , பாட்டமும், அட்டகாசம்.

எந்திரன் - very successfully implemented outsourced project.

எங்க ஊர் தியேட்டரில் நடந்த எந்திரன் திருவிழா: (டான்ஸு, கவுஜைன்னு அமக்களப்படுத்தியிருக்காங்க)