recent posts...

Showing posts with label விமர்சனம் Kalloori movie review. Show all posts
Showing posts with label விமர்சனம் Kalloori movie review. Show all posts

Monday, December 17, 2007

கல்லூரி - திரை விமர்சனம்

'காதல்' படம் தந்த பாலாஜி சக்திவேலின் படமென்பதால் ஒரு பெரிய எதிர்பார்ப்புடன் தான் படம் பார்க்க துவங்கினேன்.

கல்லூரின்னா, நமக்கு தெரிஞ்சதெல்லாம், 'பங்க்' முடியுடன் வரும் இளவட்டங்களின் கெட்டாட்டங்கள்தான்.

பாலாஜி சக்திவேலின் கல்லூரியில், மண்மணம் மாறாத, கிராமத்து முகங்கள்தான் மாணவர்கள்.
பள்ளிப் பருவத்திலேருந்தே ஒண்ணா படிக்கும் கும்பல் ஒண்ணு, ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் சேர்ந்து படிப்பை தொடர்கின்றனர்.
கும்பலில் ஆண்களும், பெண்களும் உண்டு. எல்லோரும் மிகவும் ஏழ்மையில் வாடுபவர்கள். செருப்பு தைக்கும் தந்தை, கல்லுடைக்கும் ஒரு தந்தை, ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், இப்படிப்பட்ட குடும்ப சூழல்.

சின்ன வயசிலேருந்தே இவங்கள்ளாம் நண்பர்கள் என்பதும், இவங்களுக்குள் ரொம்ப இருக்கமான நட்பு இருக்கு என்பதும், இதுக்குள்ள காதல் கீதல் எல்லாம் பத்திக்காது என்பதும், படம் ஆரம்பித்த 10 நிமிஷத்துலயே அழகா புரிய வைக்கறாரு டைரக்டர்.

இவங்ளுக்குள்ள இருக்கர ஆழமான நட்ப பாக்கும்போது, பெரிய ஏக்கம், நம்ம மனசுக்குள்ள உருவாகுது. நம்மளும் படிச்சோம், நண்பர்கள் எல்லாம் இருந்தாங்க, ஆனா இந்த மாதிரி 'உயிர்' தோழமை இல்லன்னே நெனைக்கறேன்.

எல்லாம் புதுமுக இளசுகள். என்னமா நடிச்சிருக்காங்க.

அதுவும், 'கயல்' என்ற பெயரில் வரும் அந்த பெண், அப்படியே வாழ்ந்திருக்காங்க.

மதுரை 'ஸ்லாங்' பேசும், காமெடியினும் (ரமேஷ்), நல்லா கலக்கியிருக்காரு. ஆனா, அவரு அப்படி வேணும்னே பேசர மாதிரி ஒரு நெருடல். நல்ல எதிர்காலம் இருக்கு இவருக்கு.

ஹீரோ-முத்து. நல்ல யதார்த்த நடிப்பு. ஓட்டப்பந்தைய வீரரா வராரு.

இந்த கிராமத்து நண்பர்களின் இடையில், வெள்ளை-வெளேர் பெங்களூரு பைங்கிளி(ஷோபனா) ஒண்ணும் புதுசா சேராங்க. ஆரம்பத்தில் தனியா இருந்தாலும், இவர்களின் நட்பு வளையத்துக்குள் அந்த பொண்ணும் ஐக்கியமாகும்.
சும்மா சொல்லக் கூடாது. சில முகங்கள் பார்த்தவுடன் நமக்கு ரொம்பவே பிடிச்சுப் போகும். அந்த வகை முகம் நம்ம ஹீரோயினுக்கு. விரசமில்லா அழகு முகம்.

அப்பரம் என்ன, ஹீரோக்கும் இந்த பொண்ண புடிக்கும். பொண்ணுக்கும் ஹீரோவ பிடிக்கும். ஆனா, நண்பர்களுக்கு தெரிஞ்சா என்ன நெனைப்பாங்கன்னு ரெண்டு பேரும் குழப்பத்தில் இருப்பாங்க.

இடையில், ஹீரோயின், ஹீரோவ பாக்க, கல் குவாரி இருக்கும் ஒரு எடத்துக்கு போற மாதிரி சீன்.
அந்த எடம் பாக்கும்போதும், அங்க வேலை செய்யர மக்கள பாக்கும்போதும், ஒரு நிமிஷம், நம்ம மனசு கனமாயிடுது. எப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்கு, ஒரு வேள சாப்பாட்டுக்கு?

ஹீரோவோட தங்கச்சியா வர பொண்ணு, ரெண்டு நிமிஷம்தான் வராங்க. அடேங்கப்பா, என்ன யதார்த்தமா பேசராங்க.
"நானும் படிச்சேன். ஆனா, அண்ணன படிக்க வெக்கணும்னு என்ன நிறுத்திட்டாரு எங்கப்பா".
"லாரியில போக சொல்லோ கீழ வீந்து எங்கம்மா செத்து போச்சு"ன்னு சொல்லும்.
படத்தோட ரொம்ப ஒன்றிப்போயிட்டீங்கன்னா, மனச அறுத்துடும் காட்சியமைப்பு.

எந்த காட்சியும் ஒரு தொய்வில்லாமல் அழகா நகருது.

பாடல்கள்? இசை ஜோஷ்வா ஸ்ரீதர். காதல் அளவுக்கு பாடல்களில் பெரிய தாக்கம் ஏற்படவில்லை.
ஜூலைப் பாட்டு முணுமுணுக்க வைத்தது.

ஹீரோ ஹீரோயின் காதல், வெளியில் தெரியும் தருணம், ஆஹா அழகா முடியப் போகுதுடா படம்னு, ஜாலியானா, ஒரு நினைச்சே பாக்காத திருப்பத்த உள்ள கொண்டுவராரு கதையில.

அதுக்கப்பரம் என்ன?

இந்த நட்பு வளையத்தில் பின்னிப் பிணைந்து, பயணமாகும் நாம், இந்த திடீர் திருப்பத்தால் திக்குமுக்காடி போய், படம் முடிந்தும் எழுந்து வெளியில் நகர முடியாமல், பெயர் போட்டு முடியும் வரை அமைதியா ஒக்காந்து ஸ்க்ரீனையே பாத்துக்கிட்டு இருக்கோம்.

கல்லூரி - அருமையான படம். குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து ஒரு நெளிவு சுளிவில்லாமல் பார்க்கக்கூடிய அற்புதப் படம்.

'காதல்' அளவுக்கு இருக்கா?
அது வேறு கதைக் களம், இது வேறு கதைக் களம்.
அது அருமை. இதுவும் அருமை!

கண்டிப்பா பாருங்க!

பாலாஜி ஷக்திவேல், இதே மாதிரி, மனதைத் தொடும் படங்களைத் தொடர்ந்து கொடுங்கள்.
செலவும் கம்மி, உங்க பேரும் நெலச்சு நிக்கும்.



:)