இதோ போடறேன், இதோ போடறேன்னு சொல்லி இழுத்து, ஒரு வழியா தனது குறும் படத்தை வலை ஏத்திட்டாரு நமது சக பதிவர் உண்மைத் தமிழன் அவர்கள்.
புனிதப் போர் என்ற தலைப்பில் மிக நீநீநீநீண்ண்ண்ண்ட ஒரு குறும் படம்.
ஆமாங்க, கிட்டத்தட்ட 12 நிமிஷம் ஓடுது.
உ.தமிழனின் பதிவுகள் படிச்சிருந்தீங்கன்னா, அவரைப் பற்றி ஓரளவுக்கு ஒரு புரிதல் கிட்டும்.
எல்லாத்தையும், பெரூரூரூசா அனுபவிச்சு ஆராஞ்சு சொல்லும் வல்லமை கொண்டவரு.
இவரது அஞ்சாதே விமர்சனம் படித்தவர்களுக்கு இது புரிந்திருக்கும். அஞ்சாதே பதிவு எழுதி முடித்து, பப்ளிஷ் செய்யும்போது, "insufficient disk space" error வந்ததாக ப்ளாகர் அலுவலகத்தில் பரவலாக ஒரு பேச்சு உண்டு.
அப்படிப்பட்ட உ.தமிழன், குறும் படத்தையும் பெறும் படமாக எடுத்தது கொஞ்சம் இம்சை.
குறும்படத்தின் சிறப்பே, ஐந்தாறு நிமிடத்தில், விறு விறு என்று காட்டி, சுவாரஸ்யமாக முடிப்பது;
பு.போரில், ஆரம்ப 5 செக்கண்டுகள், சுவாரஸ்யமா, முழு முகம் தெரியா ஒரு 'வில்லனின்' பேச்சோடு தொடங்கியது;
ஆனா தொடர்ந்து, ஒரு ஏழெட்டு வில்லன்ஸ், வரிசையா பேசினது டார்ச்சர் ஆயிடுச்சு. ( ஏழெட்டா, இல்ல பத்து பன்னெண்டான்னு தெரியல, நடுவுல, ஓட்டிட்டேன் :) )
கடைசியில் முடியும் 'திருப்புமுனையும்' மொக்கைதான்.
இந்த மொக்கைத் தனம், நம்மை போன்ற கும்மிகளின் மத்தியில் சில காலமாய் புழங்குவதால் இருக்கலாமென்று ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், இது இவரின் முதல் முயற்சி என்று நினைக்கிறேன்.
முதல் முயற்சியே, மக்கள் தொலைக்காட்சியில் தேர்வு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது அவருக்கும் பெருமை, அவரால் நமக்கும் பெருமை. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் உண்மைத் தமிழன்!
பு.போரினால் விளைந்த இன்னொரு பெருமை, தமிழ் திரை உலகிற்கு (அட்லீஸ்ட் குறு உலகிர்க்கு), உ.தமிழனால், ஏழெட்டு (பத்து, பன்னெண்டா?) புதிய வில்லன்கள் கிடைத்துள்ளனர்.
பெருமாள் பிச்சையையும், காதல் அப்பாவையும், ஆதிஷ் வித்யார்தி, பிரகாஷ் ராஜ் எல்லாம் பாத்து அலுத்துடுச்சு, பு.போரில் இருந்து, வில்லனுங்களை எடுத்துக் கொள்ளுமாறு, திரை உலகை, பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
பதிவுலகில் இருந்து ஏதாவது ஒரு பதிவருக்கு, அந்த கடைசியில் பேசும் ஹீரோவாக, சான்ஸ் கொடுக்காததர்க்கு என் கண்டனங்களைப் பதிகிறேன்.
உண்மைத் தமிழன், அடிச்சு ஆடுங்க!
அடுத்த படத்துக்கு அட்வான்ஸ் சீக்கிரம் கொடுத்து விடுகிறேன்.
ஒரே கண்டிஷன்:
நம்ம KRS ஹீரோவாகவும், கோவி கண்ணன் வில்லனாகவும், தருமி ஹீரோக்கு அப்பாவாகவும், நடிகை ஜெயப்ரதா ஹீரோவின் அம்மாவாகவும், லக்கி காமெடியனாகவும், வெட்டிப்பயல் கதையும், ஜ்யோவ்ராம் சுந்தர் வசனமும், CVR போட்டோகிராபியும் வச்சு எடுக்கணும். உங்க பேர டைரக்ட்டரா போட்டுக்கங்க, ஆனா, வேற யாரையாவது வச்சு தான் படம் எடுக்கணும். சொல்லிப்புட்டேன் ;)
பி.கு: சும்மா டமாஸுக்கு. மெய்யாலுமே, வாழ்த்துக்கள் உ.தமிழன். எல்லாம் ஒரு வெளம்பரந்தேன்!