recent posts...

Showing posts with label மொக்கை guitar hobby. Show all posts
Showing posts with label மொக்கை guitar hobby. Show all posts

Thursday, April 03, 2008

என்றாவது ஒரு நாள் இப்படி...

சின்ன வயதில் செய்ய முடியாத பல விஷயங்களில் ஒன்று இசை சம்பந்தப்பட்ட எதையும் கத்துக்காதது. இசை ஆர்வம் இருந்திருந்தாலும் அதற்கான நேரமும், வசதியும் இல்லாதிருந்தது.
நேரம்/வசதி இல்லைன்னு சொல்றத விட, இந்த விஷயங்களெல்லாம் extra-curricular ஆக கற்றுக் கொள்ள முடியும் என்ற விவரமே இல்லாமதான் இருந்தது.
நமக்குத் தெரிஞ்ச extra-curricular எல்லாம், பள்ளி முடிந்ததும் கும்பலாய் விளையாடும் கால்பந்தாட்டமும், கிரிக்கட்டும் தான்.

இப்ப நேரம் இருக்கு, வசதி இருக்கு, கத்துக்க தான் சிரமமா இருக்கு. கை கால்கள் நெனச்ச மாதிரி வளைய மாட்றது.
சமீபத்தில், கிட்டார் கத்துக்க முயற்சி எடுத்துள்ளேன். பாக்கரதுக்கு எவ்ளோ சுலபமா இருக்கு, வாசிக்க சிரமம்தேன். ஒரு chord இடது கை விரல்களில் சேர்த்துப் புடிச்சு வலது கையில் மீட்டுவதுற்குள் தாவு தீருது.

ஆனாலும், வுட்ரமாட்டோம்ல. என்றாவது ஒரு நாள், இவர மாதிரி, நம்ம பீத்தோவன் அண்ணாச்சியின் Fur Elise வை கிட்டாரில் வாசிக்காமல், இந்தக் கட்டை அடங்காது என்று சூளுரைக்கிறேன் ;)



இது நம்ம கிட்டாரு.



ஹாப்பி வெள்ளி!