விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் உண்ணா-நிலை (உண்ணாவிரதம்) பற்றி அறிந்திருப்பீர்கள்.
சாகும்-வரை உண்ணாநிலை இருக்கப் போகிறேன் என்று அறிவித்தவர், நாலு நாட்கள் முடிந்ததும், தனது சகாக்களின் தீவிர வேண்டுதலின் காரணத்தினாலும், ராமதாசின் அறிவுரைப் படியும், தனது உண்ணா நிலையை முடித்துக் கொண்டாராம்.
மேல் விவரங்கள் இங்கே.
உண்ணாவிரதம் ஒன்றும் நமக்குப் புதிதல்ல.
காந்தியின் முக்கிய ஆயுதத்தில் உண்ணாவிரதமும் ஒன்றாக இருந்தது. பதினேழு முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறாராம்.
மூன்று நாட்கள் முதல் மூன்று வாரம் வரை நீண்டிருக்கிறதாம் இவரின் உண்ணா நிலை நாட்கள்.
வெற்றிகரமாக, இவர் நினைத்தது நடக்கும் வரை தன் உண்ணாவிரதத்தை விடாமல் கடைபிடிப்பாராம். முக்கியமாக, இனவெறியாட்டம் தலையெடுத்தப் போது, இவரின் உண்ணாவிரதம் பெரூம் தாக்கத்தை ஏற்படுத்தி, பல உயிர் அழிவை தடுக்க உதவியது.
காந்திக்குப் பிறகு, நமது ஊர் அரசியல்வாதிகள், பலரும் பல ஆயிரம் முறை உண்ணாவிரதம் என்ற ஸ்டண்ட்டை அடித்து அரங்கேற்றியுள்ளார்கள்.
சொல்லி வைத்த மாதிரி, இவங்க வற்புறுத்தினாங்க, அவங்க வற்புறுத்தினாங்கன்னு, ஆட்டத்தை ரெண்டு மூணு நாளுல கலச்சிருவாங்க.
இப்படி கலைக்கிரது ஒண்ணும் தப்பில்லை.
அவங்க, கருத்தை ஊர் கேக்க, உண்ணாநிலை நல்ல ஒரு விளம்பரத் தளமா இருந்து உதவுது.
ஆனா, இப்படி அடிக்கடி ஆளாளுக்கு உ.நி செஞ்சு செஞ்சு, நம்ம பொதுசனத்துக்கு, உ.நி மேல் ஒரு பெரிய அனுதாபம் எல்லாம் மலையேறி பல காலமாயிடுச்சு.
க்ளைமாக்ஸ்ல என்னா நடக்கும்னு ஈஸியா புரிஞ்சிடர விஜய் படம் மாதிரி, இப்ப வரும், உ.நி'க்கள் மேல் சுவாரஸ்யமும் பெரிய நாட்டமும் இல்லாமல் தான் மக்கள் இருக்கிறார்கள்.
அங்கே நிமிஷத்துக்கு ஒரு குண்டு வெடிச்சு, குழந்தைகளும் பெண்களும் பதுங்கி பதுங்கி ஓடிக்கொண்டிருக்க, இங்கே வில்லு, படிக்காதவன் பாத்து பொழுது கழிக்கரவங்கதான் எல்லாரும்.
அந்த காலத்துல காந்தி உ.நி இருக்கும்போது, ஊர் மக்கள் எல்லாருமே, பங்கு கொள்ளும் விதமாக, அவரை சுத்தி ஒக்காருவாங்க. நேர்ல வர முடியாதவங்க, வீட்ல வெளக்கை எரிச்சு வெப்பாங்களாம், ராத்திரி முழுக்க.
இலங்கைத் தமிழர்கள் ப்ரச்சனைக்கும், ஏதாவது தீர்வு வரணும்னா, உலகளாவிய லெவலில், தமிழர்கள், தங்கள் கலக்கத்தை வெளிக்காட்டணும்.
மௌன ஊர்வலங்கள் மூலமும், லோக்கல் ஊடகங்கள் மூலவும் ஆதரவு திரட்டணும்.
அமெரிக்க வாழ் டமிலர்கள், ஒபாமா பதவியேற்புக்கு செல்லும் வழியில், பெரிய பேனரை, பிடித்து அவருக்கு தெரிவிக்கலாம்.
அத்த விட்டுட்டு, நமக்கெல்லாம், புளிச்சுப் போன, உ.நி செய்வதால், யாதொரு ப்ரயோஜனமும் இல்லை.
அதுவும் இல்லாம, இந்த உ.நியைத் தொடர்ந்து, சில விஷ ஜந்துக்கள் செய்யும், பஸ் எரித்தல், கடை உடைத்தல் எல்லாம், சாமான்யனுக்கு எரிச்சலை கிளப்பும் செய்கைகள்.
இப்ப, அடுத்ததாக, டோட்டல் தமிழகமே ஸ்தம்பிக்கும் விதத்தில் ஒரு பந்த் நடத்தணும்னு பேசிக்கிட்டு இருக்காங்களாம்.
ஆட்சியில் இருப்பவர்களே, இப்படி போராட்ட வழியில் தான் தங்கள் எதிர்பை தெரிவிக்கணும்னா, என்னாங்க ஊரு இது?
பொதுமக்களாகிய நாம், இதில் ஒரு மாற்றம் கொண்டு வரணும்னு நெனச்சா, நூதனமா ஏதாவது செஞ்சாதான் உண்டு.
உதாரணத்துக்கு:
டமிலர்கள் அனைவரும், ஒரு மாசத்துக்கு,
அ. டி.வி பெட்டியை மொத்தமாக ஆஃப் செய்து விடுதல்.
ஆ. எந்த ஒரு புதிய பொருளையும் வாங்காது இருத்தல்
இ. சொந்த வாகனங்களை பூட்டி வைத்து, பெட்ரோல் உபயோகிக்காமல் இருத்தல்
ஈ. நேஷனலைஸ்ட் வங்கியிலிருந்து, பணத்தை மொத்தமும் உருவி, வேறு மாநில வங்கிகளுக்கு மாற்றுதல்
இன்னும் ஐடியாஸ் அள்ளி வீசுங்க.
என்னமோ போங்க.
ஆமாங்ங்ங்ங், திருமாவின் உ.நி பத்தி நீங்க என்னா நெனைக்கறீங்க?