இருபதில் முதல் இரண்டு பரிசுக்குரிய கதைகளை தேர்ந்தெடுக்க,
வெட்டிப்பயல், CVR, சென்ஷி ஆகிய மூவர் குழு களத்தில் இறங்கியது.
இவர்களின் மதிப்பெண்ணுடன், வாசகர்கள், கதைகளுக்கு அளிக்கும் வாக்குகளையும் கலந்து ஆராய்ந்து வெற்றியாளரை தேர்ந்தெடுப்பதாக அறிவித்திருந்தேன்.
சர்வே பதிவின், பின்னூட்டத்தில் சொல்லியிருந்தபடி, மூவர் குழுவுக்கும் உறுதுணையாக இருக்க நாலாவதாக இன்னொரு நடுவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஹெவி-வெயிட் வேலையை, செய்து கொடுத்தவர், முத்துச்சரம் கோர்க்கும் ராமலக்ஷ்மி அவர்கள்.
மக்கள்ஸின் சர்வே மூலம் வந்த வாக்குகளை எண்ணியதில் ஒரு சிக்கல் எழுந்தது.
அதாவது, மொத்தம் 1363 வாக்குகள் பதிவாயிருந்தது.
ஆனால், சர்வே பதிவுக்கு கூகிளாரின் கணக்குப்படி தொள்ளாயிரத்தி சொச்சம் ஹிட்டுகள் மட்டுமே இருந்தன. ஸோ, தோராயமாய் சில பல நூறு வாக்குகள், செல்லாத கள்ள வாக்குகள் என்பது தெரிய வந்தது.
சர்வே கொம்பேனியை பிடித்து ஐ.பி ரிப்போர்ட் அது இதெல்லாம் கேட்டு, வடிகட்ட முனையலாம். ஆனா, அதெல்லாம் தேவை இல்லாமல், நாட்களை மேலும் நீட்டிக்கொண்டுச் செல்லும். நேர விரையமும் கூட.
ஆகையால், இம்முறை, சர்வே மூலம் வந்த வாக்குகளை கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று எமது சர்வே கமிட்டியில் மிகுந்த பரிசீலனைக்குப் பிறகு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நான்கு நடுவர்களின், முடிவுகளை மட்டும் கணக்கில் கொண்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நடுவர்கள் ஒவ்வொரு கதைக்கும் மதிப்பெண் அளித்தனர். அவர்களுக்கு மிகவும் பிடித்த கதைக்கு 100ம், அதற்கேற்றார்போல், மற்ற கதைகளுக்கும் மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்பட்டது.
கீழ் வரும் பட்டியலில், நாலு நடுவர்களின் மதிப்பெண்களும், அவற்றின், பொது (average?) கூட்டலும்.
(கீழே, ஸ்க்ரோள் செய்து பார்க்கவும்......)
கதை | நடுவர்1 | நடுவர்2 | நடுவர்3 | நடுவர்4 | Average (%) | |
1. நெல்லி மரம் - சதங்கா (Sathanga) | 96 | 60 | 60 | 100 | 79 | |
3. கடைசி இரவு - ராம்குமார் அமுதன் | 73 | 100 | 70 | 90 | 83 | |
10. திருப்பம் - சின்ன அம்மிணி | 67 | 80 | 60 | 77 | 71 | |
12. அப்பா சொன்ன நரிக்கதை - நிலா ரசிகன் | 93 | 65 | 95 | 95 | 87 | |
19. இக்கணம் இக்கதை - Nundhaa | 93 | 55 | 80 | 82 | 77 | |
30. அவரு..அவரு..ஒரு - வருண் | 53 | 75 | 65 | 77 | 67 | |
34. ஒரு கிராமத்தின் காலைப் பொழுது - சயந்தன் | 56 | 55 | 70 | 69 | 63 | |
39. காமம் கொல் - Cable Sankar | 67 | 65 | 60 | 69 | 65 | |
44. நறுமண தேவதை - எவனோ ஒருவன் (எ) அதி பிரதாபன் | 91 | 85 | 80 | 85 | 85 | |
45. கறுப்பு ஞாபகம் - ஆதிமூலகிருஷ்ணன் | 87 | 70 | 80 | 87 | 81 | |
52. அடுத்த வீட்டுப் பெண் - Mohan Kumar | 81 | 45 | 70 | 71 | 67 | |
53. சட்டை - முரளிகண்ணன் | 93 | 55 | 90 | 94 | 83 | |
55. வெள்ளை உருவத்தில் வில்லன் - பின்னோக்கி | 73 | 85 | 80 | 95 | 83 | |
56. அபரஞ்சிதா - அடலேறு | 73 | 50 | 60 | 69 | 63 | |
59. இயந்திரம் - காவேரிக்கரையோன் MJV | 77 | 50 | 60 | 82 | 67 | |
63. பள்ளிக்குப் போக மாட்டேன் - ஷக்திப்பிரபா | 67 | 50 | 60 | 77 | 63 | |
64. ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. - தமிழ்ப்பறவை | 89 | 60 | 70 | 77 | 74 | |
68. ஹோம் வொர்க் - ஸ்ரீதேவி | 72 | 85 | 90 | 87 | 83 | |
69. நிபுணன் - யோசிப்பவர் | 69 | 60 | 70 | 71 | 68 | |
70. நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி - Sridhar Narayanan | 100 | 60 | 100 | 100 | 90 |
அனைவரது மதிப்பெண்ணையும் கூட்டிக் கழித்து பார்த்ததில்,
முதல் இடத்தை பெற்று, அதற்கான $20 பரிசை வெல்பவர், நிமித்தகாரன் (அ) கனவுகளின் காதலி எழுதிய Sridhar Narayanan.
இரண்டாம் இடத்தையும், அதற்கான $10 பரிசும் வெல்பவர், அப்பா சொன்ன நரிக்கதை எழுதிய நிலா ரசிகன் அவர்கள்.
வெற்றி பெற்ற இருவருக்கும் வாழ்த்துக்களும், கரகோஷங்களும்.
முதல் இருபது வரை வந்த மற்ற போட்டியாளர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும், வாசகர்களுக்கும், நடுவர்களுக்கும், மற்றும் இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும், நன்றிகளும் உரித்தாகுக.
ஏற்கனவே அறிவித்தபடி $70ஐ, முதல் பரிசு வென்ற, Sridhar Narayan பெயரில், உதவும் கரங்களுக்கு ஒரு குட்டி டொனேஷனும் செய்யப்படும்.
வெற்றி பெற்றவர்கள், surveysan2005 at yahoo.com என்ற முகவரிக்கு ஒரு ஈ.மடல் அனுப்பவும்.
நன்றீஸ்!
வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கம்ஸ் (இதை உங்க பதிவுல போட்டுக்கலன்னா செக் பவுன்ஸ் ஆகிடும்னு சொல்றதெல்லாம் பொரளி, நம்பாதீங்க! :) ):