எண்பதுகளில் ராஜாதி ராஜன் இசை அரசன் இளையராஜா கோலோச்சி ஆட்சி செய்தது அனைவருக்கும் தெரியும். அப்பெல்லாம் எந்த நல்ல பாட்டு ரேடியோவில் கேட்டாலும் அது கண்டிப்பா ராசா பாட்டுத்தான்னு எல்லாரும் மனசுல ஏத்திக்கிட்ட காலம்.
ராஜாவைத் தவிர வேறு எந்த இசைஅமைப்பாளர்கள் அந்த காலக்கட்டத்தில் இருந்தாங்கங்கரது கூட மங்கலாத்தான் நினைவில் இருக்கு.
அந்த மங்கலான நினைவில், பளிச்னு முதல் வரிசையில் இருப்பவர்கள், சங்கர் கணேஷ், சந்திரபோஸ், போன்றவர்கள்.
SPBயும் யேசுதாஸும் பாடிய "என் காதலி யார் சொல்ல்வா?" பாட்டு சங்கர் கணேஷ் போட்டது, ராசாவோடது இல்லைங்கரது சில வருஷத்துக்கு முன்னாடிதான் எனக்கே தெரிஞ்சது.
ஒரு காலத்தில், ரேடியோ ஆன் பண்ணினாலே, 24 மணி நேரமும் இடம்பெற்ற பாடல், 'மாம்பூவே சிறு மைனாவே" பாடல். பலப் பலவருஷமா இதுவும் ராசா பாட்டுத்தான்னு நெனைச்சிருந்தேன். ஆனா, இது சந்திரபோஸின் இசையில் வந்த பாடல்னு சமீபத்தில்தான் தெரிஞ்சது.
சந்திரபோஸ் எவ்வளவோ ஹிட்டு பாட்டு கொடுத்திருக்காருன்னு, உ.தமிழனின் பதிவிலும், கானா பிரபாவின் ரேடியோஸ்பதியிலும் தான் தெரியக் கிட்டியது.
சந்திரபோஸ், நல்ல திறமையான கலைஞன். ராஜாவின் பிரகாசத்துக்கு இடையே, தனக்குன்னு ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கிட்டதிலிருந்தே அது புரியுது.
அவரின் பாடல்களில் சில கீழே:
மாம்பூவே சிறு மைனாவே - பல வருஷமா ராசாப் பாட்டுன்னு எண்ணியிருந்தது இது. இன்னிக்கும் இந்தப் பாட்டை கேட்டா, பழைய murphy radioவும், இலங்கை வானொலியின் அறிவிப்பாளரும், ரேடியோவை சுற்றி அமர்ந்திருக்கும் சுற்றமும் நட்பும் நினைவில் வருது.
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் - இந்த நிமிஷம் அரைக்கும் இது சந்திரபோஸின் இசைன்னு தெரியாது. அருமையான பக்திப் பாடல். உருகவைக்கும்.
Raj TV நிகழ்ச்சியில், சந்திரபோஸ், உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது கர்ணன் பாடலை, ரொம்பவே அனுபவிச்சு அற்புதமா பாடும் காட்சி.
சந்திரபோஸ் மறைந்துவிட்டார் என்பதில் வருத்தம்.