recent posts...

Showing posts with label கேவலம். Show all posts
Showing posts with label கேவலம். Show all posts

Thursday, April 23, 2009

பழைய செய்திகள் தரும் கிக்கு

'காந்திய சுட்டுட்டாங்களாமே?'ன்னு ஒரு பெருசு, ஏதோ கவுண்டமணி படத்துல பழைய பேப்பர படிச்சுக்கிட்டு வாயப் பொளப்பாரு. அதுக்கு கவுண்டரும், டேய்ய்ய்ய்ய்னு நீட்டி முழக்கி சூப்பரா லடாய் பண்ணுவாரு.

சமீபத்தில் யூட்யூபில் மாட்டிய, ஒரு காமெடி வீடியோவிலும், அது போல் ஒரு விஷயம் இருக்கும். வீட்டுக்கு வந்த மாமனார், பொழுது போகாமல், பழைய பேப்பரை படித்துக் கொண்டிருக்க, மாப்பிள்ளையின் கண்ணில் ஹெட்லைன்ஸ் படும், "என்னாது நியூயார்க்ல 3000 பேர் செத்துட்டாங்களா? இது எப்படி நடந்தது?"ன்னு அங்கலாய்ப்பாரு. இத்தனைக்கும் அவங்க குடும்பம் அமெரிக்க வாழ் குடும்பம்.

பழைய செய்திகள் ஒருபுறம் இப்படி காமெடி அளித்துக் கொண்டிருக்க, இன்னொரு புறம், என் கண்ணில் படும் பழைய செய்திகள் எரிச்சலைத் தருகிறது.

இலங்கையில் போர் தொடங்கி சில பல மாதங்கள் ஆயிடுச்சு. இதோ புடிச்சுடுவோம், அதோ மடக்கிடுவோம்னு, நாளொரு வண்ணம் பொழுதொரு சேதி விட்டுக் கொண்டிருந்த இலங்கை சேனை, இன்னும் அதச் சொல்லிக்கிட்டேதான் இருக்காங்க.
சரி, அவங்களாவது பரவால்ல, வேர வழியில்லை எதையாவது சொல்லித்தான் ஆகணும்.

ஆனா, உள்ளூரில் இருந்து கொண்டு லந்து பண்ணும், யோக்கியர்களை நினைத்தால்தான், காமெடி தலைக்கு கிர்ர்ர்ர்ர்னு ஏறுது.

சில மாதங்களுக்கு முன் நடந்த உண்ணாவிரதங்களும், அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் விட்ட வெட்டி வீரப் பேச்சுகளும், திகட்டா இன்பம் தருது, இப்ப படிச்சா.

கேக்கரவன் கேணையனா இருந்தா, எலி ஏரோப்ளேன் ஓட்டுமாம் (வடிவேலு?).

ஹ்ம்!!!

மானங்கெட்ட மனுஷனுங்கப்பா நம்மெல்லாம்.
நம்ம வயித்துப் பொழப்பு மட்டுமே நமக்கு பெருசாப் போச்சு.

நம்ம அரசியல்வியாதிகளெல்லாம், மேடைப் பேச்சு பேசவும், கவிதை எழுதவும், சந்தனம் அரைக்கவும், அதை நம் மண்டையில் பூசவும் மட்டுமே லாயக்கு.

திருவாளர்.வை.கோ சொன்ன பழைய செய்தி -- இலங்கையில் போர் நிறுத்தாவிட்டால், தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுமாமாம்!

ஓடும், ஓடும்.

நேத்திக்கு பந்த்தாமே?
போராளிகள் எல்லாம் வெகுண்டு எழுந்து, உங்க கோவத்தை படு பயங்கரமா காட்னீங்களாமே?
உலகமே ஸ்தம்பிச்சு போச்சாமே?

ஊரே சிரிக்குதுய்யா! கேவலம்! படு கேவலம்!

ஒரு சொறி நாயின் மீது கல் எறிந்தால் கூட, சுற்றி நிற்கும் மற்ற நாய்களெல்லாம் கல் எறிந்தவனைப் பார்த்துக் குரைக்கும்!