recent posts...

Showing posts with label குமுதம் மொக்கை. Show all posts
Showing posts with label குமுதம் மொக்கை. Show all posts

Monday, July 14, 2008

புடவை கட்டுவது எப்படி? குமுதத்துக்கு என் கன்னா பின்னா கண்டனங்கள்!

என்ன கொடுமைங்க இது? நாட்டு நடப்பை தெரிஞ்சுக்கலாம்னு எப்பயாச்சும் குமுதம் இணையதளப் பக்கம் போரது உண்டு.

("யோவ், நாட்டு நடப்புக்கு ஏன்யா குமுதம்?"னு நீங்க கேக்கரது எனக்கு கேக்கல)

யூ.ட்யூப் ஹிட்டானாலும் ஆச்சு, இப்ப ஆளாளுக்கு வீடியோ போட ஆரம்பிச்சிட்டாங்க்ய.

குமுதத்துக்குள் நுழைந்ததும் முதலில் கண்ணில் பட்ட வீடியோ, "புடவை கட்டுவது எப்படி?"

அடப்பாவிகளா, விட்டா *** **** எப்படி? *** **** எப்படி ன்னெல்லாம், நமது பதிவுலகில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளை வச்சு வீடியோ போட்டுடுவாங்க போலயிருக்கே.

ஹ்ம். குமுதத்துக்கே இந்த நெலமைன்னா, நாம ****, *** ன்னெல்லாம் கதை எழுதி ஆள் புடிக்கரதுல தப்பில்லைன்னு தோணுது.

இருந்தாலும், இந்த மாதிரி விஷமத்தனமெல்லாம் கொஞ்சம் ஓவரு குமுதத்துக்கு. அதனால, என் கடுமையான கண்டனங்களை பதிகிறேன் ;)

வர்டா.

பி.கு: உரல் எல்லாம் கேக்காதீங்க. நோவாம நோம்பு கும்பிடமுடியுமா?

;)