recent posts...

Showing posts with label குசேலன் திரைப்பார்வை. Show all posts
Showing posts with label குசேலன் திரைப்பார்வை. Show all posts

Monday, November 10, 2008

குசேலன் = 2 x சந்திரமுகி

ஏகன் திரைப்பார்வைய படிச்சுட்டு, பலரும் வந்து கும்மிட்டாங்க.
குறிப்பா, 'கமல்'னு ஒரு பதிவர், "நெஞ்சத்தொட்டு சொல்லுங்க, ஏகன், குரிவியை விட குப்பையா?"ன்னு ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டுட்டாரு. :)
அவருக்கு சொன்னதை, இங்கையும் சொல்றேன்.
"கமல், நெஞ்சத்தொட்டா ஒரு பேச்சு, நெஞ்சதொடலன்னா ஒரு பேச்செல்லாம் என் கிட்ட கிடையாது. எப்போமே, மனசுல தோணறது, தட்டச்சி வெளீல வுடறேன். அம்புடுதேன் ;)".

இனி, குசேலன் பற்றிய எனது கண்ணோட்டத்தைச் சொல்றேன்.

ஏற்கனவே சொன்ன மாதிரி, ஓசிப் பட வரிசையில், இது ரெண்டாவது படம்.

நேத்து, "ஏகன் = 2 x குருவி"க்கு அர்த்தம், குருவியை விட ஏகன், ரெண்டு மடங்கு மட்டம்.
இன்னிக்கு, சொல்றது, சந்திரமுகியை விட, குசேலன், இரண்டு மடங்கு பெட்டர்.

அந்த சந்திரமுகி எப்படிதான், அப்படி ஓடுச்சோ (ஒட்னாங்களோ?) தெரீல, எனக்கு பயங்கர அறுவையா தெரிஞ்சுது அந்த படம். ரஜினியின், யதார்த்தமற்ற நடிப்பு எனக்கு பெரும் எரிச்சலை தந்தது, சந்திரமுகியில். பிரபுவும், வடிவேலுவும் பண்ண அலப்பரையும் தாங்க முடியலை அதுல.

குசேலனை, மக்கள், தேவையில்லாம போட்டு வாட்டி எடுத்துட்டாங்கன்னு நெனைக்கறேன்.
ஓவர், பில்டப் கொடுத்ததால் வந்த வினை இது. தேவைதான்.

படத்தை பொறுத்தவரை, நல்ல, போரடிக்காத படம் ( மொத நாள், ஏகன் பாத்துட்டு, எத்த பாத்தாலும், அப்படித்தான் இருந்திருக்குமோ? ;) ).
பசுபதியின் நடிப்பும், ரஜினியின் அசால்ட்டாக வந்து போகலும், நெருடாத காட்சியமைப்பு.

எல்லாரும், ஓவரா பந்தாடின, வடிவேலுவின் காமெடி கூட, எனக்கு மட்டமா தெரியலை.
அவரு, எல்லாரையும் திருட்டு போலிசு வச்சு, இழுத்துக்கிட்டு வந்து, மயக்க மருந்து போட்டு, மொட்டை அடிக்கும் காட்சிகள், நல்ல சிரிப்பு.

ஒட்டாதது - மீனா. தட்டினா கீழ விழுந்துடர குடிசையில் இருக்காங்களாம். ஆனா, பளிச்னு, மேக்கப்பும், திருத்திய புருவமும், புது சாரியும், சுத்தமா ஒட்டலை.
படம் எடுக்கும்போது, யாருக்குமே இந்த மேட்டர் எப்படி கண்ணுல படாம இருந்திருக்கு? ரொம்பக் கேவலம்!

ரஜினி, ஆர்.சுந்தர்ராஜனுக்கு கொடுத்த பேட்டி கூட நல்லாதான் இருந்துச்சு. படத்துல சொல்லறதையெல்லாம் ஏண்டா உண்மைன்னு நம்பிட்டு, உங்க பொழப்ப கெடுத்தக்கறீங்கன்னு, தைரியமா ரஜினி சொன்னது, பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

க்ளைமாக்ஸில் ரஜினி கலக்கியிருக்காரு. ( மம்முட்டி இதைவிட நூறு மடங்கு கலக்கியிருப்பாருங்கரது, தனிக்கதை ). ரஜினி, அழுதா நமக்கு பிடிக்கமாட்டேங்குது போல! ;)

பசுபதி இருக்கர ஊரு அமக்களமா படம் பிடிச்சிருக்காங்க.
என்ன ஊருங்க அது? குறிப்பா, அந்த பெரிய ஏரி? எங்க இருக்கு அது?

கிராஃபிக்ஸ் - தேவையில்லாம சொறுகியிருக்காங்க. டால்ஃபின் அந்த ஏரியில் குதிப்பது அழகான கற்பனை. ஆனா, ஏரிக்கு மேலே பெரிய நீர்வீழ்ச்சி வரவச்சதெல்லாம் கொடுமைடா சாமி! இப்ப, எது உண்மையிலேயே இயற்கை அழகு, எது கிராஃபிக்ஸ் பூச்சுற்றல்னு கொழப்பம் வந்துடுச்சு.
"ஓ சாரரே சாரே சாரே, போக்கிரி பையன் தாண்டா பொல்லாதவன் நீ" பாட்டுக்கு செட்டிங்கும், கிராபிக்ஸும் செம கலக்கல். சிவாஜி தோத்துது போங்க!

மொத்தத்தில், ஒரு தடவ, நார்மல் படங்களுக்கு கொடுக்கும் கட்டணம் கொடுத்து பார்க்கக்கூடிய, நார்மலான படம்!

குசேலன், கற்பித்த பாடங்கள்:
* அதிகமான பில்டப், கன்னா பின்னான்னு, பேக் ஃபையர் ஆகும்.
* மட்டமான படத்துக்கு (ஏகன்) அப்பால, சுமாரான படம் (குசே) பாத்தாலும், சூப்பர் படம் மாதிரி ஃபீல் கொடுக்கும்.
* ரஜினி படமே ஆனாலும், சில மாசம் கழிச்சு ஒரு படத்தை தியேட்டர்ல பாத்தா, எல்லாரும் ரொம்ப நல்ல பசங்களா சமத்தா விசில் எல்லாம் அடிக்காம, அகிரா குரோசோவா படம் பாக்கர மாதிரி ரொம்பவே சீரியஸா பாக்கறாங்க. குட்!

பி.கு: ராமலக்ஷ்மியின் அட்டகாசமான கவிதை இங்கே