எனக்கு இதுவரையில் வந்த தொடர் பதிவுகளில், மெத்தப் பிடித்தது, எட்டு மேட்டர் தொடர் பதிவுதான். நானும் பங்குகொண்டு என் வாழ்வில் 'நடந்த' எட்டு விஷயங்களை பிட்டு பிட்டு வைத்து மகிழ்ந்தேன்.
மற்ற பல தொடர் பதிவுகளும் சுவாரஸ்யமா இருந்தது. ஒரு சிலர் சேந்து, வரிசை கட்டி ஒரு குறு நாவலை எழுதி முடிச்சாங்க.
இப்ப, திரும்ப தொடர் பதிவு ஜுரம் அடிக்க ஆரம்பிச்சுருக்கு. இம்முறை ரொம்பவே சுவாரஸ்யமான தலைப்புடன் வலம் வருது.
சமீபத்திய 'தொடர் பதிவுகள்' வரிசையில் ஒண்ணுல இந்த மேட்டர் இருக்கு:
அயித்தானும் என்னைப்பாத்திட்டாரு, அவங்க அக்காதான்
எனக்கு முன்னமே பழக்கமாச்சே. இதுல திடும்னு ஒரு நாள்
”பொண்ணு பாக்கணுமாம்! லீவு போட்டுட்டு சென்னைக்கு
வரச்சொன்னாங்கன்னு ”அப்பா போன் செஞ்சதா மாமா
சொன்னாரு. எத்தனை தடவை பாப்பாங்கன்னு கோவம்மாத்தான்
கிளம்பிப்போனேன்.
சுவாரஸ்யமா இல்ல? 'கல்யாணம் கட்டிக்க பொண்ணு/பையன் பாத்த கதை'தான் தலைப்பாம்.
நானும் கோதாவில் சீக்கிரமா குதிக்கறேன். நம்ம புதுகைத் தென்றல் கூப்புட்டாக.
நாலு பேரை தொடர்ல சேத்து வுடறேன்.
ஆனா, இன்வைட் வராதவங்களும் கூட, அடிச்சு ஆட, சூப்பரான மேட்டர் இது. இதைப் படிக்கரவங்க எல்லாரும், உங்க எக்ஸ்பீரியன்ஸை பகிர்ந்துக்கிட்டா, நம்ம கலாச்சாரத்தின் பெரிய வீச்சான,கண்ணாலத்தின் அருமை பெருமைகள் பதிவுலகிலும், வரலாற்றிலும் இடம் பெறும். நல்ல சான்ஸு அடிச்சு ஆட, வீணாக்காதீர்கள், இன்றே குதியுங்கள்.
கல்யாணம் ஆகி நொந்து நூடுல்ஸாப் போயிருக்கரவங்களுக்கு, அந்த ஆரம்ப சொற்ப சந்தோஷ நாட்களை நினைவில் நிறுத்த நல்ல சந்தர்ப்பம். நழுவவிடாதீர்கள் ;)

படம் எப்டீகீது?