'குருவி' எந்த அளவுக்கு மட்டமோ, அதைவிட இரண்டு மடங்கு மட்டமான படம் ஏகன்.
ஓசியில் கிடைத்தால், ஃபினாயிலையும் பாட்டம்ஸ்-அப் அடிக்கும் நம் பழக்கம், ஓசியில் தீயேட்டரில் படம் காட்டறாங்கன்னதும், விட மனசு வரல.
வெள்ளி முதல் ஞாயிறு வரை, மூணு படம் பாத்தாச்சு.
வெள்ளியன்று, 'ஏகன்' பாத்து, ஓசி திரைவிழாவுக்கு, பிள்ளையார் சுழி போட்டேன்.
ராஜு சுந்தரம் டைரக்ஷன் கத்துக்கரதுக்கு, யாராச்சும் புது முகத்தை வச்சு, பதம் பாத்திருக்கலாம். அநியாயத்துக்கு அஜித்தை காவு வாங்கியிருக்க வேண்டாம்.
அஜித்தும், லேசு பட்டவரில்லை. பிரபு வீட்டுக்கு கிட்ட இருக்காரான்னு சந்தேகம் வருது. பிரபு வாங்கர கடைலதான் இவரும் அரிசி வாங்கறாரு போலருக்கு.
சாப்பிட்ட ஒவ்வொரு பருக்கையும், ஒடம்புல அப்படியே தெரியுது. மொத மொதன்னு இருக்காரு.
என்ன கொடுமை அஜித் இது?
சில பல காரணங்களால், வில்லனின் அப்ரூவரை பிடிக்க, அப்ரூவரின் பொண்ணு படிக்கும், காலேஜ்ல அஜித்தும், மாறு வேஷத்தில், ஸ்டூடண்ட்டா போய் படிக்கோணுமாம்.
சரி, ஸ்டூடண்ட் ஆகப் போறாரே, சிக்குனு எடைய கொறச்சிட்டு, நச்சுன்னு, சூர்யா மாதிரி வந்து நிப்பாருன்னு பாத்தா, தாடி மட்டும் மிஸ்ஸிங், தொப்பை இங்கையும் ப்ரசண்ட்.
லேசான தாடியில் வெள்ளை முடி வேர. கண்றாவியா இருக்காரு அஜித், படம் முழுக்க.
காலேஜ்ல மொத்த பசங்களும் சூப்பரா ட்ரஸ் பண்ணியிருப்பாங்க. அஜித்துக்கு மட்டும், பர்மா பஜார் ப்ளாட்ஃபாரம்ல கிடைக்கிர டைப்ல, டீ-ஷர்ட்டுகள். தொவைக்காம, இஸ்திரி பண்ணாம போட்டு, டோட்டல் வறட்சி, டோட்டல் இம்சை!
பாடல்களும் சகிக்கலை.
டான்ஸ் மட்டும் நல்லா ஆடறாரு.
நயன்தாரா, அந்த காலேஜ்ல ப்ரொஃபஸராமாம்.
மொத்த முதுகும் தெரியரமாதிரி ஒரு ஜாக்கெட்டு. வழுக்கி விழர மாதிரி ஒரு சேலை.
அஜித் படம் முழுக்க தொப்பையோட வர மாதிரி, நயன் தாரா, படம் முழுக்க, இதே ஜாக்கெட்/ஸாரி கெட்டப்போட வராங்க.
வர வர நயன்தாராவப் பாத்தா ஒரு கிளுகிளுப்பும் வர மாட்டேங்குது. WWF வீராங்கனை கணக்கா ஆயிட்டே போறாங்க. பயங்கர ட்ரைனஸ்.
ஜெயராமும் வீணடிக்கப்பட்டிருக்காரு.
வில்லனா வர சுமன், படு கேவலம். அவரும் அவரு விக்கும், அவரின் லூசுத்தனமும் சகிக்கலை.
ஒரே ஆறுதல், சுமனின் அள்ளக்கையாக வரும் ஆள் (ஸ்ரீமன்?) பண்ணும் சின்ன சின்ன காமடி.
ஓசியில் பாத்தே இவ்ளோ பொகைச்சலா இருக்கே, இதையெல்லாம் காசு கொடுத்து பாக்கரவங்க நெலம ரொம்பவே கொடுமையா இருக்கும்.
ஐயோ பாவம்!
பி.கு: இத்த mein hoon na வோட ரீ-மேக்னு சொல்றாங்க. ஷாருக்கோட, எனர்ஜியெல்லாம் அஜித்தோட கம்பேர் பண்ணா, இன்னும் நமக்கு பொகைச்சல்தான் ஏறும்.
அஜித், தொப்பையக் கொறைங்க! ரசிகர்களை ஏமாற்றாதீர்கள்!