recent posts...

Friday, June 18, 2010

ராவணன்


பாக்கலாமா வேணாமான்னு ஒரு சஞ்சலம் இருந்தது;
இந்தியில் பாக்கலாமா, டமிலில் பாக்கலாமான்னு அடுத்த சஞ்சலம்;
முதல் நாள் பாக்கலாமா, ரெண்டு நாள் கேப் விட்டு பாக்கலாமான்னும் ஒரு தயக்கம்;
சரி, எவ்வளவோ பாத்துட்டோம் இதை பாக்கரதுக்கா தயக்கம்னு கோதால குதிச்சுட்டேன்.
ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்கள் ஆரம்ப நாட்களில் நாராசமாய் காதில் இறங்கி, கேட்க கேட்க, இனிமை அதிகமாய், ரெண்டு மூணு வாரத்துல, வசியம் பண்ணிடும். ஆனா, ராவணன் பாடல்கள் எதுவும், ருசிகரமாய் என் காதுக்கு கேட்கவில்லை. 'உசிரே போகுது' சுமார் ரகம்.
மணிரத்தினத்தை நம்பி கண்டிப்பா போகலாம்னு தோணிச்சு. குருவும், கைவிடலை.

ஆனா பாருங்க, சினிமா பகவான் சோதனை பண்ணிட்டாரு.

சந்தோஷ்சிவன்/மணிகண்டனின் கைவண்னம், ஒவ்வொரு காட்சியிலும் பளீரெனத் தெரிந்தாலும்; படம் ரொம்பவே வறுத்தெடுத்துடுச்சு;

ராவணன் கதைதான் எல்லாருக்கும் தெரியும். பாலிஷ்டா கதை சொல்லத் தெரிந்த மணிரத்தினம், என்ன நெனச்சாரோன்னு தெரியல, இது ராமாயணம்தான்னு ஆணித்தரமா சொல்லவோ என்னவோ, அனுமாராய் வரும் கார்த்திக், மரத்துக்கு மரம் தாவரதும், ஐஸை பாத்துட்டு, ராமன்கிட்ட (ப்ரித்விராஜ்) சொல்லும்போது, "பாத்துட்டேன் ராகினியை'ன்னு டயலாக் விடரது சகிக்கலை.

முதல் காட்சியிலேயே, ராவணன் விக்ரம் (வழக்கமான ஊர் தலீவரு; காட்டுமிராண்டி கணக்கா; கிராமத்து மக்களுக்கு கடவுள், போலீசுக்கும் பணக்காரனுக்கும் விரோதி, etc.. etc..) ஆட்கள், போலீசார் சிலரை உயிருடன் கொளுத்துவதும், கைகால் வெட்டுவதும் என வன்முறையாக ஆரம்பித்தது. எதுக்காக இப்படி பண்றாங்கங்கர பேக்ரவுண்ட் நமக்கு ஊகிக்க முடிந்தாலும் (எவ்ளோ படம் பாக்கறோம்?), திரையில் அதை முதலில் காட்டாமல் இப்படி தடாலடியாய் ஆரம்பித்ததால், விக்ரமின் பக்கம் நம்மால் சாயமுடியாமல், படத்தின் முதல் பகுதி செம இழுவையாய் நகர்ந்தது. காட்சிகள் மட்டும் கண் விரித்து ஆன்னு பாக்க வைக்குது.

போலீஸ் SP (ராமர்/ப்ரிதிவிராஜ்) மனைவியான ஐஸை கடத்தி வச்சுக்கராரு விக்ரம்; பழிவாங்க;

போலீஸ்காரங்க இவரு தங்கையை (ப்ரியாமணி/சூர்ப்பனகை) தூக்கிக் கொண்டு போய் பலாத்கார் பண்ணிடறாங்க. அதற்கான பழிவாங்கும் படலம்;
கடைசியில், ஐஸை ஃப்ரீயா விட்டுடறார்; திரும்பி வந்த ஐஸ் மேல் கணவனுக்கு சந்தேகம் வந்து, எக்குத்தப்பாய் கேள்விகள் கேட்க, ஐஸ் விக்ரமிடமே திரும்பி வந்து விடுகிறார், அப்பாலிக்கா என்ன என்பதை வெள்ளித்திரையில் காண்க.

வழக்கமான படங்கள், முதல் பாதி விறு விறுன்னு போயி, அப்பரம் தொய்வடைந்து, மீதிப் பாதி இழுவையாகி போரடிக்கும்;
வெற்றிப் படங்கள் யாவும், முதல் காட்சி முதல் முடிவு வரை விறு விறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கும்.
நல்ல படங்கள், உள்ளிருந்து சிரிப்பையோ, துக்கத்தையோ, கோபத்தையோ, சோகத்தையோ, எதையோ வரவைக்கும்.

இந்த படம் கொஞ்சம் வித்யாசமாய், கடைசி சில நிமிடங்கள் அருமையாகவும், அதுக்கு முன் கொஞ்சம் இழுவையாவும், அதுக்கும் முன் மேலும் இழுவையாகவும், அதுக்கும் முன் ரொம்பவே இழுவையாகவும்.. well, you get my point.

ரெண்டு மணி நேரம், எந்த வித உணர்ச்சியும் பொங்காமல், ஒரு படத்தை பாப்பது ரொம்ப துரதிர்ஷ்டமான நிலை.

படத்தின் ப்ளஸ்,
1) விஷுவல்ஸ். என்னமா இருக்கு ஒவ்வொரு காட்சியும். அடேங்கப்பா. என்ன மாதிரி படம் புடிச்சுருக்காங்க. அதுக்காகவே கண்டிப்பா பாக்கலாம்.
2) விக்ரம் விக்ரம் விக்ரம். மிரட்டியிருக்காரு மிரட்டி. கியாரண்டீடாய்ச் சொல்லலாம். இந்தியில் இந்த பாத்திரம் அபிஷேக்குக்கு எடுபட்டிருக்காது. விக்ரம், பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஆனா, எல்லாமே எதுக்கோ இழைத நீர் மாதிரி, வீணாய் வழியுது.
3) ஐஸ் வழக்கம் போல் சூப்பர். வயசாயிடுத்து அம்மணிக்கு. ஆனாலும், அழகு. 14 நாள் காட்டுக்குள் இருக்கரவங்க மேக்கப்படுடன் பளிச்சுனே இருப்பது க்வொஸ்ட்டினபிள்!

குறைகள்:
1) திரைக்கதை? கொஞ்சம் மாத்தி கீத்தி காட்சி அமைச்சிருந்தா, மனசுக்குள் ஒரு உணர்ச்சி கிளர்ச்சியாய், படத்துடன் ஒன்றியிருந்திருக்கலாம்; அது இல்லாம, வெத்தாப் போச்சு ரெண்டு மணி நேரங்கள்
2) வசனம். குட்டி வசனம் மணி படத்துக்கு அழகு. ஆனால், இதில் பல இடங்களில் செயற்கையாய் டயலாக். பல இடங்களில் ஒன்னியும் புரியவும் இல்லை
3) விஷுவல்ஸ். வெரைட்டி இல்லாமல், காட்டுக்குளையே படம் முழுக்க பயணிக்குது. டூ மச்சாயிடுத்தோ?

என்னமோ போங்க.

வெயிட்டீஸ் ஃபார் த டிவிடி.

மற்ற விமர்சனங்கள்:
Surveysan in engilibeesh
அதிஷா
கருந்தேள் கண்ணாயிரம்
மோடுமுட்டி
தமிழ் பிரியன்
சுரேஷ் கண்ணன்
யுவகிருஷ்ணா
The Hindu (சொம்பு தூக்கல்)
kaviri maindhan
Cable Sankar
will add more..

5 comments:

智宜 said...

愛,拆開來是心和受兩個字。用心去接受對方的一切,用心去愛對方的所有。................................................................

SurveySan said...

@智宜
愛對方的!

செந்தில் குமார் வாசுதேவன் said...

http://beta.thehindu.com/arts/cinema/article472313.ece

இது நமக்குத் தோதான review பாஸ்.. இவருதான் உண்மையைச் சொல்றாப்ல..

SurveySan said...

yep. rightly said.

AkashSankar said...

நல்ல விமர்சனம்...