recent posts...

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருத்தி - திரைப் பார்வை

வழக்கத்தை விட அதிகமான டாலருக்கு கவுண்ட்டரில் டிக்கெட் வாங்கி படம் பார்த்து பல்பு வாங்குவது எமக்கொன்றும் புதிதில்லைதான். அந்த வரிசையில் ஆயிரத்தில் ஒருவனும் சேர்ந்தது என்பதை சொல்லப் பெரும் கடமைப் பட்டிருக்கிறேன்.
வெள்ளிக் கிழமை வரவேண்டிய பொட்டி வராததால், சனிக்கிழமை எட்டு மணி ஆட்டம் ஹவுஸ்ஃபுல். அதுக்கு டிக்கெட் கிடைக்காம 11 மணி ஆட்டத்துக்கு போயிருந்தோம்.
அம்பானிகள் திரையரங்குகளை வாங்க ஆரம்பிச்சிருக்கானுவ. எங்க ஊரு மொக்கை தியேட்டரை வாங்கியிருக்காங்க. வெளீல மட்டும் பளிச்னு பெயிண்ட் அடிச்சுட்டு, அரதப் பழசான ஸ்பீக்கரையும், ப்ரொஜெக்ட்டரையும் கொண்ட IMC6 Big Cinemasல ஆயிரத்தில் ஒருவன் பார்த்துத் தொலைத்தோம்.

மூணு வருஷம் முக்கி முக்கி எடுத்து, பைசாக்கு ப்ரயோஜனமில்லாத ஒரு அவுட்புட். செல்வராகவனின் கலீஜ் டச்-அப் ஆங்காங்கே. முச்சா போகும் ஹீரோயின்; பச்சை பச்சை வசனங்கள்; அரை நிர்வாண ஹீரோயின்கள்.

பல சேனல்களில், செல்வராகவனின், பேட்டிகளை பார்த்தபோது, என்னமோ தமிழர்களுக்கெல்லாம் நம்ம வரலாறும் நம்ம பராக்ரமும் தெரியாதுன்னும், அதை இந்தப் படம் எடுத்துக் காட்டி நம்மை எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கப் போவுதுன்னும் சொன்னாரு. நல்லா சிலிர்க்க வைக்கிறீங்கய்யா சிலிர்க்க.

சோழ மன்னன் தன் மகனை ஒரு பெருசுகிட்ட கொடுத்துட்டு, இவனை காப்பாத்துங்கன்னு சொல்லிட்டு பாண்டியர்களிடம் போர்ல தோத்துடறாரு. பையனோட சேத்து பாண்டியர்களின் குலதெய்வ சிலையையும் சோழ குரு எடுத்துக்கினு எங்கியோ கண்ணு காணாம போயிடறாராம்.
ப்ரதாப் போத்தன் இக்கால ஆர்கியாலஜிஸ்ட். இந்த சோழர்கள் எங்க போனாங்க என்ன ஆனாங்கன்னு தேடிக்கினு எங்கியோ வியட்நாம் தீவுல போயி, இவரும் காணாம போயிடறாரு.
இவருக்கு பின்னால், ரீமா சென், கார்த்தி, பிரதாப் மகள் ஆண்ட்ரியா போறாங்க.
இவங்க சோழர்களைப் பாக்கறாங்களா, அப்பரம் என்ன ஆகுது, எக்ஸ்ஸட்ரா எக்ஸட்ரான்னு, ஒரு நல்ல 'தீம்' தான் படத்துக்கு.

ஆனா, அந்த 'தீமை' திரைக்கு சரியாக கொண்டு வரத் தெரியாமல்,மூணு வருஷம் பிராண்டியதால், திரையில் ஒவ்வொரு காட்சியும் டோட்டல் டேமேஜ். நமக்கும் டோட்டல் எரிச்சல். சோழர்களையும், சோழ மன்னரையும் காட்டுமிராண்டி மாதிரி காட்டி மனசை வேர ரொம்பவே நோகடிச்சிட்டாங்க.

ரீமா சென், கார்த்தியுடன் சேந்து, 'அதோ அந்த பறவை போல', ரீமிக்ஸுக்கு குத்தாட்டம் போடரதுல இருந்து நம்ம நோகல் தொடருது.
வியட்நாம் தீவுக்கு படகில் போகும்போது வரும் கிராஃபிக் காட்சியை பார்த்ததுமே, $12 எள்ளுதான் என்பது விளங்கியது. ரூ35கோடி செலவாம். ஹ்ம்!
விட்டலாச்சாரியா படங்களில் கூட இதை விட இன்வால்வ்டா ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பண்ணியிருப்பாங்க.

கார்த்தி - மூணு வருஷம் , ஜம்முனு மூணு படத்துல நடிச்சுட்டு நிம்மதியா இருந்திருக்கலாம். உப்புச்சப்பில்லா ரோல் இவருக்கு. பல காட்சிகளில் பின்னுக்கு தள்ளப்பட்டிருக்கிறார். கடைசி 30 நிமிடம் மட்டுமே ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பிட்டிருக்கு.

ரீமா சென் - இவங்கதான் படத்தோட ஹீரோ! படம் முழுக்க வியாபிச்சிருக்காங்க. நல்லா திறமையை வெளிப்படுத்தியிருக்காங்க. ஒரு சில இடங்களில், வல்கரா இருந்தாலும், அருமையான நடிப்பு. வாய்ப்பை அருமையா உபயோகப்படுத்திக்கிட்டாங்க. அதிரடியா கலக்கியிருக்காங்க. படத்தில் உருப்படியான ஒரு விஷயத்தில், ரீமா சென்னும் ஒருவர். கார்த்தியை டம்மி ஆக்கிட்டாங்க பல இடத்தில்.

ஆண்ட்ரியா - படத்துல எதுக்கு இருக்கராங்கன்னே தெரியாம, பல காட்சிகளில், சும்மாகாட்டி வராங்க. கடைசி அரை மணி நேரம் காணாமயே போயிடறாங்க.

பார்த்திபன் - சோழ ராசாவா வராராம். கொமட்டிக்கிட்டு வருது சில காட்சிகளில். நம்ம கற்பனையில் இருக்கும், 'சுந்தர சோழரும், ராஜ ராஜரும்' புஸ்வாணமாக்கிய எரிச்சலோ என்னமோ, இவரை சுத்தமா புடிக்காம போயிடுச்சு. டான்ஸ் ஆடும்போதெல்லாம், ரெண்டு அரையலாம் என்றளவுக்கு எரிச்சல் வந்தது என்றால் மிகையல்ல.

செல்வராகவன் - 7G எனக்குப் பிடிச்ச படம். அதிலும் கூட வளைந்து நெளிய வைக்கும் 10 நிமிஷம். அதை கூட 'செல்வா' டச்னு மன்னிச்சு விட்டு, படத்தை பலதடவை பாத்திருக்கேன். புதுப்பேட்டை கூட பிடிச்சிருந்தது. வித்யாசமா எடுக்கணும்னு, இப்படி ஓவரா கோட்டை கட்டப் பாத்தது நல்ல விஷயம்தான். பாராட்டப் பட வேண்டியதும் கூட. ஆனா, கற்பனை குதிரையை ஒழுங்கா ஓட்டத் தெரியோணும். கலீஜ் குதிரையை அடக்கப் பழகோணும். ஒரு வரட்டு மைல் கல்லை எட்ட, இப்படி ரெண்டு குதிரையையும் கன்னா பின்னான்னு ஓட்டி, இம்சை படுத்தக் கூடாது. இனி வரும் படங்களிலாவது, அதிமேதாவித்தனத்தை குறைத்து, தன்னடகத்துடன், ஸ்க்ரீன்ப்ளேயை அணுகவும்.

சண்டைக்காட்சிகள் எல்லாம் இழுவை ரகம். ரத்த மணம்.
ஒரே ஆறுதல், ஒரு சில 'செட்'கள். குகைப் ப்ரதேசம், சோழ கட்டிடங்கள் எல்லாம் நல்லா பண்ணியிருக்காரு ஆர்ட் டைரக்டர். காட்டு வாசிகள், சோழர்கள்னு எல்லாரின் காஸ்ட்யூமும், நல்ல தரத்தில் இருந்தது.

படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள்; ஒட்டாத காட்சியமைப்புகள்;
செல்வராகவனுக்கு ரொம்பப் பிடிச்ச பல படங்களின் சிறந்த காட்சிகளை ரீமேக்கனும்னு நெனச்சு பண்ணியிருக்காரு போல. கிளாடியேட்டர், மெக்கனன்ஸ் கோல்ட், அப்போகாலிப்ஸ், அது இதுன்னு ஒவ்வொரு காட்சியை எடுக்கப் பாத்து, எல்லா காட்சியிலும் அரைகுறை அவுட்புட்.

நல்ல பாடல்களில், இரண்டு மட்டுமே படத்தில். ஜி.வி.பிரகாஷின் பாடல்கள் அருமையா வந்திருக்கு. பின்னணி இசையெல்லாம் கவனிக்க மூடே இல்லை. சோழரை காட்டும்போது, கிட்டார் அதிருது. என்ன லாஜிக்னு புரியல்ல.

11மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய படம், லேட்டா 11:30 ஆரம்பிச்சதாலும், முதல் ரெண்டு மணி நேரம், தொய்வின் உச்சத்தில் நகர்ந்ததாலும், கிளைமாக்ஸின் அரைமணி நேரம், ஒரு deep meditative stateல் இருந்ததால், திரையில் என்ன நடந்ததுன்னு சரியா ஞாபகம் கூட இல்லை. கார்த்தி, சோழ இளவரசரை தூக்கிக்கினு ஸ்க்ரீன் அப்படியே ஃப்ரீஸ் ஆகி, 'சோழ மன்னனின் பயணம் தொடரும்..' போட்ட போது, மொத்த தியேட்டர் கும்பலும், 'ஐயோ! போதும்யா போதும்"னு அலறியதும் தான், என் deep meditative stateல் இருந்து வெளியில் வந்தேன்.

ஹ்ம்! படத்துக்கு போறதுக்கு முன்னாடி விமர்சனம் படிக்காம போவணும் என்ற கொள்கையை ரிலாக்ஸ் பண்ணிக்கணும். முன்னாடியே மக்கள்ஸின் புலம்பலை படிச்சிருந்தா, சுதாரிச்சிருக்கலாம்.
இனி ஒன்னியும் பண்ண முடியாது, உங்களில் சிலரின் $12 காப்பாற்ற உதவுவதை விட.

32 comments:

SurveySan said...

same blood -> http://www.sridharblogs.com/2010/01/blog-post_17.html

Anonymous said...

//உங்களில் சிலரின் $12 காப்பாற்ற உதவுவதை விட.//

இங்கெல்லாம் $18.00.

படம் ஏமாற்றம்

பாலா said...

இங்க படமே கிடையாது! ஸோ நோ ப்ராப்ளம்.

--

ஆனா இப்படியெல்லாம் நீங்க எழுதியிருக்கக் கூடாது. அமெரிக்காவில் இந்தப் படம் ஃப்ளாப் ஆகப் போறதுக்கு காரணமே நீங்கதான்.

இப்படி யாராவது பின்னூட்டம் போடுவாங்க பாருங்க. ;) :) :)

SurveySan said...

சின்ன அம்மிணி,

$18 கொடுத்து பாத்திருந்தா, எனக்கு அழுகாச்சி அழுகாச்சியா வந்திருக்கும் :(

SurveySan said...

ஹாலிவுட் பாலா, நல்ல வேளை தப்பிச்சீங்க. இங்க மொத நாள் பொட்டி வரலன்னதும் தப்பிச்சிருக்கலாம். ஆனா, விதி வலியதாச்சே. இந்த காசுக்கு, 3idiots ரெண்டாவது தபா பாத்திருந்தா அட்லீஸ்ட் ஒரு feel good மனசாவது கெடச்சிருக்கும்.

pudugaithendral said...

செல்வராகவன் படப் பாட்டுன்னா கூட சேனல் மாத்திடுவேன். அவரு சினிமாக்கு போகும் வாய்ப்பில்லை என்பதால் தப்பிச்சேன்.

pudugaithendral said...

3idiots ரெண்டாவது தபா பாத்திருந்தா அட்லீஸ்ட் ஒரு feel good மனசாவது கெடச்சிருக்கும்.//

நான் பாத்துட்டேன் சூப்பர் படம். விமர்சனமும் போட்டாச்சுல்ல :))

SurveySan said...

புதுகைத் தென்றல், வெவரமானவங்க நீங்க. தப்பிச்சுட்டீங்க :)

SurveySan said...

படத்தயாரிப்பாளர் -- ""உங்க சோர்ஸை வைச்சு வேணும்னா விசாரிச்சுக்கங்க. திரையிடப்பட்ட வெளிநாடுகளில் இருந்தெல்லாம் முழுக்க பாராட்டுகளும் கலெக்ஷனும் குவிகிறது. தமிழகத்தில் எல்லா ஏரியாக்களிலும் நல்ல வரவேற்பு. எதெல்லாம் குறை என்று நினைச்சீங்களோ, அதையெல்லாம் வெட்டிட்டோம்"

http://tamilcinema.com/CINENEWS/Hotnews/2010/January/180110a.asp

Sridhar V said...

:)) நானும் ரொம்பவே பிரயாசைப்பட்டுட்டு போனேனே. சனிக்கிழமை மதியமே கிளம்பி 4:30 மணி காட்சிக்காக 60 மைல் பிரயாணம் செஞ்சு edisonல Big Cinemas போனா 7:30 மணிக்குதான் ஷோ. அதுவும் ஃபுல்லாயிடுச்சுன்னு சொல்லிட்டாங்க. அடிச்சு புடிச்சு North Bergenல 7:30 மணி ஷோக்கு புக் பண்ணிட்டு... இன்னொரு 40 மைல் பிரயாணம் செஞ்சு போனா... பொட்டி 8:30க்குதான் வருதுன்னுட்டாங்க. ஒருவழியா படத்த பாத்திட்டு இரவு வீடு வரும்போது 2 மணி ஐயா...

எவ்வளவோ நல்ல நாவல் எலலாம் வெற்றிகரமா வெளி வந்திருக்கும்போது கோடிகளை கொட்டி சினிமா எடுக்கிறவங்க மட்டும் ஏன் இப்படி கதையே இல்லாம படம் எடுக்கிறாங்கன்னுதான் ஆதங்கமா இருக்கு.

SurveySan said...

Sridhar, நீங்க செய்த ப்ரயத்தனத்தை பாத்தா, என்னுது எல்லாம் ஜூஜூபி போலருக்கே :)
இவ்வளவு தீவிர ரசிகரா நீங்க செல்வாக்கு. அந்தோ பரிதாம் ;)

அவதாரை கேள்வி கேக்காதவங்க, என் படத்தில் ஏன் நொட்டை சொல்றீங்கன்னு கேக்கறாராம் செல்வா. என்னத்த சொல்ல.

Ananya Mahadevan said...

Deep Meditative State - LOL. epdi ipdi ellaam? naan innum padam pakkalai, ungaloda, sridhar vimarsanam ellam padichuttu padatha skip pannitten.

SurveySan said...

அநன்யா,


தப்பிச்சுட்டீங்க. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே, புத்திசாலித்தனமான முடிவை எடுத்ததுக்காக பாராட்டுக்கள் :)

SurveySan said...

மாற்றுக் கருத்து - http://sabaritamil.blogspot.com/2010/01/blog-post.html

SurveySan said...

///டான்ஸ் ஆடும்போதெல்லாம், ரெண்டு அரையலாம் என்றளவுக்கு எரிச்சல் வந்தது என்றால் மிகையல்ல. ///

ஐ ஆம் த சாரி. உணர்ச்சி வசப்பட்டுட்டேனோ? :)

SurveySan said...

இன்னொரு மாற்றுக் கருத்து.


http://www.maalaimalar.com/2010/01/15125025/CNI02901501010.html
**தீவுக்குள் ஆற்றை கடக்கும் போது வெளிச்சத்தை உமிழ்ந்தபடி ஒரு வகை உயிரினம் தண்ணீரில் மிதந்தும் பறந்தும் வந்து ரத்தம் உறிஞ்சி சாகடிப்பது உதறல்.**

SurveySan said...

Aayirathil Oruvan success meet

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14927881

:)

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) said...

சர்வேசன்,
//டான்ஸ் ஆடும்போதெல்லாம், ரெண்டு அரையலாம் என்றளவுக்கு எரிச்சல் வந்தது என்றால் மிகையல்ல. //
எனக்கும் அப்படி தாங்க இருந்துது ! நானும் உங்கள மாதிரி தான் விமர்சனம் எழுதி இருக்கேன்.

SurveySan said...

வந்தியத்தேவன், நன்றீஸ். இப்ப நிம்மதியாருக்கு :)

Ramesh Ramasamy said...

இந்தா அந்தானு, பொங்கலுக்கு ரிலீஸ் பண்றாங்கன்னு பார்த்தா, ரொம்ப பொங்க வச்சு, கருக்கிட்டாங்க போல!

நல்லவேளை, 2 டிக்கெட் இருந்தும் ‘AMC' க்கு போயி, வேஸ்ட் பண்ணல...


விண்ணைத்தாண்டி வருவாயா’ பார்க்கலாம்னு இருக்கேன் ( வந்தாதான் :)

vetti said...

Annaathey....neenga yaaro ennamo theriyaadhu...aana indha pada review-ai pottu Thamizh samoohathukku oru periyya thondu aattriyirukkeenga...by the by I am Ananya's sister...naanum andha padathai velai menakkettu en veettukkaararoda poyi theatre-la paarthen....140 rubaaikku enakku annikku night kedaichadhu 103 degree juram...avvlow blood shed avvlow abatham....ivanga sollra maadhiri Sozhargal kaattu miraandigalum kedaiyaadhu, paandiyargal maanam ketta dhrogigalum kedaiyaadhu....motthathula Andhra-la Telengana prachanai maadhiri indha padathaala madurai kaarangalukkum Thanjavur kaaranglakkum prachanai varaama irukkanum...next day night "National Treasure" paarthu dhaan indha saavu theettellaam kazhichen...

SurveySan said...

ரமேஷ், தப்பிச்சீங்க :)

SurveySan said...

Narmadha, வருகைக்கு நன்றீஸ். உங்களை காப்பாத்த முடியாததை எண்ணி எண்ணி வேதனைப் படுகிறேன். இனி வரும் படங்களை முதல் நாள் முதல் ஷோ பார்த்து, ஜனங்களின் $களை காப்பாற்ற வழி வகை செய்யப்படும் ;)

தென்றல் said...

IMC6ல் பின்னனி இசையே இல்லாமல் பார்த்த படம், 'அச்சமுண்டு அச்சமுண்டு'! அந்த திரையரங்கில் முதலும் கடைசியாக பார்த்த படம்! இன்னும் மாறலபோல...!!

/உங்களில் சிலரின் $12 காப்பாற்ற உதவுவதை விட./
நன்றி! ;)
5 டாலருக்கு வேற திரையரங்கில் போடும்போது பார்க்கணும்..:)

SurveySan said...

////5 டாலருக்கு வேற திரையரங்கில் போடும்போது பார்க்கணும்..:)
////

$5 கூட ஓவருதான். உஷாரு ;)

SurveySan said...

மாயோன் என்ற பதிவர் பரிசலின் பதிவில் இட்ட பின்னூட்டம்.


http://www.parisalkaaran.com/2010/01/blog-post_14.html#comment-1398229288840943660
மாயோன் !
16 January 2010 1:36 PM
படம் பார்த்தவர்களுக்காக மட்டும் எழுதி இருக்கிறேன்.. பார்த்தவர்கள் மட்டும் மேலே படிக்கவும்..

ஒரு மொக்கை கதையை இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்க படக்குழுவினர் அரைகுறைகள் இல்லை..

சொல்லவந்த உருக்கமான உறையவைக்கும் கதையை மேலே மெழுகு தடவி.. விறுவிறுப்பு ஏற்ற சில அம்புலிமாமா டைப் வியுக அலங்காரங்கள் சேர்த்து சொல்லி இருக்கிறார்கள்..

கதை இது தான்..

கடுமையான போரில் தமது மண்ணை இழந்த கூட்டம் ஒன்று என்றாவது தாயகம் திரும்புவோம் என்ற நம்பிக்கையை உணவாக்கி கண்காணாத இடத்தில் பதுங்கி கிடக்கிறது.. தாயகம் திரும்ப வேண்டிய வழியை உரைக்க - தூது வரும் - என்றுகாத்துக்கொண்டு தம்மை சுற்றி பாதுகாப்பு அரண் ஏற்படுத்திகொண்டு வாழ்கிறது..

யாரும் சுலபமாக அவர்களை நெருங்கி விட முடியாது.. நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தூது ஒன்று வந்து சேர்கிறது.. அந்த தூது சொல்லவதை நம்பி மறைவிடம் விட்டு வெளியேறியபின் தான் தெரிகிறது -தலைமை துரோகிகளிடம் ஏமாந்துவிட்டது என்று..

அசுர பலமும், சர்வ வல்லமையும் கொண்ட எதிரிகளிடம் நடக்கும் பொருந்தாத போரில் மோதி.. கடைசி வரை போராடுகிறார்கள்.. இழப்பு..இழப்பு.. தாங்கமுடியாத இழப்பு.. இறுதியில் தோற்று சிறை எடுக்கப்பட்டு அவமான படுத்தப்பட்டு.. தலைவன் இறக்கின்றான்.. தலைமை அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு அடுத்தகட்ட போராட்டததுக்கான நம்பிக்கை விதைக்கப்படுவதுடன் முடிகிறது கதை..

எல்லோரும் சொல்வது போல அவ்வளவு விறுவிறு முன்பாதி தந்த இயக்குனருக்கு.. பின்பாதி இப்படி தர என்ன அவசியம்?

முதல் பாதி நம்மை ஆயத்தப்படுத்த வரும் விறுவிறு/துருதுரு அட்டைப் படம் / முன்னுரை..
இரண்டாம் பாதி தான் சொல்லவந்த கதை..

பட ஆரம்பைதிலேய சொன்னபடி.. உண்மையான சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இந்த கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை.. இங்கே அவர்கள் வெறும் உவமைகள்..

நிகழ்காலவரலாறு - அதுவே சற்று குழப்பமானது தான் - அதை சற்று படத்தோடு பொருத்தி பாருங்கள் - சொல்லவந்த செய்தி என்னவென்று புரியும்..

Gowrisankar M said...

உங்களுக்கு வேட்டைக்காரன் மாதிரி தான் பிடிக்குமோ (தமாசுக்கு ஹீ ஹீ) முதல் பாதி ஏற்படுத்திய வேகமும் ௧௨$ சோகமும் உங்களை எதிர்பார்ப்பின் உச்சகட்டத்துக்கு அழைத்து சென்றதுதான் பிரச்சினை போல.

ஸ்பீல்பெர்க் கமேரூன் போன்று எண்ணி படம் பார்த்தல் ஏமாற்றமே மிஞ்சும்.

நாம் இன்னும் இது போன்ற படங்களுக்கு கத்துக்குட்டிகள் தான்.

மேம்படுத்தப்பட்ட நுட்பமும் அனுபவமும் இணைந்து இது போன்ற படங்கள் இன்னும் வர வாய்ப்புகள் உண்டு. "வழக்கம் போல" இல்லாமல் இருந்ததே மகிழ்ச்சி.

சிறந்த முயற்ச்சிக்கு படக்குழுவினரை நிச்சயம் பாராட்டலாம். இப்படி திட்டி நோகடிக்க வேண்டாமே. உங்கள் பதிவுகளை கூகிள் ரீடர்-இல் தினமும் பாலோ செய்கிறேன். நல்ல பதிவுகள். இது ஒன்று மட்டும் நெருடியது அதனால் தான் எழுதுகிறேன். புண்படுத்த அல்ல. :)

SurveySan said...

GShan, வருகைக்கு நன்றி.

////முதல் பாதி ஏற்படுத்திய வேகமும் ௧௨$ சோகமும் உங்களை எதிர்பார்ப்பின் உச்சகட்டத்துக்கு அழைத்து சென்றதுதான் பிரச்சினை போல.////

:) முதல் பாதியும் எரிச்சல்தான். மாடர்னா எடுக்கறேன் பேர்வழின்னு, அருவறுப்பை கூட்டியதுதான் மிச்சம்.
ஒரு சீன்ல, ஹீரோவும் ரெண்டு ஹீரோயின்ஸும் தேவையில்லாம திடீர்னு அசிங்க அசிங்கமா திட்டி சண்டை போட்டுப்பாங்க. எ.கொ.ச இது?

///ஸ்பீல்பெர்க் கமேரூன் போன்று எண்ணி படம் பார்த்தல் ஏமாற்றமே மிஞ்சும். ////

கண்டிப்பா இல்லை. ஆனா, அட்லீஸ்ட் ஒரு 23ஆம் புலிகேசி, அருந்ததி, ஏகலவ்யா லெவலுக்காவது விஷுவல் இருக்கும்னு நெனச்சேன்.

////"வழக்கம் போல" இல்லாமல் இருந்ததே மகிழ்ச்சி. ///

இது ரைட்டு! கண்டிப்பா மகிழ்ச்சி தான். ஆனா, புது முயற்சி செய்யும்போது, ஓரளவுக்கு திருப்திகரமா கொடுத்திருக்கலாம் என்பதே வருத்தம். புலிகேசி போல்.

////சிறந்த முயற்ச்சிக்கு படக்குழுவினரை நிச்சயம் பாராட்டலாம். இப்படி திட்டி நோகடிக்க வேண்டாமே/////

கண்டிப்பா பாராட்டணும். பாராட்டியும் இருக்கேனே. ஆர்ட் டைரக்டரை :)
காசு கொடுத்து பார்ப்பதால், விமர்சனம் செய்யும் தகுதியை நாம் அடைகிறோம் என்பது என் கருத்து.
ஆஹா ஓஹோன்னு பாராட்டிட்டா, அவங்க யோசிக்காம அடுத்த படத்தை இதே மாதிரி மொக்கையா எடுத்துட்டா என்ன பண்றது :)
பார்த்தீபனை மட்டும் கொஞ்சம் ஓவரா விமர்சனம் பண்ணிட்டேன். அதுக்காக ஐ ஆம் த சாரி.////திவுகளை கூகிள் ரீடர்-இல் தினமும் பாலோ செய்கிறேன். நல்ல பதிவுகள்.////

தன்யனானேன்! நன்றீஸ்! :)

Ananya Mahadevan said...

thala, idhu logic ottaiyaa ille naa paartha online videovula cuttaa theriyala, second half la andreavukku eppudi namma reema matter theriyudhu? padam mahaa abathama irundhadhu. second half javvo javvu. neenga sonnaapla enakkum parthiban karthi dance sequences la semmaiya erichal vandhadhu. ennaiyum ariyaama 'porum pongadaa'nnu sonnen. second half la screenai vida maniyappaarthadhu thaan jaasti. yappaa.. mudiyala

Unknown said...

nanun itha padathai irandu thadavai. enakum padam avvalavaga pudikavillai. muthal thadavai aarvathin perinal parthen ennal katchigalil ondra mudiyavillai.aagayal than irandavathu thadavai.anal padam puthithaga muyandrathuku parattai thatti selgirathu.logic ottaigal pala idathil therigirathu.neengal solvathu pol sozhargalai kattu mirandigalaga katti iruka vendam.anal ivvalavum hollywood pada katchi amaipugalil kanal pogirathu.

Annamalai Swamy said...

இப்படத்தை பற்றிய என் பதிவு http://manipuram.blogspot.com/2010/01/blog-post_24.html

SurveySan said...

Charu - //திடீரென்று சாம்பாருக்குள்ளிருந்து பீட்ஸா துண்டுகள் எட்டிப் பார்ப்பதைப் போல. மேற்கண்ட இரும்புக் குண்டு காட்சி க்ளாடியேட்டர் படத்திலிருந்து உருவியது.//

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=2498

interesting read. :)