recent posts...

Tuesday, November 20, 2007

அழுகிய தமிழ் மகன்!

லக்கியாரின் பொல்லாதவன் விமர்சனம் பாத்துட்டு, சரி பொல்லாதவன் போய் பாக்கலாம்னு கும்பலா கெளம்பினோம்.
ஆனால், தியேட்டர்ல, அழகிய தமிழ்மகனும், வேலும் போட்டிருந்தாங்க.
பொல்லாதவன் ரொம்ப தள்ளியிருக்கர இன்னொரு தியேட்டர்ல ரிலீஸாம், அந்த தியேட்டர் ரொம்ப 'டொக்கு'ன்னு வேற சொல்லிட்டாங்க.

சரின்னு, ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கைல, அழகிய தமிழ்மகன் போயிடலாம்னு முடிவு பண்ணி டிக்கட் வாங்கிட்டுப் போய் ஒக்காந்தோம்.
படத்த பத்தி விலாவாரியா விமர்சனம் எழுதத் தெம்பில்ல. அதனால, ஹைலைட்ஸ் மட்டும்.

கதை: ESP திறம் கொண்ட ஹீரோ (நடக்கப் போரத முன்கூட்டியே அறியும் திறமையாம்). அப்பப்ப மண்டைய வலிக்கும் ஹீரோக்கு. எதிர்கால நிகழ்வுகள் நெகடிவ் எபெக்டுல மின்னி மின்னி தெரியும். அதனால் நடக்கும் விஷயங்கள், ப்ரச்சனைகள் எப்படி எதிர்கொள்றார்னு கத.

o டாக்டர் விஜய்னு பேர் போட்டு, தஸ் புஸ்னு DTS சவுண்டு விடும்போதே, பாதி காசு அவ்ளவுதான்னு புரிஞ்சுடுச்சு.
o வழக்கம் போல, ஹீரோ, பைக்ல சர்னு வந்து ஒரு சண்ட போட்டு இண்ட்ரொடக்ஷன்.
o ஓட்டப் பந்ததய வீரராம் விஜய். ஆனால், கால் கொஞ்சம் வீக்கா இருக்கர மாதிரி தெரிஞ்சுது, அவரு அர-ட்ரவுஸர் போட்டுக்கிட்டு ஓடும்போது. என் கண்ணுல ப்ராப்ளமான்னு தெரியல :)
o ஹீரோயின் ஷ்ரெயா அழகு. ஹீரோ ஹீரோயின் காதல் உருவாகும் மேட்டரெல்லாம் சுத்தமா எடுபடல.
o விஜய்க்கு உடம்பில் ESP ஏறினதும், தலைவலி வரும், அதன் கூடவே வரும் நெகட்டிவ் எஃபெக்ட் பறவால்ல. அடடா, புதுசா இருக்கே மேட்டருன்னு பாத்தா, ESP வச்சு ஒண்ணும் interestingஆ டைரக்டர் தரல. காமெடியா கொண்டு போயிருந்தா நல்லா எடுபட்டிருக்குமோ என்னமோ.
o ஏ.ஆர்.ரஹ்மான் ஓ.கே. மதுரைக்கு போகாதடி, நல்லா இருந்தது. ஒருவன் ஒருவனுக்கேன்ற கத்தலும் சூப்பர்.
o முதல் டிக்கெட்டு விடலைகள் ரெண்டு, ஸ்க்ரீன் கிட்ட போய் ஆடிச்சு ஃபுல் போதைல. ஸ்க்ரீன்ல விஜய் வரும்போதெல்லாம் தடவி தடவி பாத்துக்கிட்டு பேரின்பம் கெடச்ச மமதிரி கத்திச்சு. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு, லுங்கிய தலைக்கு மேல சுத்தி ஓவர் எந்த்துவா ஆடினதால, முதுகுல ரெண்டு சாத்து சாத்தி முழு மரியாதையோட, வெளில தூக்கி கடாசினாங்க. ஐயோ பாவம்.
o 'cigarrette smoking is injurious.. blah blah blah' னு பேர் போடும்போது போட்டாங்க. தேவையில்லாம விஜய் ரெண்டு சீன்ல தம்மு பத்த வக்கர சீன். அதப் பாத்து, ஒரு விடலை, தியேட்டர்ல தம்ம அதே மாதிரி பத்த வச்சுக்கிட்டு நடூல ஒரு டான்ஸு. செம கப்பு. அவருக்கு சரியான மரியாத கொடுக்காம விட்டுட்டாங்களேன்னு வருத்தமா போயிடுச்சு ;)
o தேவையே இல்லாம, தம்மு அழகா பத்த வெச்சு, ஒரு நல்ல inspiration கொடுத்த டாக்டர்.விஜய்க்கு ஒரு ஜே! (கஷ்ட காலம்! சீ சீ!)
o ஷ்ரெயா அழகு. ஏற்கனவே சொல்லிட்டனோ? இருந்தாலும் பரவால்ல.
o படத்தின் ஒரே ஆறுதல், நமீதா. அந்த Saturday Night பாட்டு அமக்களம்.
o விஜய் டபுள்-ஏக்ட். ரெண்டாவது விஜய், அச்சு அசலா இவர மாதிரியே இருப்பாரு. அதே மூணு நாள் தாடி. ட்ரெஸ் மட்டும் வேர. ஸ்ஸ்ஸ்.

o விஜய் மசாலா ஹீரோவா இருக்கரது ஓ.கே தான். ஆனா, இந்த மாதிரி சத்தே இல்லாத படமெல்லாம் அவாய்ட் பண்றது நல்லது.

மொத்தத்துல, நமீதா பாட்டுக்காக ஒரு 25 ரூ கொடுக்கலாம். அதுக்குமேல குடுத்து இந்த படம் பாக்கரது நேர விரையம்.

அ'ழு'கிய தமிழ் மகன் ~ Don't wait for DVD/VCD! Skip it!!

;)

11 comments:

SurveySan said...

test

இராம்/Raam said...

ஐயோ பாவம்...... :((

நாப்பது ஓவா கொடுத்து DVD வாங்கி பார்த்து அதை காறிதுப்பி சுக்குநூறா ஒடச்சி போட்டு, அந்த கருமத்தை பத்தி பதிவொன்னு போட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மறக்க நினைச்சிட்டு இருக்கேன்... மறுபடியும் ஞாபகப்படுத்திட்டிங்க :(

இந்தமாதிரி அழகான படங்களை எடுத்தா தமிழ் திரையுலகத்தை காப்பத்தமுடியுமா'ன்னு சர்வே எடுங்க... :)

SurveySan said...

//அந்த கருமத்தை பத்தி பதிவொன்னு போட்டு அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா மறக்க நினைச்சிட்டு இருக்கேன்//

:) same blood!

Anonymous said...

;)
இந்த படம் எல்லாம் பார்த்து விமர்சனம் எல்லாம் எழுதுறீங்களே...நீங்க ரொம்ப நல்லவர்.நான் படத்தை சில நிமிடங்கள்தான் பார்த்தேன்.அதுக்கு அப்புறம் பார்க்குற பொறுமை எனக்கு இல்லை :)).நான் எஸ்கேப்

Veera said...

சந்தானம் காமெடி பரவாயில்ல. டைட்டில்ல டாக்டர் விஜய் னு போட்டது, அத விட காமெடியா இருந்தது

SurveySan said...

dhurga,

//நான் எஸ்கேப்//


Good decision :)

Sundar,
//சந்தானம் காமெடி பரவாயில்ல. டைட்டில்ல டாக்டர் விஜய் னு போட்டது, அத விட காமெடியா இருந்தது//

:) namma thalai ezhuthu yaaralayum maatha mudiyaadhu. ellaam neram. Doctoraam. atleast, andha pattam kuduthapparamaavadhu konjam dhammellaam adikkara scene illaama paathirukkalaam. sodhappals.

Anonymous said...

அழகிய தமிழ் மகன் பத்தின என்னோட கருத்துக்கள் இங்க!

Anonymous said...

It is best film in diwali releases..To comre to vel and Pollathavan

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சர்வேசன்!
காசு கொடுத்துப் பார்க்காமல் நான் காறித் துப்பியது இந்தப் படத்திற்கே.
இங்கே எங்கள் புறோட்பாண்டில் , பேர்சனல் ரிவி, என்பதில் வேண்டியதை
40யிபி பதிவு செய்யும் வசதி உண்டு.
சில ரசிகமணிகள் அதைப் பதிந்து
விடுவதால், பல படங்களை
இலவசமாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது.ஓரளவுக்கு நல்ல பிரதிகள்.
பழைய படங்கள் பிரமாதமான பிரதிகள்
வேல்,மச்சக்காரன்,ஓரம்போ எல்லாம் கிடக்கிறது.
காந்தி ஆங்கிலப்படம் கூட ஒரு அன்பர் இட்டுள்ளார்.கிட்டத் தட்ட கூகிள்விடியோ போல்

SurveySan said...

johan-paris,

//பேர்சனல் ரிவி, என்பதில் வேண்டியதை
40யிபி பதிவு செய்யும் வசதி உண்டு.
சில ரசிகமணிகள் அதைப் பதிந்து
விடுவதால், பல படங்களை
இலவசமாகப் பார்க்கக் கூடியதாக உள்ளது//

'ரசிகக் கண்மணிகள்' இல்லைங்க அவங்க, காப்பிரைட்-வயலேட்டர்ஸ் :)

நானும் பாத்துருக்கேன் அந்த தளங்களை. இப்பெல்லாம் அதுல படம் பாக்கரவங்களுக்கும் அப்பப்ப ரேண்டமா செக் பண்ணி கவனிக்கறாங்களாம்.
பாத்துக்கங்க :)

அ.த.ம மாதிரி படங்கள அங்க பாக்கரதுல தப்பே இல்லைன்னு நெனைக்கறேன் ;)

Anonymous said...

福~
「朵
語‧,最一件事,就。好,你西.......................................................................................................................................................................................................................................................................................................