recent posts...

Sunday, January 28, 2007

நேயர் விருப்பம் சர்வே2 - சாய் பாபாவும், கருணாநிதியும், நீங்களும், நானும்..

முதல் நேயர் விருப்ப சர்வேயின் அமோக வெற்றியைக் கண்டு, "ஆஹா நம் சந்தேகத்தை போக்க இப்படி ஒரு வழி இருக்கா", என்று துள்ளிக் குதித்து ஒடி வந்த பதிவர் ஒருவர் தனக்காக ஒரு சர்வே போட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

சர்வே கமிட்டில form fiல் அp பண்ணிக் குடுத்து, அப்ரூவல் வாங்கியாச்சு.

அதாகப்பட்டது, நமது மதிப்புக்குரிய முதல்வர் கருணாநிதி அவர்களை, பெரு மதிப்புர்க்கிரிய சாய் பாபா அவர்கள் சமீபத்தில் சந்தித்து 200 கோடியை கொடுத்ததும் அல்லாமல், மாய மோதிரம் எல்லாம் "அண்டாகாகசம், அபூகாகசம்" சொல்லி வரவழைத்துக் கொடுத்தது அனைவரும் அறிந்ததே.

நமது வலையுலகிலும், சாய் பாபா அவர்கள், மோதிரம், விபூதி, செயின், லிங்கம் எல்லாம் எப்படி manufacture பண்ணி, எப்படி distribute பண்ணி டிஸ்கி விடுகிறார் என்று விலாவாரியாக பல பதிவர்களும் பதிவிட்டார்கள்.
எதிர் அணித் தலைவரும், சற்றே மனம் தளராமல், தன் சார்பாக, முடவர்கள் நடக்கும், கண் பார்வையற்றவர்கள் பார்வை பெறும் நாடக விழாவை தலைமை ஏற்று நடத்தும் திருவாளர்.தினகரனின் டிஸ்கியையும் விலாவாரியாக பதிவிட்டார்.

அதெல்லாம் சரிதான். இப்ப கேள்வி என்னன்னா, சாய்பாபா ~ கருணாநிதி மீட்டிங்/கோடி/டிஸ்கி/mrs.கருணாநிதி காலில் விழுந்தது/துரைமுருகன் மோதிரம்/தயாநிதி மோதிரம்2, இதெல்லாம் நடந்த பிறகு, நம் பதிவுலக வாசகர்களின் மனநிலை என்ன?

யோசிச்சு வாக்குங்க:

நன்றி. ( யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல. புண்பட்டால், burnol போடவும். oops, i mean, மன்னிக்கவும்)
பி.கு1: என் தனிப்பட்ட அபிப்ராயம். சாய் பாபாவை பொறுத்த வரையில், அவர் நிறுவி இருக்கும் அரக்கட்டளையின் சார்பாக பலருக்கு நன்மை விளைவதாகவே தெரிகிறது. சிலருக்கு அப்பப்போ தீமை விளைவதாகவும் செய்திகள் வருகின்றன. ஒரு பெரிய ஸ்தாபனத்தில் சின்ன சின்ன cracks இருக்கத்தான் செய்யும். விபூதி, மோதிரம், லிங்கம் எல்லாம் 25 வருடத்திர்க்கு முன் கூட்டம் சேர்க்க செய்திருக்கலாம்.
அதை இந்த விஞ்ஞான உலகில் slow-motion camera முன்னிலையில் தொடரத்தான் வேண்டுமா? அதை தவிர்க்கலாம். சிறு பிள்ளைத்தனம். இல்ல, உண்மையாவே மக்களை ஏமாற்றும் எண்ணமா?

உண்மையான 'சாய் டிவோடி' யாராவது இந்த டிஸ்கி விடுவதர்க்கு என்ன காரணம் என்று, சீரியஸாக எடுத்து சொன்னால் நன்றாயிருக்கும்.

எனக்குத் தெரிந்த காரணம், ஆரம்பித்தில் கும்பல்/பக்தர் சேர்க்க செய்ததாயிருக்கும். ஏசு பிரானும், தண்ணீரின் மேல் நடந்ததாக படித்திருக்கிறேன் - Is that to prove a point? தெரிஞ்சா சொல்லுங்க.

பி.கு2: request அனுப்பிய பதிவர் அவர்களே, $200 மணி ஆர்டர் அனுப்பி வச்சுடுங்க agreement படி :)

17 comments:

SurveySan said...

ரிப்பன் கட்டிங்.

SurveySan said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க :)

கொஞ்சம் ட்விஸ்ட் பண்ணி என் ஸ்டைல்ல போட்டிருக்கேன். அவ்வளவே.

நீங்கள் கொடுத்த சாய்ஸ் இது. கிட்டத்தட்ட மேட்ச் ஆவல? :)

மேட்ச் ஆகலன்னா, மன்னிக்கவும் :(

//
1. நான் சாயிபாபாவை கடவுள் என்று நம்புபவன். அவர் கருணாநிதி வீட்டிற்குச் சென்றது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது.
2. நான் சாயிபாபாவை கடவுள் என்று நம்புபவன். அவர் கருணாநிதி வீட்டிற்குச் சென்றது எனக்கு அதிர்ச்சியாக இல்லை.
3. நான் சாயிபாபாவை மதிப்பவன். அவர் கருணாநிதி வீட்டிற்குச் சென்றது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் மேல் இருக்கும் மதிப்பு குறைந்திருக்கிறது.
4. நான் சாயிபாபாவை மதிப்பவன். அவர் கருணாநிதி வீட்டிற்குச் சென்றது எனக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அவர் மேல் இருக்கும் மதிப்பு குறையவில்லை.
5. நான் சாயிபாபாவை மதிப்பவன். அவர் கருணாநிதி வீட்டிற்குச் சென்றதால் அவர் மேல் எனக்கு மதிப்பு கூடியிருக்கிறது.
6. நான் சாயிபாபா போலியானவர் என்று எண்ணுகிறேன். ஆனால் அவர் கருணாநிதி வீட்டிற்குச் சென்றதில் எனக்கு அவர் மேல் மதிப்பு கூடியிருக்கிறது.
7. நான் சாயிபாபா போலியானவர் என்று எண்ணுகிறேன். அவர் கருணாநிதி வீட்டிற்குச் சென்றது அவர் போலி என்பதை உறுதிபடுத்திவிட்டது.
8. எந்த கருத்தும் இல்லை.
//

?

SurveySan said...

சர்வே request அனுப்பிய பதிவர், நான் அவர் கூறிய மாதிரி பதிவு போடவில்லை என்று வருத்தப்பட்டு, கீழுள்ளதைச் சொல்லி இருக்கிறார்.

///
சர்வே சன். நான் கேட்ட கேள்விகள் இவை இல்லையே. உங்கள் சர்வே கமிட்டி முழுக்க முழுக்க எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அதனால் இது நேயர் விருப்ப சர்வே இல்லை என்பது எனது தாழ்ந்த அபிப்ராயம். :-)

என் சர்வேயை நானே இட்டிருக்கவேண்டும். உங்களிடம் கேட்டு அதனை இப்படி குதறி எடுப்பீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை. நடத்துங்க. நடக்கட்டும். :-(
//

so, இந்த சர்வே, இனி சர்வேசனின் விருப்பமாக நாமகரணம் சூட்டப் படுகிறது.

சார், உங்க பேரையும் நீக்கிவிட்டேன். உங்களுக்கு ஓகேன்னா, உங்க கருத்தை பின்னூடுங்கள், பதிகிறேன் :)

Sai Devotee 1970s said...

இந்தப் பதிவில் இருக்கும் முதல் தகவல் பிழை - சாயிபாபா கருணாநிதியைச் சந்தித்து 200 கோடி கொடுத்ததாக சொல்லியிருப்பது. சாயிபாபா கருணாநிதியிடமோ தமிழக அரசிடமோ இந்த சந்திப்பில் எந்த பணமும் கொடுக்கவில்லை. ஏற்கனவே 2005ல் முடிந்த கால்வாய் பணிக்கு சாயி சென்ட்ரல் ட்ரஸ்ட் 200 கோடி செலவழித்தது. அதற்குத் தான் சென்னையில் சாயிபாபாவிற்கு நன்றி சொல்லும் விழா நடைபெற்றது. சென்னைக்கு அவர் நிறுவனம் நடத்தும் யாகத்திற்கு வந்த சாயிபாபா முதல்வரை சந்தித்தார். அதே நேரத்தில் நன்றி சொல்லும் விழாவும் நடைபெற்றது. அப்படி இருக்க ஏதோ இந்த முறை சாயிபாபா தேடிவந்து கருணாநிதியிடம் பணத்தைக் கொடுத்தது போல் எழுதியிருப்பதிலிருந்து தொடங்குகிறது உங்கள் பதிவின் தகவல் பிழைகள். எல்லாவற்றையும் எடுத்துச் சொல்லி என் நேரத்தை வீணாக்க விருப்பமில்லை. தானே உண்மைகள் மக்களுக்குத் தெரியட்டும். நீங்கள் தவறாக எழுதியதால் உண்மை அறிந்தவர்கள் மாறிவிடப்போவதில்லை. நான் எல்லாவற்றையும் எடுத்துக் காட்டுவதால் தவறாக எண்ணுபவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை.

SurveySan said...

//ஏற்கனவே 2005ல் முடிந்த கால்வாய் பணிக்கு சாயி சென்ட்ரல் ட்ரஸ்ட் 200 கோடி செலவழித்தது.//

உண்மைதான். தவறை திருத்தியதர்க்கு நன்றி. (I will fix it).

சாய்பாபா மோதிரம், விபூதி எல்லாம் வரவழைத்துக் கொடுப்பதை miracle என்று நீங்கள் நம்புகிறீரா? நம்பவில்லையென்றால், ஏன் அப்படி செய்கிறார் என்று நினைக்கிறீர்கள்?

நையாண்டி அல்ல. சீரியஸ் question.
நன்றி!

Sai Devotee 1970s said...

http://saibhajans.blogspot.com/2007/01/blog-post_22.html#comments

http://sathyasaivideos.blogspot.com/2007/01/blog-post_771.html#comments

இந்தப் பதிவுகளில் வந்த அனானி பின்னூட்டங்களுக்கு என் கருத்துகளை பதிலாகச் சொல்லியிருக்கிறேன். உங்களின் நையாண்டி இல்லாத சீரியஸ் Questionக்கு பதில் கிடைக்கலாம்.

SurveySan said...

sai devotee,

உங்கள் பதிவில் இருந்த அனானி கேள்வியையும், உங்கள் பதிலையும் படித்தேன். பக்குவமான பதில்.
அதை இங்கேயும் கட்/பேஸ்ட் செய்துள்ளேன். நீங்கள் சொல்வது புரிகிறது.
என்னைப் பொறுத்தவரை சாய்பாபா செய்வது miracle கிடையாது.

ஆனால், இந்த 21ஆம் நூற்றாண்டில், கிருஷ்ணனும், ஏசுவும், அல்லாவும் உண்மையாகவே நேரில் தோன்றி நாந்தான்யா கடவுள் என்று சொன்னால் கூட ஒருவரும் நம்பப்போவதில்லை. ஏதாவது ஒரு மேஜிக் காட்டினால்தான் நம்புவார்கள் என்பதுதான் உண்மை :)

----------
//சாயிபாபா மோதிரம்/லிங்கம்/விபூதி வரவழைப்பது உண்மையா இல்லையா? //

உண்மை. இவை மட்டுமில்லை. உயிருள்ள பொருட்களையும் இவரை சோதிக்க வந்தவர்களிடம் வரவழைத்துக் காட்டியிருக்கிறார்.

இது பகுத்தறிவுக்கு எட்டாத விஷயமா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? இன்னும் அறிவியலால் கண்டுபிடிக்க முடியாததாக இருக்கலாம் அல்லவா?

நீங்கள் சொல்லும் முறைப்படி தான் சாதாரணமாக தங்கம் கிடைக்கும். அது தான் விதி. விதி என்றால் விதி விலக்குகளும் இருக்கும். அது சாயிபாபா உருவாக்கும் தங்கமாக இருக்கக் கூடாதா?

//ஆனால் பாபா மந்திரத்தில் மோதிரம் வரவழைக்கிறான் என்பதை கேட்டதில் இருந்து மண்டைக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போல் இருக்கிறது ...
//

இப்படி ஏக வசனத்தில் அவரை நீங்கள் குறிப்பிட்டது இன்னும் மட்டமாக அவரைத் தாக்குபவர்கள் நடுவில் நீங்கள் கொஞ்சம் நாகரீகமானவர் என்பதைக் காட்டுகிறது.

//தயவு செய்து விளக்குங்கள்...அது உண்மையா இருந்தா நானும் கும்பிடுறேனே...!! //

நான் சொன்னால் அது உண்மையா இல்லையா என்று உங்களுக்குத் தெரிந்துவிடுமா? ஆன்மீக உண்மைகளை அவரவர்களே அறிந்து கொள்ளவேண்டும்.
----------

SurveySan said...

sai devoteeஇன் பக்கத்திலிருந்து இன்னொரு கட்/பேஸ்ட்

"மனம் எங்கே ஒருப்படுகிறதோ அங்கே இறைவன் இருக்கிறான்.
"

SurveySan said...

sai devoteeன் பக்கத்திலிருந்து சாய் பாபா நடத்தும் 'மேஜிக்' பற்றிய அனானியின் கேள்விக்கு, அவரின் அருமையான பதில்:

--------------
சாயிபாபா மந்திரத்தில் மாங்காயை வரவழைக்கிறார் என்றெல்லாம் நம்பவில்லை. எல்லா உலகங்களையும் படைத்த இறைவன் அந்த உலகங்களையும் உயிர்களையும் எந்த சக்தியால் படைத்தானோ அந்த சக்தியினாலேயே இறைவனான சாயிபாபா இந்த 'அற்புதங்கள்' என்று எம்மைப் போன்ற சாதாரண மக்களால் சொல்லப்படும் செய்கைகளைச் செய்கிறார். அந்த சக்தி இறைவனின் இயற்கையான சக்தி. அது நமக்கு வேண்டுமானாலும் மந்திரமாகவோ அதிசயங்களாகவோ இருக்கலாம். ஆனால் இறைவனுக்கு அவை எல்லாம் இயற்கை.

இறைவனின் அவதாரங்கள் நிகழ்வது மக்களின் தீய குணங்களை மாற்றி நற்குணங்களை வளர்ப்பதற்காகவே. அப்படி இந்தியர்கள் எல்லோரும் நற்குணங்கள் கொண்டவர்கள் ஆகிவிட்டால் தானாகவே நம் நாடு முன்னேறிவிடும். தீமை இல்லாத இடங்களில் இறைவன் அருளும் செல்வமும் நிறைந்து இருக்கும். அதனை விட்டு இறைவன் ஒரே நொடிகள் ஆயிரக்கணக்கான கிலோகணக்கில் தங்கத்தை உருவாக்கி இந்தியாவின் கடனை அடைத்துவிட்டு ஆனால் மக்களின் தீயகுணங்கள் மாறாமல் அப்படியே இருந்தால் மீண்டும் இந்தியா கடனில் மூழ்கும். அதனை விட என்றுமே நிலைக்கும் நற்குணங்களை வளர்ப்பதும் அந்த ஆத்மாகள் பல பிறவிகளில் முன்னேறி நற்கதி அடையும் வழியைக் காட்டுவதற்குமே காலம் காலமாக அவதாரங்கள் வருகின்றன.

உலோகங்களின் தன்மையைப் பற்றி கூறியிருக்கிறீர்கள். அந்த உலோகங்களை படைத்த இறைவன் அதனை மீண்டும் சிறு அளவில் படைப்பது இயலாதா?

யார் என்ன சொன்னாலும் கண்மூடித்தனமாக நம்புவீரா என்றும் கேட்டிருக்கிறீர்கள். இல்லை. கட்டாயம் இல்லை. தீர விசாரித்து என் அறிவு (அது எத்தனை குறைவானதாக இருந்தாலும்) ஒத்துக் கொண்டதை மட்டுமே ஒத்துக் கொள்வேன். என் தனிப்பட்ட அனுபவங்களும் அறிவாராய்ச்சிகளும் சாயிபாபா இறைவன் என்ற முடிவைத் தந்திருக்கின்றன. அதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் உங்களைப் போல் சில பேர் வீடியோ படங்கள் மூலம் உண்மையை வெளியிடுவதாகச் சொல்கிறீர்கள். அவற்றின் உண்மைகள் எனக்குத் தெரியும். அதனால் நீங்கள் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக நம்புவதில்லை.

குருகுலத்தில் பூனையைக் கட்டிவைத்தக் கதை எனக்கு மிக நன்றாகத் தெரியும். ஆனால் அதனை ஏன் இங்கே சொன்னீர்கள் என்று புரியவில்லை.

என் முன்னோர்கள் கடவுளை வழிபட்டார்கள். சாயிபாபாவை நான் எதேச்சையாக வழிபடவில்லை. நானும் என் முன்னோர்கள் போல கடவுளை வழிபட்டவன் தான். வழிபடுபவன் தான். சாயிபாபாவைப் பற்றி கேள்விபட்ட போது அவர் தலைமுடியைப் பற்றியும் அவர் 'மந்திரத்தில் மாங்காயை' வரவழைப்பதைப் பற்றியும் ஆயிரம் கேள்விகள் கேட்டும் கிண்டல் செய்தும் பேசியவன் தான். பின்னர் உள்ளே நுழைந்து அதனால் பெற்ற அனுபவங்களாலும் ஆராய்ச்சிகளாலுமே இன்று அவரை வணங்குகிறேன். எனக்கு நல்லது நடந்ததெல்லாம் சாயிபாபாவை வணங்காவிட்டாலும் நடந்திருக்கும் என்பது நன்கு எனக்குத் தெரியும். அவரை வணங்குவது இறைவனை வணங்குவது இறைவனால் படைக்கப்பட்ட எனது கடமைகளில் ஒன்று என்பதாலேயே. அவரால் எனக்கு நன்மை விளைந்தது என்பதால் அன்று. என்னைப் பற்றி தெரியாமலேயே எப்படி எனக்கு நடந்த நன்மைகள் எல்லாம் காக்கை உட்கார பனம்பழம் என்று தெரிந்தது உங்களுக்கு? ஞான திருஷ்டி உண்டோ உங்களுக்கு?
-----------

SurveySan said...

வெற்றி,

உங்கள் பின்னூட்டம் accidentalஆ delete ஆயிடுச்சு. சாரி.

SurveySan said...

வெற்றியின் பின்னூட்டம்

---
நான் குத்தியாச்சு. நான் குத்தினது தேர்வு: /* ரெண்டு பேரையும் ஏற்கனவே பிடிக்காது. சந்திப்பு சூப்பர் காமெடி */
---

Sai Devotee 1970s said...

பின்னூட்டப் பதில்களை வெட்டி ஒட்டியதற்கு நன்றி சர்வேசன்.

SurveySan said...

என்னால் முடிந்ததைச் செய்தேன். நல்ல பதில்கள் உங்களுடையது.

உங்கள் பதிவெல்லாம் படித்தேன். உங்களுக்கு இருக்கும் தீவிர பக்தியை கண்டு வியப்பாக இருக்கிறது.

என் நண்பன் ஒருவன் தீவர சாய் பக்தன். அவன் சொல்லும் கதைகள் கேட்டு எனக்கும் படிக்கும் காலத்தில் ஒரு சிறு பற்று வந்ததுண்டு.

ஆனால், அதன் பிறகு கேட்ட/பார்த்த கதைகள் எல்லாம், அவர் மேல் இருந்த அபிப்ராயத்தை தூளாக்கியது.

I don't know how you believe, what he does is 'miracle'. May be you have had other experiences which qualify as 'miracle'. But, விபூதி, மோதிரம் எல்லாம் கண்டிப்பா 'miracle' கிடையாது.

Your devotion towards him may be convincing your mind that what you see is a real 'miracle'. I can fully understand that. I have no issues with that.

உங்கள் நம்பிக்கை உங்களுக்கு.
என் நம்பிக்கை எனக்கு.

எதிலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதே இழுக்கு. :)

Anonymous said...

இதெல்லாம் நல்லால்ல சொல்லிட்டேன்.

Hari said...

நேயர் விருப்பம் :

"ரஜினி அரசியலுக்கு வரலாமா கூடாதா?" என்று ஒரு சர்வே போடுமாறு வேண்டுகிறேன். நன்றீ

SurveySan said...

hari sir,
இப்பதான் ஒருத்தர் நேயர் விருப்ப சர்வேல, அவர் கொடுத்ததை கொஞ்சமா ட்விஸ்ட் பண்ணி போட்டதுக்கு திட்டிட்டு போறாரு :)

அதுக்காக நேயர் விருப்ப சர்வேயல்லை விட்டுட போறதுல்ல.

நீங்க குடுத்த ரஜினி டாபிக், தேர்தல் டைம்ல இல்ல போடணும்? or atleast, சிவாஜி ரிலீஸ் டைம்ல போடலாம்.

சரிதானே?

SurveySan said...

பாபாவுடன் ரஜினி சந்திப்பு!

ரஜினி~பாபா