recent posts...

Wednesday, January 25, 2012

டமில்சினிமா ஆர்.எஸ்.அந்தணன் அவர்களுக்கு...

இணையத்தில் புழங்கும் உலகவாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய முக்கியமான இணைய தளங்களில் ஒன்று tamilcinema.com.

ஊரை விட்டு வந்த பிறகு, சினிமாவும் சினிமா சார்ந்த விஷயங்களுக்கும், ஆரம்ப காலங்களில், குமுதம்களும், விகடன்களும், தினகரன்களும் கை கொடுத்து வந்தன.. ஆனால், சில பல வருடங்களில், குமுதமும், விகடனும், சந்தா வசூலிக்க ஆரம்பித்து எமது பொழுது போக்கில் மண்ணை வாரிப் போட்டிருந்தார்கள்.

ஓசியில் கொடுத்தால்  ஃபினாயிலையும் குடிப்போம். 
ஆனா, ஒத்த ரூவா கேட்டா கூட, அமிர்தத்தையும் 'ஐயே கசக்கும்'னு ஓரம் கட்டும் வீரப் பாரம்பர்யம் நம்முளுது.

அந்த இக்கட்டான காலகட்டத்தில் tamilcinema.com தான் சகலரின் பொழுதுபோக்காக இருந்தது. google.com போறோமோ இல்லியோ, மத்திய சாப்பாடு சாப்பிட்டுட்டு கண்ணு சொறுகி மந்தமாகும் போது, tamilcinema.com பக்கத்துக்கு போயி, கிசு கிசு படிச்சு, ப்ரேக் ரூமில் போய் அலசி ஆராஞ்சாதான் அன்னிக்கு நாள் நகந்த மாதிரி இருக்கும்.

யாரு, யாரு படத்துல நடிக்கப்போறா, யாருக்கு யாரோட லடாய், சுட சுட விமர்சனங்கள்னு பக்கங்கள் களை கட்டும்.
களை கட்டுவதோடு இல்லாமல், தளமும், கூகிள் கணக்கா, சிம்பிளா கண்ணை உறுத்தாம, அழகா இருக்கும்.
ஆணி புடுங்கர நேரத்துல கிசு கிசு படிச்சாலும், தூர நின்னு பாக்கரவனுக்கு, பசங்க ஏதோ முக்கியமான டாக்குமெண்ட்டுதான் படிக்கராங்கன்னு ஒரு பிரமையை ஏற்படுத்தும்.

அப்படி இருந்த டமில்சினிமா.கோம், சமீப காலத்தில், காணச் சகிக்கலை. கசா முசான்னு விளம்பரங்கள், பாப்-அப்பு, பாப்-சைடு, பாப்பு-டௌனுன்னு சுத்தி சுத்தி அடிக்குது அந்த பக்கத்துக்கு போனாவே. 
அதுவும், சில விளம்பரங்கள் முக்கிய செய்திக்கு மேல ஒக்காந்துக்கிட்டு போறதுக்கே அடம் பிடிக்குது.
லேப்டாப்பிலேயே இப்படி அடம்புடிக்குதுன்னா, ஸ்மார்ட் ஃபோனில் சுத்தமா உபயோகிக்கவே முடியாத அளவுக்கு விளம்பரங்கள் அழிச்சாட்டியம் பண்ணுது. 

இப்பெல்லாம், இணையத்தை அலசுவதற்கு, லேப்-டாப்புகளை விட,, ஸ்மார்ட் ஃபோன் தான் எல்லாரும் அதிகமா பயன் படுத்தறாங்கங்கரது, உபரித் தகவல்.

ஆர்.எஸ்.அந்தணன் அண்ணே, காசு முக்கியம் தான். ஆனால், தங்க முட்டை இடற வாத்தை, அறுத்துட்டா, வாத்து செத்துடும்ணே.  

உசாரு. டமில்சினிமா.கோமை, பழைய படி, மேன்மையான, சினிமா தகவல் சுரங்கமாகவும், எளிமையானதாகவும் மாற்றும் படி, மிகத் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். 

-ஆணி பிடுங்குபவர் சங்கம்

நம்ம விளம்பரம் :) பாத்துட்டீங்களா பாத்துட்டீங்களா? Mile Sur video