recent posts...

Sunday, May 02, 2010

கண்டேன் Eaglesஐ

Bay Areaவுக்கு Eagles வரப் போவதைப் பத்தி சொல்லியிருந்தேன். போகலாமா வேணாமான்னு ரொம்பக் குழுப்பம் இருந்தது.
ரெண்டு காரணங்கள். அவங்க பாடினதில், எனக்குத் தெரிஞ்சது நாலஞ்சு பாட்டுதான். Hotel California, Take it Easy, Life in the fast lane, Tequila sunrise, இந்த மாதிரி.
இதுவும் கூட hotel californiaவைத் தவிர மத்ததுக்கு வரிகள் கூடத் தெரியாது.
இன்னொரு காரணம், $. செலவு ஜாஸ்தி ஆயிடும்.

பள்ளிக் காலங்களின் உயிர் நண்பன் மனோகரனின் நட்பில் கிட்டிய பலப் பல நல்ல விஷயங்களில், சிகரமான ஒன்று, இந்த மேற்கத்திய இசையின் அறிமுகம். Abba, BoneyM, Beatles, Eagles, Michael Jackson, Bryan Adams என்று எதையும் விட்டு வைக்கவில்லை அவன். முத்தான பாடலகள் அத்தனையையும் வைத்திருந்தான்.
அந்த நாட்களில், Eaglesன் hotel california மெகா ஹிட்டு எங்கள் மத்தியில். அடிக்கடி,
ஸ்பீக்கரில் போட்டு அலர விட்டுக் கேட்போம்.

ஆரம்ப கிட்டார் பீஸுக்காகவே, இந்தப் பாடலை ஒரு ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன். அப்பேர்பட்ட இசைக் குழுவை நேரில் பார்க்கும் பாக்கியம் கிட்டியதும், செலவு கொஞ்சம் ஜாஸ்தி என்பதால் ஒரே யோசனையாக இருந்தது. ஜூன் மாதம், ஏ.ஆர்.ரஹ்மானுக்காக 125$ டிக்கெட் வாங்கி வச்சாச்சு.

Eaglesக்கு குறைந்த பட்சம் $55 முதல் டிக்கேட் இருந்தது.
Hp Pavillion என்ற பெரிய ஸ்டேடியத்தில், $55 டிக்கெட்டு வாங்கினா, தூரத்தில், ஈகிள்ஸின் முகத்தை பைனாக்குலர் வைத்துப் பார்த்தாலும் தெரியாது.
என் கிட்டார் வாத்தியார் ஒரு ஐடியா கொடுத்தாரு. ஸ்டேடியத்துக்கு போயி டிக்கெட் பூத் பக்கத்துல நின்னா, யாராச்சும் ஏற்கனவே டிக்கெட் வாங்கினவங்க, போக முடியாத சூழலில் இருந்தால், அதை சீப்பாக விற்பார்களாம்.

சரின்னு, வண்டி கட்டிக்கிட்டு, ஓசி பார்க்கிங்க் எங்க இருக்குன்னு, சுத்தி சுத்தி தேடி (இல்லன்னா, அதுக்கு தனியா $20 கொடுக்கணும்), காரை வச்சுட்டு, ஸ்டேடியத்துக்கு வந்தோம்.
1970களில் கலக்கிய Eagles குழுவில் எல்லாருக்கும் இப்போ 65+ வயதிருக்கும். 'கிழக்குழுவை' காண பெருசா கூட்டம் இருக்காதுன்னு நெனச்சேன்.
15,000 பேர் அமரக்கூடிய ஸ்டேடியம். கிட்டத்தட்ட ஹவுஸ்ஃபுல்.
$55 டிக்கெட் இருக்கான்னு, கவுண்ட்டரில் கேட்டேன். இல்லன்னுட்டான் கடங்காரன்.

$90 இருக்கு, வாங்கிக்கோன்னான். அரை மனசுடன், கிட்டார் வாத்தி சொன்ன மாதிரி யாராவது வராங்களான்னு அங்கையும் இங்கையும் பாத்தேன். ஒருத்தரையும் காணும்.

15,000 பேர், ஸ்டேடியத்தின் உள்ளே கத்திக்கிட்டும், விசிலடிச்சுக்கிட்டும் போனாங்க. அவங்களையெல்லாம் பாத்ததும், எனக்கும் Eagles ஜுரம் வந்துடுச்சு. வாழ்க்கை வாழ்வதர்க்கே, ப்ளடி $90 தானேன்னு உள்மனசு சொல்லிச்சு.
சரி, வாங்கிடலாம்னு ஒரு அடி எடுத்து வச்சா, "hey buddy. i got 2 $90 tickets. i couldnt make it, can you take it?"ன்னான் ஒரு புண்ணியவான். நான் அவன் கிட்ட, "no buds. i am looking for a $55 ticket"னு பிட்டு போட்டேன்.
எட்டு மணிக்கு ஷோ, 7:58க்கு இந்த டயலாக் நடக்குது. அவனுக்கும், என்னை விட்டா வேர யாருகிட்டையும் விக்க முடியாதுங்கர நெலமை. சரின்னு, $90ஐ, $55க்கே தரேன்னுட்டான்.

சீப்பா கெடச்சாலும், பல்லு பிடிச்சு பாப்போம்ல. டிக்கெட் ஒரிஜினல் தான, ஏமாத்திடமாட்டியேங்க்ர ரீதியல அவன கேள்வி மேல கேள்வி கேட்க, கடுப்பாகிப் போனவன், "என் கூட வா. உன்னை உள்ள ஒக்கார வச்சுட்டு காசு வாங்கிக்கறேன்னு", கதவு வரை வந்து, டிக்கெட் ஸ்கேன் பண்ணி என்னை உள்ளே விட்டதும்தான், காசு வாங்கிக்கிட்டான். நல்லவன் :)

அப்பரம் என்னங்க? ஸ்டேடியத்துக்குள்ள போனா, விச்ல் சத்தமும், கைதட்டலும், குதூகலமும், அடேங்கப்பா!!!

அதுவும், hotel californiaவை, Don Henley ட்ரம்ஸ் வாசிச்சுக்கிட்டே பாடியதும், Joe Walsh இந்த வயதிலும், கிட்டாரை பின்னி பெடலெடுத்ததில் மொத்த கூட்டமும் சாமி ஆடியதும், ஆஹா! அமக்களம்!

பிறவிப் பயன் அடைந்த சுகம்! பேரானந்தம்.

சனி இரவு நான் கண்ட இசை விருந்து கீழே. அதுக்குள்ள ஏதோ ஒரு புண்ணியவான் யூட்யூபுல போட்டுட்டான். வாழ்க அவன். அந்த கிட்டார் பிட்டை கேளுங்க. புல்லரிக்கும்.


என் $90 வ்யூவே இப்படி இருக்குன்னா, $55 எப்படி இருக்கும்னு நெனச்சுப் பாருங்க :)


வாழ்க்கை வாழ்வதர்க்கே!

இது 1994ல் நடந்த இன்னொரு நிகழ்ச்சியின் வீடியோ இங்கே. பாடல் வரிகளுடன்.

1977ல் பட்டையை கிளப்பிய போது எடுத்த வீடியோ.

7 comments:

எட்வின் said...

இன்னைக்கு காலைல வேல முடிஞ்சு வரும் போது கூட Hotel California பாட்ட கேட்டுட்டு தான் வந்தேன். நீங்க சொன்ன மாதிரி... அந்த ஆரம்ப Guitar Piece எத்தன தடவ கேட்டாலும் அமோகமாத்தான் இருக்கும். பகிர்விற்கு நன்றி.

Unknown said...

நானும் ஈகிள்ஸ் ரசிகன்தான்..!
நீங்க கொடுத்து வச்சவரு .......!
பகிர்வுக்கு மிக்க நன்றி...!

SurveySan said...

Edwin, perarasan, varugaikku nanri.

it was a good show!

SurveySan said...

ஈகிள்ஸ் இந்த அளவுக்கு கலக்கியிருக்காங்கன்னா, மைக்கேல் ஜாக்ஸன் அணனாத்தையின் ஷோவெல்லாம் எப்படி இருந்திருக்கும்?

புல்லரிச்சு கிறுக்கு பிடிச்சிருக்குமுல்ல?

கொடுத்து வைக்கலை அதுக்கெல்லாம் :(

ரவிஷா said...

You might like his one too:

http://www.youtube.com/watch?v=BHxEO28s8Mg

SurveySan said...

thx Ravishah. interesting :)

வடுவூர் குமார் said...

ஊப்! வீடியோவை காபி ரைட் என்று சொல்லி தூக்கிட்டாங்க‌ளே!!