recent posts...

Monday, March 09, 2009

Y புருனோ Y Y Y?

டாக்டர் புருனோ என்ற பதிவரை எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்.
அருமையான, அறிவுபூர்வமான, அறிவியல் பூர்வமான, மருத்துவப் பூர்வமான, உபயோகமான, உருப்படியான, விஷயமுள்ள, சுவாரஸ்யமான, ஆக்கபூர்வமான, தேவையான, பொறுப்பான, தீவிரமான,
பலப் பல பதிவுகளுக்குச் சொந்தக்காரர்.

'கட்டாய கிராமப்புற சேவை' பற்றிய இவரது ஆழமான பதிவுகளே இதற்கு சான்று.

இவ்ளோ விஷயம ஞானமுள்ளவரு, சமீபகாலமா ஒரு இசை அமைப்பாளர் பத்தி எங்க என்ன பதிவு வந்தாலும், தவறாமல் போய், அங்க, அவரை ஃப்ராடு, அது இதுன்னு, அர்ச்சனை பண்ணிட்டு வந்துடறாரு.

சமீபத்தில் நான் பார்த்த ஒரு பின்னூட்டம் இங்கே:
http://pitchaipathiram.blogspot.com

எல்லாருக்கும் அவங்கவங்க கருத்து சொல்ல கண்டிப்பா உரிமை இருக்கு.

ஆனா, இது தொடர்ச்சியா பல இடத்தில் பார்த்த போது, எனக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்குது. அதுவும், விரல் விட்டு எண்ணக் கூடிய, ஆழமான கருத்துக்களை பதிபவர் மத்தியில் இருக்கும் ஒருவர், இப்படி செய்வது, பெரிய கேள்விக்குறியை என் தலை மேல் போட்டது.

Y Bruno sir? ஏன் இந்த வெறுப்பு எங்காளு மேல?

:(

பி.கு1: ரொம்ப நாளா கேக்கணும்னு நெனச்சேன். கேட்டுட்டேன். அவருகிட்ட தனி மடல்ல ஏன் கேக்கலன்னு, இந்தப் பதிவ அடிச்சு முடிச்சதும் யோசிச்சேன். இதுவரைக்கும் ஆராஞ்சு அடிச்சது வீணாயிடும். ஸோ, பொதுவில் வைக்கிறேன் ;)
பத்தவச்சுட்டியே பரைட்டை என்ற ரீதியில், பின்னூட்டங்கள் மட்டுருத்தப் படும் ;)
Bruno, seriously, don't you think it is a bit odd, calling our king, a fraud?

பி.கு2: நாட்டுக்கு நற்செய்தி சொல்லும் பலரும், இந்தத் தேர்தல் கணத்தில், நாட்டுக்கும் ஊருக்கும் உபயோகமா எதையாவது செய்யணும். நம்ம களத்தில் இறங்கி தேர்தல் பணி எல்லாம் பண்ண முடியாது. அட்லீஸ்ட், உங்க சுற்றத்தீல் இருப்பவர்களை, கண்டிப்பா வோட்டு போடச் சொல்லலாம். செய்யுங்க.
சந்தோஷின் இந்தப் பதிவைப் பாருங்க. நீங்களும் பதிவப் போடுங்க. Please vote in this election and encourage everyone to vote, for a change!

102 comments:

வடுவூர் குமார் said...

எனக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.

SurveySan said...

வடுவூர் குமார்,

//எனக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.//

எனக்கும் பெருத்த ஆச்சரியம்.
ஒருத்தர பிடிக்கலன்னாலும், இப்படி ரிப்பீட்டா போட்டு தாக்கரளவுக்கு பிடிக்காம இருக்குமா?

இத அடிக்கும்போது நான் யோசிச்சது, நாமளும் விஜய், அஜித்தையெல்லாம் போட்டு காச்சறோம், பிடிக்காத படங்கள் வரும்போது, அதை வேற தீவிர ரசிகர்களுக்கு கேள்விக்குறி போட்டிருக்குமோ?
இனி, "சொல்லுக சொல்லை.." அப்ளை பண்ணனும் ;)

கோவி.கண்ணன் said...

உங்களால் பாராட்டு பெறுபவர்கள், உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களுக்கு பிடித்த கருத்துக்களை மட்டும் தான் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள் ?

:)

இசைஞானியை இந்த வாரு வாரும் மருத்துவர் டெண்டுல்கர் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறார். டெண்டுல்கர் ஓய்வு பெற்றால் என்ன என்ற கேள்விக்கு பொறிந்து தள்ளிவிட்டார்.

விளையாட்டுத்துறை திறமையான வீரர்களை உருவாக்க வேண்டும், திறமையான வீரர்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது, அதே போன்று சச்சின் போன்ற சாதனையாளர்கள் சாதனை சாதனை என்று சோதிக்காமல் விலகி இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும் என்று தெரிவித்திருந்தேன்.

ஆ! இதழ்கள் said...

ரஹ்மானுக்கும் இந்த விஷயம் தெரிந்தே இருக்கிறது. அவர் இளையராஜா கலந்து கொண்ட அந்த விழாவில் கேட்டுக்கொண்டதெல்லாம், தயவு செய்து வலையில் இருக்கும் என் ரசிகர்கள் வேறு யாரையும் தரக்குறைவாகவோ புண்படுத்தியோ பேசாதீர்கள். எனக்கு அதில் துளியேனும் உடன்பாடில்லை. அதை பார்த்து நான் மிகுந்த கவலை அடைகிறேன்.

நீங்கள் தரக்குறைவாக பேச வேண்டும் என்றால் என்னை பேசுங்கள், மற்றவர்களை விட்டு விடுங்கள் என்றார்.

Fruit for thought.

SurveySan said...

கோவி,

////, உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களுக்கு பிடித்த கருத்துக்களை மட்டும் தான் சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பவரா நீங்கள் ?/////

கண்டிப்பா இல்லை.
அவரவர் கருத்து அவருக்கு.
ஆனா, ஃப்ராடுன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவரா உணர்ச்சி வசப்படல் என்று தோன்றியதால், பதிவு :)

கிரிக்கெட்டில் நான் அரைவேக்காடு.
ஆனா, டெண்டுல்கர், வழி விட வேண்டிய நாள் இன்னும் வரலை ;)

SurveySan said...

ஆ! இதழ்கள்,
நானும் பார்த்தேன் அதை.
ஏ.ஆர் பெருந்தன்மையா அத சொல்லிருக்காரு.

எல்லாரும் எல்லாரையும் விமர்சனம் பண்ணலாம். தப்பில்லை.

ஆனா, ஒரு லிமிட் வச்சுக்கணும் :)

கானா பிரபா said...

மிகவும் வருத்தம்/வேதனை அளிக்கும் கருத்து, ராஜா சிம்பொனி அமைச்சு தான் மேதை என்று காட்டத் தேவை இல்லை. ராஜா ப்ராடு என்றால் அவர் இசையமைத்த 600+ படங்களின் உழைப்பில் 10 தலைமுறை வாழ்ந்திருக்கும்.
இதுக்கு மேல நான் என்ன சொல்ல, ரஹ்மானே சொல்லீட்டாரே? :(

குசும்பன் said...

டாக்டர் இந்த மேட்டரை வைத்து ஒரு கதை சொல்லி இருந்தார், ஓவியன் கதை அது செம கலக்கலாக இருந்தது,அந்த பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு திரும்ப கதை தொடர்கிறது என்று செம கலக்கலான பதிலாக இருந்தது ஆகவே இந்த பதிவுக்கும் ஒரு கலக்கலான கதையோடு வந்து சர்வேசனை கும்மும்படி மிக தாழ்மையோடு கேட்டுகிறேன் டாக்டர்:))

புருனோ Bruno said...

//இவ்ளோ விஷயம ஞானமுள்ளவரு, சமீபகாலமா ஒரு இசை அமைப்பாளர் பத்தி எங்க என்ன பதிவு வந்தாலும், தவறாமல் போய், அங்க, அவரை ஃப்ராடு, அது இதுன்னு, அர்ச்சனை பண்ணிட்டு வந்துடறாரு.//

பிச்சைபாத்திரத்தில் நான் எந்த மறுமொழிக்கு எதிராக அந்த கருத்தை கூறினேன் என்று கவனித்தீர்களா.

ரஹ்மானை குறைகூறுபவர்களை பார்த்து நீங்கள் இந்த கேள்வியை கேட்கவில்லையே ஏன் ஏன் ஏன்

யோசித்து பாருங்கள் ...

புருனோ Bruno said...

//இத அடிக்கும்போது நான் யோசிச்சது, நாமளும் விஜய், அஜித்தையெல்லாம் போட்டு காச்சறோம், பிடிக்காத படங்கள் வரும்போது, அதை வேற தீவிர ரசிகர்களுக்கு கேள்விக்குறி போட்டிருக்குமோ? //

சரியாக சொல்லிவிட்டீர்களே.

விஜய் டாக்டர் பட்ட வாங்கியதை நீங்கள் (நீங்கள் என்பது உங்கள் ஒருவரை மட்டும் அல்ல. என்னை சேர்த்து என்று வைத்துக்கொள்ளுங்கள்) விமர்சிக்கும் போது Y ....... sir? ஏன் இந்த வெறுப்பு எங்காளு மேல? என்று கேள்வி உங்களுக்கு வந்திருக்கிறதா என்று நீங்களும் நானும் சேர்ந்தே யோசித்து பார்ப்போம்

புருனோ Bruno said...

கோவியாரே,

//இசைஞானியை இந்த வாரு வாரும் மருத்துவர் டெண்டுல்கர் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறார். டெண்டுல்கர் ஓய்வு பெற்றால் என்ன என்ற கேள்விக்கு பொறிந்து தள்ளிவிட்டார்.//

உங்களுக்கு பதில்கள் கீழே வரிசையாக

உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம்
அல்லது
பிடிக்காமல் இருக்கலாம்

அது உங்களது “கருத்து” (தனிப்பட்ட உரிமை)

அவரது கவர் டிரைவ் மோசமாக இருக்கிறது என்றோ அல்லது அவர் அணிந்த டீ-சர்ட் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றோ கூற உங்களுக்கு முழு உரிமை உள்ளது

ஆனால் சச்சின் பற்றி தவறான “தகவல்” (ஆட்டம், ஒட்டம் விபரங்கள்) தருவதற்கு உங்களுக்கு உரிமை இல்லை என்று புரிந்து கொள்ளுங்கள்

சச்சின் இந்தியாவின் மற்ற 5 ஆட்டக்காரர்களை விட குறைவான ஓட்டங்கள் பெறுவதால் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் கூறினால், அது உண்மையாக இருந்தால் நான் அதை எதிர்க்க போவதில்லை

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...

எனக்கு சச்சினை பிடிக்காது என்று கூற அவருக்கும், உங்களுக்கும், யாருக்கும் முழு உரிமை உள்ளது. அது கருத்து. ஆனால் அதற்கு நீங்கள் தவறான தகவல்களை தரக்கூடாது.

கருத்து வேறு. தகவல் வேறு

புருனோ Bruno said...

எப்படி நான் சச்சினின் சாதனைகளுக்கு ஆதாரம் தருகிறேனோ அது போல் இசையையோ இசைக்குறிப்பையோ வெளியிட்டால் பிரச்சனை தீர்ந்தது

புருனோ Bruno said...

தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)

தகவல் என்பது தான் உண்மை தகவல் X பொய் தகவல் அல்லது
சரியான தகவல் X தவறான தகவல் என்று வகைப்படும்.

உதாரணம் :
சரியான தகவல் - பெட்ரோல் விலை 50 ரூபாய்
தவறான தகவல் - பெட்ரோல் விலை 25 ரூபாய்

கருத்து என்பதில் சரியான கருத்து, தவறான கருத்து என்று எதுவுமே கிடையாது. ஒருவருக்கு சரியானதாக தோன்றும் கருத்து அடுத்தவருக்கு தவறாக தோன்றலாம். உங்களுக்கு சச்சினை பிடிக்கலாம். எனக்கு பிடிக்காமல் இருக்கலாம்

ஒரு கருத்து - தனியார் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும்

வேறு ஒரு கருத்து - பெட்ரோலுக்கு ரேஷன் முறை கொண்டு வர வேண்டும்.

இதில் (opinion) என்பது இடம், பொருள், நேரம், நபர் என்று வேறு படும்.

அடுத்தவர் கூறும் கருத்துக்களை எதிர்க்க வேண்டியது இல்லை. ஆனால் அவர்கள் தாங்கள் கூறும் கருத்துடன் ஏதேனும் தவறான தகவல்களை தந்தால் கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். உதாரணமாக தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று கூற அனைவருக்கும் உரிமை உள்ளது. அது அவரவர் கருத்து. உங்கள் கருத்து வேறென்பதற்காக அவர் தனது கருத்தை மாற்ற வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது

ஆனால் அப்படி தனியார் நிறுவனங்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று (கருத்து) கூறும் ஒருவர் தவறான புள்ளி விபரங்களை தந்தால் (தவறான தகவல்), அந்த புள்ளி விபரங்களுக்கு எதிராக நாம் பேசலாம். அதைத்தான் நான் செய்தேன்.

புருனோ Bruno said...

நான் உங்கள் அபிமான இசைக்கலைஞரின் நேர்மையை விமர்சித்தேன். நீங்கள் அதற்கு (நான் கூறியதற்கு எதிராக) ஆதாரம் தந்தால் நான் என் கருத்தை திரும்ப பெற்றுக்கொள்ள் தயார்

ஆதாரம் என்பது அந்த இசை / அல்லது அந்த இசைக்குறிப்பு வெளியாக வேண்டும்

அப்ப நம்பிக்கை -

உதாரணம்

நம்பிக்கை 1 - பெட்ரோல் விலை குறையும்
நம்பிக்கை 2 - பெட்ரோல் விலை அப்படியே இருக்கும்
நம்பிக்கை 3 - பெட்ரோல் விலை கூடும்

நம்பிக்கை என்பது ஆதாரங்களை சார்ந்தது அல்ல. (belief) அது ஆதாரங்களுக்கு அப்பாற்பட்டது

படிக்காமலேயே தேர்விற்கு சென்றாலும் தேர்வாகி விடுவோம் என்ற நம்பிக்கை ஆதாரத்திற்கு அப்பாற்பட்டது :)

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...
This comment has been removed by the author.
புருனோ Bruno said...

//எனக்கும் பெருத்த ஆச்சரியம்.
ஒருத்தர பிடிக்கலன்னாலும், இப்படி ரிப்பீட்டா போட்டு தாக்கரளவுக்கு பிடிக்காம இருக்குமா?//

உளறலில் எழுதிய கதையை தவிர எனக்கு தெரிந்தவரை தேவையில்லாமல் ரஹ்மானின் இசையை குறை கூறும் இடங்களில் மட்டும் தான் நான் இந்த பிரச்சனையை எழுப்பி இருப்பேன்

எனவே உங்கள்து கேள்வியை திருப்பி பாருங்கள்

//எனக்கும் பெருத்த ஆச்சரியம்.
”ரஹ்மானை” பிடிக்கலன்னாலும், இப்படி ரிப்பீட்டா போட்டு தாக்கரளவுக்கு பிடிக்காம இருக்குமா?//

புருனோ Bruno said...

//விளையாட்டுத்துறை திறமையான வீரர்களை உருவாக்க வேண்டும், திறமையான வீரர்களை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது, அதே போன்று சச்சின் போன்ற சாதனையாளர்கள் சாதனை சாதனை என்று சோதிக்காமல் விலகி இளைஞர்களுக்கு வழிவிடவேண்டும் என்று தெரிவித்திருந்தேன்.//

உண்மை. ஆனால் அதற்கு அணியின் ஐந்தாவது சிறந்த மட்டையாளர் தான் வழிவிடவேண்டுமே தவிர அணியின் சிறந்த மட்டையாளர் வழிவிட வேண்டியதல்ல என்பது எனது தாழ்மையான கருத்து

புருனோ Bruno said...

சரி

பொதுவான ஒரு கேள்வி

அரசியல்வாதிகளை, நடிகர்களை, விளையாட்டு வீரர்களை (உதாரணம் சச்சின்) தரக்குறைவாக விமர்சிக்கலாம். ஏன் பிற இசையமைப்பாளர்களை (தேவா) கூட விமர்சிக்கலாம். அப்படி விமர்சித்தவர்கள் யாரையாவது பார்த்து “ஏன் ஏன் ஏன்” கேள்வி வந்ததுண்டா

அதுவும் நான் எழுதியதில் பெயர் கூட குறிப்பிடவில்லை

முதலில் இருந்த மறுமொழி : //ரஹ்மான் இசையமைக்கிறாரா ? என்ன கொடுமை//

நான் கூறியது : //என்ன பண்ண

சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்//

இதில் நான் கூறியது மட்டும் ”வெறுப்பு எங்காளு மேல?”, “அது இதுன்னு”, “அர்ச்சனை” ஆனாது ஏன் ஏன் ஏன்

ஒரே ஒரு இசையமைப்பாளரை (அதுவும் அவரது இசையை கூட நான் விமர்சிக்க வில்லை. கேட்காத சிம்பொனி பற்றி தான் கேட்டேன்) விமர்சிப்பது மட்டும் தவறா.. ஏன் ஏன் ஏன்

புருனோ Bruno said...

சச்சினை பிடிப்பதும் பிடிக்காததும் உங்கள் சொந்த விஷயம்

ஆனால் அதற்காக தவறான தகவல்களை தரக்கூடாது.

---

அதே போல்
நான் அவரது இசையை எங்காவது விமர்சித்துள்ளேனே. அவர் ராகத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். சுருதி பேதம், தாளம் சரியில்லை என்று நான் கூறியிருக்கிறேனா.

நான் விமர்சித்தது அவரது நேர்மையை.

செய்யாத சாதனையை செய்ததாக கூறி 6 கோடி தமிழர்களை ஏமாற்றிய மோசடியை.

இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அந்த இசையமைப்பாளரின் இசை மோசம் என்று நான் எங்காவது கூறியிருக்கிறேனா ???

ஆனால் ரஹ்மான பற்றிய சில விமர்சணங்கள் (முக்கியமாக நான் எதிர் பதிவிடும் விமர்சணங்கள்) எந்த தரத்தில் இருக்கின்றன என்று உங்கள் மனசாட்சியை கேட்டு பாருங்கள்

புருனோ Bruno said...

சில கேள்விகள்

1. ஏ ஆர் ஆரை பற்றிய தரக்குறைவான விமர்சணங்கள் எழுதுபவர்களை பார்த்து கேட்காத கேள்வியை இந்த இசையமைப்பாளரை பற்றிய ஒரு விமர்சணத்தை எழுதியவுடன் கேட்டது ஏன். ஏன். ஏன்

2. ஒருவர் மேதை என்ற ஒரே காரணத்திற்காக அவரது பிற செயல்களை விமர்சிக்க கூடாதா. (உதாரணம் சச்சின் - சீரூந்து அல்லது சச்சின் அகர்கர் விவகாரம்).

//Bruno, seriously, don't you think it is a bit odd, calling our king, a fraud?//

நான் அவரது இசைத்திறமையை குறைகூறுவது வேண்டுமானால் வித்தியாசமாக (பொருந்தாமல்) இருக்கலாம்

ஆனால் அவர் அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக கூறுவது fraud இல்லைஎன்றால் வேறு எந்த பதம் பொருத்தம் என்று கூறுங்கள்.

அதை பயன் படுத்துகிறேன்

அடுத்தாக

டாக்டர் விஜயையும் டாக்டர் ஷங்கரையும் நாம் ஏன் போட்டு தாளித்தோம் என்று யோசித்து பாருங்கள்

இங்கு மட்டும் ஏன் ஒரு வித்தியாசம்

புருனோ Bruno said...

எனக்கு நீங்கள் குறிப்பிடும் இசையமைபாளரின் இசை பிடிக்கும் :) :)

அவரது நேர்மை(?யின்மை) தான் பிரச்சனை :) :) :)

அதை விமர்சிக்க உரிமையில்லையா !!!

சச்சின் சீருந்திற்கு வரிவிலக்கு கோரியதை ஒருவர் விமர்சித்தால் அவருக்கு சச்சினின் ஆட்டம் பிடிக்க வில்லை என்று அர்த்தமா

அல்லது சச்சினின் ஆட்டம் பிடிக்கும் ஒருவர் அகர்கார் அணியில் இடம்பெற்றதை விமர்சிக்க கூடாதா

Indian said...

While looking for the definition of Oratorio and Symphony, this is what Wikipedia says.

An oratorio is a large musical composition including an orchestra, a choir, and soloists. The oratorio was somewhat modeled after the opera. Their similarities include the use of a choir, soloists, an ensemble, various distinguishable characters, and arias. However, opera is musical theatre, while oratorio is strictly a concert piece, though they are sometimes staged as operas. There is little or no interaction between the characters, no props or elaborate costumes. The most important difference is their subject matter. Opera tends to deal with history and mythology, including age-old devices of romance, deception, and murder, whereas the plot of an oratorio often deals with sacred topics, making it appropriate for performance in the church.

A symphony is a musical composition, often extended and usually for orchestra. "Symphony" does not imply a specific form. Many symphonies are tonal works in four movements with the first in sonata form, and this is often described by music theorists as the structure of a "classical" symphony, although even some symphonies by the acknowledged classical masters of the form, Joseph Haydn, Wolfgang Amadeus Mozart and Ludwig van Beethoven, do not conform to this model.

History of the form

[edit] Origins
The word "symphony" derives from Greek συμφωνία, meaning "agreement or concord of sound", "concert of vocal or instrumental music", from σύμφωνος, "harmonious" (Oxford English Dictionary).

18th century symphony

....Symphonies at this time, whether for concert, opera, or church use, were not considered the major works on a program: often, as with concerti, they were divided up between other works, or drawn from suites or overtures. Vocal music was dominant, and symphonies provided preludes, interludes, and postludes. At the time most symphonies were relatively short, lasting between 10 and 20 minutes....

With a disclaimer that I'm an Ilaiyaraja fan, it hardly matters to me whether Raja's Thiruvasagam work is termed 'Symphony' or 'Oratorio'. His music remains the same to me...., pleasant and soothing!!! Well, this again is my personal opinion.

புருனோ Bruno said...

//மிகவும் வருத்தம்/வேதனை அளிக்கும் கருத்து, ராஜா சிம்பொனி அமைச்சு தான் மேதை என்று காட்டத் தேவை இல்லை.//

இதே நான் முழுவதும் ஏற்றுக்கொள்கிறேன்.

// ராஜா ப்ராடு என்றால் அவர் இசையமைத்த 600+ படங்களின் உழைப்பில் 10 தலைமுறை வாழ்ந்திருக்கும்.//

ராஜா 600 படங்களுக்கு இசையமைத்தது பற்றிய விவாதம் இதுவல்ல.

விவாதம் வேறு !!

//இதுக்கு மேல நான் என்ன சொல்ல, ரஹ்மானே சொல்லீட்டாரே? :(//

உண்மை. ரஹ்மான் சொல்லிவிட்டார் !!!

அதே நேரம் ரஹ்மான் பற்றி (புதியமுகம், ஜெண்டில்மேன், திருடா திருடா என்று அவர் கலக்கிய நேரத்தில்) ஒருவர் என்ன கூறினார் தெரியுமா

“கிரிக்கெட் ஆட்டத்தின் நடுவில் ஒரு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால் எல்லாரும் சிறிது நேரம் அவளை பார்ப்பார்கள். ஆனால் ஆட்டம் தொடர்ந்து நடக்கும்”

அப்படி கூறிய “பெரியவர்” யார் தெரியுமா ???

தெரியவில்லை என்றால் சர்வே நடத்தி கண்டு பிடியுங்கள் !!

கோவி.கண்ணன் said...

//சச்சின் இந்தியாவின் மற்ற 5 ஆட்டக்காரர்களை விட குறைவான ஓட்டங்கள் பெறுவதால் ஓய்வு பெற வேண்டும் என்று நீங்கள் கூறினால், அது உண்மையாக இருந்தால் நான் அதை எதிர்க்க போவதில்லை//

நன்று திறமையாக செயல்படும் ஐஏஎஸ் ஐபிஎஸ்களுக்குக் கூட உடல் நிலை நன்றாக இருந்தாலும் 58 வயதில் ஓய்வு. உங்களுக்கு மேலே இருக்கும் உங்கள் மருத்துவ தலைவர் நன்றாக செயல்படுகிறார் என்பதற்காக அவருக்கு கிழேயே எப்போதும் வேலை செய்ய உங்களுக்கு பிடிக்குமா ? ஒரு சில துறையில் சில வாய்ப்புகள் இருக்கும் போது ஒரு சிலரே அதை அடைந்துவருவதும், பிறருக்கு தடையாக இருப்பதும் உங்களுக்கு ஏற்புடையதா ? அப்துல்கலாம் கூட நன்றாகத்தான் செயல்பட்டார் அதற்காக நாட்டின் உயரிய பதவியை அவர்மட்டுமே தகுதியானவர் என்று சொல்வது எந்த வகையில் ஞாயம் ?

புருனோ Bruno said...

//With a disclaimer that I'm an Ilaiyaraja fan, it hardly matters to me whether Raja's Thiruvasagam work is termed 'Symphony' or 'Oratorio'.//
அது உங்கள் கருத்து.

//His music remains the same to me...., pleasant and soothing!!! Well, this again is my personal opinion.//
இதுவும் உங்கள் கருத்து

அது சரி திருவாசகம் ஒரடோரியாவா சிம்பொனியா

சர்வே கேள்வி : அது ஒரடோரியா என்றால் ஏன் சிம்பொனி என்ற பெயரில் வெளிவந்தது

choices :
1. அதை அமைத்தவருக்கு ஒரடோரியாவிற்கும் சிம்பொனிக்கும் வித்தியாசம் தெரியும் அளவு இசை ஞானம் கிடையாது
2. அது ஒரடோரியாதான், சிம்பொனி இல்லை என்று தெரிந்தும், அதிகம் விற்க வேண்டும் என்பதற்காக பொய் கூறினார்
3. அது ஒரடோரியாதான், சிம்பொனி இல்லை என்று தெரிந்தும், தான் சிம்பொனி அமைத்தாக காட்ட வேண்டும் என்பதற்காக பொய் கூறினார்
4. 2 மற்றும் 3

narsim said...

பதிவில் உடன்படுகிறேனா இல்லையா என்பதை விட, அருமையான வாத,பிரதிவாதங்கள்.. கலக்கல் எதிர்பதில்கள்..

அந்த கடைசிக்கேள்விக்கு பதில்.. கிங் இளையராஜாதான் அந்த வார்த்தைகளை உதிர்த்தது.

புருனோ Bruno said...

//நன்று திறமையாக செயல்படும் ஐஏஎஸ் ஐபிஎஸ்களுக்குக் கூட உடல் நிலை நன்றாக இருந்தாலும் 58 வயதில் ஓய்வு.//

அது அரசு விதி. (மத்திய அரசில் ஓய்வு பெறும் வயது 60 !!) கிரிக்கெட்டில் அப்படி எதாவது விதி இருந்தால் கூறுங்கள். உடனடியாக உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்

//உங்களுக்கு மேலே இருக்கும் உங்கள் மருத்துவ தலைவர் நன்றாக செயல்படுகிறார் என்பதற்காக அவருக்கு கிழேயே எப்போதும் வேலை செய்ய உங்களுக்கு பிடிக்குமா ?//

அரசில் என்றால் அவர் ஓய்வு பெறும் வயதில் ஓய்வு பெற வேண்டியது தான்.

தனியார் என்றால் அப்படி ஒரு விதி இருந்தால் தான் அது நடக்கும்

விதிமுறை இல்லாத நேரத்தில் (எனக்கு பிடிக்க வில்லை என்பதற்காக) நான் ஒருவரை 58 வயதில் கழுத்தை பிடித்து வெளியில் தள்ள முடியுமா

// ஒரு சில துறையில் சில வாய்ப்புகள் இருக்கும் போது ஒரு சிலரே அதை அடைந்துவருவதும், பிறருக்கு தடையாக இருப்பதும் உங்களுக்கு ஏற்புடையதா ?//

இந்திய அணியில் மட்டையாளர்களுக்கு 5 அல்லது 6 இடங்கள் இருக்கின்றன. ஒரு இடம் மட்டும் அல்ல !!!

இதில் ஒருவரே என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல

//அப்துல்கலாம் கூட நன்றாகத்தான் செயல்பட்டார் அதற்காக நாட்டின் உயரிய பதவியை அவர்மட்டுமே தகுதியானவர் என்று சொல்வது எந்த வகையில் ஞாயம் //

யாரும் அப்படி சொல்லவில்லை !!!

மேலும் இது சரியான உதாரணமாக எனக்கு தெரியவில்லை

கிரிக்கெட்டில் இருந்து உதாரணம் தாருங்கள்

ஏற்றுக்கொள்கிறேன்

புருனோ Bruno said...

சோவியாரே

சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று எழுதுவதற்கும் உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது (அடுத்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டிய காரணம்)

அதே போல்

சச்சின் ஓய்வு பெறும் நேரம் இன்னமும் வரவில்லை என்று எழுதுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது (அவரை விட திறன் குறைந்தவர்களே இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும்)
---

அதே போல் சச்சினின் ஆட்டங்களை வியந்து எழுதுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது

அகர்கார் விவகாரம் பற்றியும், சீரூந்து விவகாரம் பற்றியும் எழுதுவதற்கு எனக்கு உரிமை இருக்கிறது

--

இப்படி இருக்கும் போது

ஒரு இசையமைப்பாளரின் மோசடியை எழுதுவது மட்டும் தனியாக பார்க்கப்பட வேண்டியது ஏன் ஏன் ஏன்

புருனோ Bruno said...

இந்த இசை மோசடியை பற்றி நான் பல இடங்களில் எழுதுவது பற்றி ஒரே வரியில் சொல்லவேண்டுமென்றால்,

i am not venting my anger, but my frustration. :)

நன்றி சர்வேசரே :) :) :)

புருனோ Bruno said...
This comment has been removed by the author.
மாயவரத்தான் said...
This comment has been removed by a blog administrator.
புருனோ Bruno said...

கோவியாரே

மேலும் ஒரே ஒரு உதாரணம்

விஜயின் நடனத்தை விமர்சிப்பதற்கோ அல்லது அவரது டாக்டர் பட்டத்தை விமர்சிப்பதற்கோ உங்களுக்கு உரிமையிருக்கலாம்

ஆனால்

காதலுக்கு மரியாதை தோல்வி படம் என்று கூற முடியாது :) :)

இரண்டிற்கு இடையில் ஒரு வித்தியாசம் இருக்கிறது

சச்சின் விஷயத்தில் நீங்கள் இந்த வேறுபாட்டை கவனிக்கவில்லை என்றே நினைக்கிறேன்

கோபிநாத் said...

\கானா பிரபா said...
மிகவும் வருத்தம்/வேதனை அளிக்கும் கருத்து, ராஜா சிம்பொனி அமைச்சு தான் மேதை என்று காட்டத் தேவை இல்லை. ராஜா ப்ராடு என்றால் அவர் இசையமைத்த 600+ படங்களின் உழைப்பில் 10 தலைமுறை வாழ்ந்திருக்கும்.
இதுக்கு மேல நான் என்ன சொல்ல, ரஹ்மானே சொல்லீட்டாரே? :(
\\\

தல
யாரு வந்து என்ன சொன்னாலும் அவருக்கு சொன்னாதையே தான் சொல்லிக்கிட்டு இருப்பாரு போல.

கோபிநாத் said...

\\\குசும்பன் said...
டாக்டர் இந்த மேட்டரை வைத்து ஒரு கதை சொல்லி இருந்தார், ஓவியன் கதை அது செம கலக்கலாக இருந்தது,அந்த பதிவின் பின்னூட்டத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு திரும்ப கதை தொடர்கிறது என்று செம கலக்கலான பதிலாக இருந்தது ஆகவே இந்த பதிவுக்கும் ஒரு கலக்கலான கதையோடு வந்து சர்வேசனை கும்மும்படி மிக தாழ்மையோடு கேட்டுகிறேன் டாக்டர்:))
\\

அண்ணே உங்க பின்னூட்டத்தை பார்த்து லூசப்பா நீ கேட்க தோணு..

மணிகண்டன் said...

யோவ் கோவி, எதுக்கு வீனா இங்க எங்க ஆளு சச்சின் இழுக்கறீங்க ? சச்சின் "சாதனை, சாதனை"ன்னு யார சோதிக்கராரு. நமக்கு எல்லாம் கூட தான் 34/35 வயசு ஆக போகுது. younsterskku வழி விட வேண்டியது தான ! சச்சின் பத்தி பேசும் போது எப்ப பாத்தாலும் அகார்கர் பத்தி எழுதறத வன்மையா கண்டிக்கறேன். kuruvilla கோச்சிப்பாரு

புருனோ Bruno said...

//kuruvilla கோச்சிப்பாரு//

சமீர் திகே !!!

மணிகண்டன் said...

கோபிநாத் சார், அந்த கதை பிடிக்காட்டி நீங்க வேற கதை எழுதுங்க ! நான் இப்படி தான் ஒன்னு எழுதினேன்.

http://thodar.blogspot.com/2009/03/blog-post.html

படிச்சு பாருங்க.

அவர கதை எழுத வேணாம்ன்னு சொல்றதுக்கு நம்ப யாரு ?

ஆனா இங்க எல்லாரும் ஒண்ணு புரிஞ்சிக்கணும். ப்ருனோ எழுதி வருவது இளைய ராஜா என்னும் தனி மனிதர் குறித்தான விமர்சனம். அவரோட இசையை பத்தி எழுதறதுக்கு போதிய அறிவு இல்லைன்னு அவரே சொல்லி இருக்காரு. அவரோட இசை பிடிக்கும்ன்னு சொல்லி இருக்கார்.

கோவி.கண்ணன் said...

//யாரும் அப்படி சொல்லவில்லை !!!

மேலும் இது சரியான உதாரணமாக எனக்கு தெரியவில்லை

கிரிக்கெட்டில் இருந்து உதாரணம் தாருங்கள்

ஏற்றுக்கொள்கிறேன்//

மோசமாக ஆடி கழுத்தைப் பிடித்து தள்ளும் வரையில் தொடர்ந்து ஆடலாம் என்று சொல்லும் கருத்தாக தெரிகிறது. தோல்வி அடையும் வரை தொடரலாம் என்று சொல்ல வருகிறீர்களா ?

:)

கோவி.கண்ணன் said...

//காதலுக்கு மரியாதை தோல்வி படம் என்று கூற முடியாது :) :) //

காதலுக்கு மரியாதை சிறப்பாக இருந்ததாலேயே விஜய் மிகச் சிறந்த நடிகர் என்று கூற முடியாது வேன்றுமென்றால் ரசிகர் ஆதரவு பெற்றவர் என்று கூறலாம்.

மணிகண்டன் said...

***
மோசமாக ஆடி கழுத்தைப் பிடித்து தள்ளும் வரையில் தொடர்ந்து ஆடலாம் என்று சொல்லும் கருத்தாக தெரிகிறது. தோல்வி அடையும் வரை தொடரலாம் என்று சொல்ல வருகிறீர்களா
***

ஏன் கூடாதா ?

அடுத்தது, கடந்த சில வருஷமா கிரிக்கெட் பாக்கலன்னு தெரியுது.

புருனோ Bruno said...

// ப்ருனோ எழுதி வருவது இளைய ராஜா என்னும் தனி மனிதர் குறித்தான விமர்சனம். அவரோட இசையை பத்தி எழுதறதுக்கு போதிய அறிவு இல்லைன்னு அவரே சொல்லி இருக்காரு. அவரோட இசை பிடிக்கும்ன்னு சொல்லி இருக்கார். //

அப்பாடா புரிந்து கொண்டதற்கு நன்றி

புருனோ Bruno said...

//மோசமாக ஆடி கழுத்தைப் பிடித்து தள்ளும் வரையில் தொடர்ந்து ஆடலாம் என்று சொல்லும் கருத்தாக தெரிகிறது. தோல்வி அடையும் வரை தொடரலாம் என்று சொல்ல வருகிறீர்களா ?//

இல்லை

நான் தெளிவாகவே கூறிவிட்டேன்

இந்திய அணியின் ஆறு சிறந்த ஆட்டக்காரர்களின் வரிசையில் சச்சினுக்கு இடமிருந்தால் அவர் விளையாடலாம்

அவரை விட ஆறு பேர் சிறப்பாக ஆடினால் அவருக்கு அணியில் இடம் கிடையாது

இது தான் கணக்கு

புருனோ Bruno said...

//காதலுக்கு மரியாதை சிறப்பாக இருந்ததாலேயே விஜய் மிகச் சிறந்த நடிகர் என்று கூற முடியாது வேன்றுமென்றால் ரசிகர் ஆதரவு பெற்றவர் என்று கூறலாம்.//
அப்பாடா :) :)

புருனோ Bruno said...

நான் கூறுவது இது தான்

சச்சின் ஓய்வு பெறும் நாளை நிர்ணயிக்க பயன்படுத்த வேண்டிய கேள்வி இதுதான்

இன்றைய தினம் இந்தியாவின் ஆறு சிறந்த மட்டையாளர்கள் யார்.
அதில் சச்சின் இருக்கிறாரா

ஆம் என்றால் அவர் அணியில் இருக்க வேண்டும்
இல்லை என்றால் அவருக்கு அணியில் இடம் இல்லை

மற்றபடி வயதை மட்டும் வைத்து ஒருவரை ஓய்வு பெற சொல்வதோ அல்லது ஆட சொல்வதோ என்னை பொருத்த வரையில் ஏற்புடையதல்ல

(கோவியாரின் கூற்றுப்படி வயது மட்டுமே காரணமாக இருக்க வேண்டும் என்றால் இந்தியாவின் விக்கெட் கீப்பராக பார்தீவ் படேல் தான் இருக்க வேண்டுமே தவிர டோனி அல்ல - இதிலிருந்தே வயதை ஒரு காரணகர்த்தாவாக நான் ஏன் நிராகரித்தேன் என்று புரிந்து கொள்ளலாம்)

மணிகண்டன் said...

***
அப்பாடா புரிந்து கொண்டதற்கு நன்றி
***
ஆமாம் புரிஞ்சிடிச்சு. இன்னும் ஒரு பத்து பதிவுக்கு போயி இதே மாதிரி மறுபடியும் மறுபடியும் போடுங்க. சூப்பரா இருக்கும். மறக்காம, தகவல், கருத்து sambanthamaana உங்க karuthaiyum vilaikkidunga.

TBD said...

சர்வேசன், ஆள்காட்டி விரலை உங்கள் முகத்திற்கு நேரே நீட்டி "உனக்கு வேணும்" என ஒருமுறை சொல்ல மறந்து விடாதீர்கள்.! :)

ஆ! இதழ்கள் said...

ஹெல்லோ சர்வேசன்....

அமர பாரதி said...

அந்த லிங்க்கில் உள்ள டாக்டரின் பின்னூட்டத்தை படித்தேன். டாக்டர் புருனோ சொல்வது சரிதான். இளையராஜாவின் சிம்போனி என்பது பித்தலாட்டமே. அவரது மேஸ்ட்ரோ பட்டம் கேளிவிக்குறியே. தனி மனித துதி பாடலின் உச்ச கால கட்டத்தில் இளையராஜா போன்றவர்கள் ஞானியாகத் தெரிந்தார்கள். அவ்வளவே.

ஒரு ஆஸ்கார் விருது வாங்கியவரை "பாராட்டுவதை" இவ்வளவு பெரியதாக பேசும் போது, அதை வாங்கியவரை எவ்வளவு பெருமையாக பேச வேண்டும்?

Indian said...

//அவரது மேஸ்ட்ரோ பட்டம் கேளிவிக்குறியே. //

How?

Boston Bala said...

பெருமதிப்புக்குரிய சர்வேசன்,

நியூஸ்பூனை, வலைப்பாக்கள், தமிலீச் போன்ற தமிழ் டிக் (digg) தளங்கள் கூட இதே மாதிரி ஒவ்வொரு பதிவாக சென்று ஒவ்வொரு இடுகையிலும் மறுமொழி இடுகிறார்களே!

அவர்களுக்கும் இதே மாதிரி விளம்பரப் பதிவு (அ) கேள்வி பரிவர்த்தனம் வைக்க தாழ்மையாக இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்கள் உண்மையுள்ள,
பாலாஜி
பாஸ்டன்

SurveySan said...

பா.பாலா,

ரோம் நகரமே பத்திக்கிட்டு எரியுது, நீங்க நியூஸ்பூனைக்கு விளம்பரம் போடச் சொல்றீங்க.

அடுத்த வை வை வை உங்களுக்குத்தான் ;)

SurveySan said...

புருனோ,

மொதல்ல ஒரு பெரிய நன்னி. எல்லார் கேள்விக்கும் பதில் சொல்ல அட்டெம்ப்ட் பண்றதுக்கு.

ஆனா, நீங்க எதுக்கும் தெளீவா பதில் சொல்லாம எஸ்கேப் ஆயிட்ட மாதிரி தான் தெரியுது.

/////விஜய் டாக்டர் பட்ட வாங்கியதை நீங்கள் (நீங்கள் என்பது உங்கள் ஒருவரை மட்டும் அல்ல. என்னை சேர்த்து என்று வைத்துக்கொள்ளுங்கள்) விமர்சிக்கும் போது Y ....... sir? ஏன் இந்த வெறுப்பு எங்காளு மேல? என்று கேள்வி உங்களுக்கு வந்திருக்கிறதா என்று நீங்களும் நானும் சேர்ந்தே யோசித்து பார்ப்போம்
/////

விஜைய்யை நான் (நான் என்பது இங்கு நாங்கள்) எப்பொழுதும் ஃப்ராடு என்று சொன்னதில்லை.
அவரின் நடிப்புத் தெறமைக்கு டாக்டர் எல்லாம் ஓவர்தான் என்ற விமர்சனம் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.
சில பேர் சொல்லியிருக்கலாம், ஆனா

அந்த சில பேரின் அலைவரிசையூம் உங்களின் அலைவரிசையும் வெவ்வேறு.

நான்(ங்கள்) உங்க கிட்ட இன்னும் கொஞ்சம் மெச்சூர்டான சரக்கை எதிர்பாக்கிறோம். அதுதான் இந்தப் பதிவை எழுதியதின் பின்னணி.

அந்த இசைஅமைப்பாளர், சிம்ஃபொனி போட்டதே இல்லை என்பதர்க்கும், தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டார் என்பதர்க்கும் கன்னா பின்னான்னு ஆதாரம் இருந்தா சமர்ப்பிங்கோ. அப்ப வேணா 'ஃப்ராடை' பரிசீலிக்கலாம்.

அதுவரை, பொதுவில், ஒரு பெருமதிப்பிர்க்குரிய மேதையை நொட்டை சோல்ல வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.


ஏ.ஆர்.ஆரை நொட்டை சொல்லும்போது நான் ஏன் வை.வை.வை ன்னு கேக்கல?? ஏன்னா, ஒரே ஆளு, திரும்பத் திரும்ப ஏ.ஆர்.ஆரை நொட்டை சொல்வதாக என் கண்ணில் படலை.

யூ went a little too wide on this ;)

புருனோ Bruno said...

//அந்த இசைஅமைப்பாளர், சிம்ஃபொனி போட்டதே இல்லை என்பதர்க்கும், தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டார் என்பதர்க்கும் கன்னா பின்னான்னு ஆதாரம் இருந்தா சமர்ப்பிங்கோ. அப்ப வேணா 'ஃப்ராடை' பரிசீலிக்கலாம்.//

இத பாருங்க.... இந்த disproving null hypothesis by double blind method எல்லாம் வேண்டாம்

அவர் சிம்பொனி அமைத்ததற்கு ஆதாரமாக அந்த ஒலிநாடாவோ அல்லது குறைந்த பட்சம் அந்த இசை குறிப்போ வெளியாகட்டும்.

நான் ஏற்றுக்கொள்கிறேன் !!
http://www.ularal.com/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%af%88-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/comment-page-1/#comment-711

"The proof of the pudding is the eating"

இசை அல்லது குறைந்த பட்சம் அந்த குறிப்புகளோ வெளியாகட்டும்.


//அதுவரை, பொதுவில், ஒரு பெருமதிப்பிர்க்குரிய மேதையை நொட்டை சோல்ல வேண்டாம் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.//

நான் பெயர் கூறவில்லை !!! உங்களுக்கே அது ஒருவரை குறிப்பது போல் தோன்றினால் அது என் தவறல்ல.

”கவர்ச்சி ஆட்டக்காரி” என்று ரஹ்மானை குறிப்பிட்டவர் யார் என்ற பெயரை கூட நான் கூறவில்லை

புருனோ Bruno said...

//ஏ.ஆர்.ஆரை நொட்டை சொல்லும்போது நான் ஏன் வை.வை.வை ன்னு கேக்கல??//

நான் கேட்ட கேள்வி என் ஒருவனுக்காக மட்டும் அல்ல !!!

என்னை கேள்வி கேட்டது சரி. நீங்கள் மேலும் கேட்கலாம் :) :) :) :)

ஆனால் இதில் நான் கூறும் மைய கருத்து. ”ஒருவரின் ஒரு திறன் எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக அவரது மற்றொரு குறையை அடுத்தவர்கள் விமர்சிக்க கூடாது” என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை !!

எனக்கு மாக் வாகையும் அன்சி குரோனியையும் அவர்களது ஆட்டத்திறனுக்காக பிடிக்கும் என்பதற்காக அவர்களது match fixing பற்றி யாரும் எழுத கூடாது என்று நான் எதிர்பார்க்கலாமா

//ஏன்னா, ஒரே ஆளு, திரும்பத் திரும்ப ஏ.ஆர்.ஆரை நொட்டை சொல்வதாக என் கண்ணில் படலை.

யூ went a little too wide on this ;)//

தல

பூமி உருண்டைன்னு சொல்லும் போது கலிலியோ கூட ஒரே ஆளுதான் :) :) :)

புருனோ Bruno said...

//அவரின் நடிப்புத் தெறமைக்கு டாக்டர் எல்லாம் ஓவர்தான் என்ற விமர்சனம் மட்டுமே வைக்கப்பட்டிருக்கும்.
சில பேர் சொல்லியிருக்கலாம், ஆனா

அந்த சில பேரின் அலைவரிசையூம் உங்களின் அலைவரிசையும் வெவ்வேறு.//

இருக்கலாம்.. ஆனால் கட் அவுட்டிற்கு பால் ஊற்றும் நடிகர்களின் ரசிகர்களின் அதே அலைவரிசையில் (என் தலைவர் தெய்வம் - அவரை யாரும் குறை கூறகூடாது. என் தலைவரை தவிர வேறு யாரும் நடிகர்களே அல்ல - என் தலைவர் படங்களை தவிர வேறு படங்களை பார்க்க மாட்டேன்) உங்களை போல் படித்தவர்கள் பலரும் இருப்பதை கண்டு நான் நொந்து போனதென்னவோ உண்மைதான்.

புருனோ Bruno said...

கேள்வி 1 //Y Bruno sir? ஏன் இந்த வெறுப்பு எங்காளு மேல?//

அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக அவர் பிராடு பண்ணியதால்

ஓரடோரியாவை சிம்பொனி என்று கூறி
அவரது ரசிகனான என்னை மோசடி செய்ததால்

கேள்வி 2 //Bruno, seriously, don't you think it is a bit odd, calling our king, a fraud?//

நான் அவரது இசைத்திறமையை குறைகூறுவது வேண்டுமானால் வித்தியாசமாக (பொருந்தாமல்) இருக்கலாம்

ஆனால் அவர் அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக கூறுவது fraud இல்லைஎன்றால் வேறு எந்த பதம் பொருத்தம் என்று கூறுங்கள்.

அதை பயன் படுத்துகிறேன்

//ஆனா, நீங்க எதுக்கும் தெளீவா பதில் சொல்லாம எஸ்கேப் ஆயிட்ட மாதிரி தான் தெரியுது.//
நான் தெளிவாக பதில் கூறாத கேள்வி என்னவென்று மறுபடி கேளுங்கள். பதிலளிக்க தயார். அப்படியே நான் கேட்ட இரு கேள்விகளுக்கும் நீங்களும் பதில் கூறலாம் :) :)

SurveySan said...

//ஆனால் அவர் அமைக்காத சிம்பொனியை அமைத்ததாக கூறுவது fraud இல்லைஎன்றால் வேறு எந்த பதம் பொருத்தம் என்று கூறுங்கள்.
//

இதுக்கு ஆதாரம் எங்க இருக்கு?
அவர் அமைத்த சிம்ஃபொனி அருமையா இருந்ததா, John Scott என்பவர் சொல்லியிருக்காரே.
வேறு ஏதோ political reasonsக்காக அது வெளியில் வராமல் போனதுக்காக எப்படி நீங்க ஃப்ராடு என்ற பதத்தை பயன் படுத்தலாம்?

புருனோ Bruno said...

//இதுக்கு ஆதாரம் எங்க இருக்கு?
அவர் அமைத்த சிம்ஃபொனி அருமையா இருந்ததா, John Scott என்பவர் சொல்லியிருக்காரே.//
அவர் என்ன சொன்னார் என்று நீங்களே முழ்வதும் சொல்லிவிடுங்கள் :) :) :)

//வேறு ஏதோ political reasonsக்காக அது வெளியில் வராமல் போனதுக்காக எப்படி நீங்க ஃப்ராடு என்ற பதத்தை பயன் படுத்தலாம்? //
அது என்ன பொலிடிகல் ரீசன் என்றும் நீங்களே சொல்லிவிடுங்கள்

புருனோ Bruno said...

அப்படியே ஒரட்டோரியாவை சிம்பொனி என்று விற்றது எதனால் என்றும் நீங்களே கூறிவிடுங்கள்

SurveySan said...

Bruno,check this out
http://webhome.idirect.com/~rlevy/current_question.html

SurveySan said...

//அப்படியே ஒரட்டோரியாவை சிம்பொனி என்று விற்றது எதனால் என்றும் நீங்களே கூறிவிடுங்கள்//

the product never had 'symphony' on it.
All it had was 'classical cross-over'.

விக்கும்போது யார் என்ன சொன்னா என்னா?
'உலகிலேயே முதல் முறையாக'ன்னு டி.வில, நிமிஷத்துக்கு ஒரு தரம் கூவி கூவி விக்கலையா?
பெரிய தவறொன்றும் இல்லை.

புருனோ Bruno said...

//Bruno,check this out
http://webhome.idirect.com/~rlevy/current_question.html //

I was thrilled when I heard that you were going to conduct the symphony for Mr. Ilayaraja from India when he was commissioned to write a symphony. Mr. Ilayaraja is my favorite Indian composer & I couldn't believe my ears when I came to know another one of my favorite composers (you!) was going to conduct it. There was a huge celebration for him in India with all the top personality & you honoring Mr. Ilayaraja.

Amal said...

//புருனோ Bruno said...
சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் இருக்கும் ஊரில் ரஹ்மான் இசையமைப்பது உங்களுக்கு கொடுமையாகத்தான் தெரியும்
//
புருனோ-விற்கான பதில் இங்கு உள்ளது.
http://webhome.idirect.com/~rlevy/current_question.html

புருனோ Bruno said...

It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV. I was flown from London to Madras specially for it. It was an incredible experience and I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review, and this is the reason it has not been released.

SurveySan said...

Bruno,

reminds me of the cooling-glass anology i used for Kovi kannan once.

Scott says,
//
I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released. //

புருனோ Bruno said...

I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released.

The trouble is that critics are capable of destroying sensitive artists and have done it throughout the history of music.

It shows how the critics have crucified every great composer without exception!

Amal said...

//
It was very interesting to hear that you witnessed the Ilayaraja honoring ceremony on TV. I was flown from London to Madras specially for it. It was an incredible experience and I shall never forget it. Ilayaraja and I became very close friends and I have tried to encourage him to get his symphony released. I believe he was hurt by a critics review, and this is the reason it has not been released. I had the privilege of conducting the recording sessions with the Royal Philharmonic Orchestra, in London, and we all believe it deserves to be released. The trouble is that critics are capable of destroying sensitive artists and have done it throughout the history of music. The more one knows a piece of music the more one loves it, and the stupid critics are incapable of judging anything they have never heard before. They have seldom been right. There is a wonderful book by Nicolas Slonimsky entitled LEXICON OF MUSICAL INVECTIVE. It is a history of musical criticism since Beethoven's time. It shows how the critics have crucified every great composer without exception! I will contact Illayaraja and tell him about your kind remarks and that he owes it to us all to make his symphony available.
//
புருனோ-விற்காக bold-ல்:-)
survey நீங்களே அந்த லின்க் கொடுத்துள்ளதை இப்ப தான் பார்த்தேன். நன்றி!!!

SurveySan said...

Bruno,

so, how does it make him a Fraud?

ஒரு அரசன் இருக்கான்.
பக்கத்து ஊரை போரில் வெல்றான்.
அப்பரம், போனா போதுன்னு, ஊரை திரும்ப கொடுத்துடறான்.

திரும்ப கொடுத்துட்டாங்கரதுக்காக, அரசன் வீரன் இல்லை, 'கோழை'ன்னு ஆயிடுமா?

:)

The more info i see on this symphony thing, the more diluted, your case becomes ;)

I dont expect an apology to the king, but a small token of acknowledgement would suffice ;)

புருனோ Bruno said...

//விக்கும்போது யார் என்ன சொன்னா என்னா? //

சரிதான் அரிசி என்று தான் தருகிறார்கள். அதில் கல்லும் இருக்கிறதல்லவா. அது அரிசி வியாபாரியின் நேர்மையை பொறுத்த விஷயம் :) :) யார் சொன்ன என்ன ....

எவ்வளவு பேர் கலப்படம் பண்ணுராங்க.

//'உலகிலேயே முதல் முறையாக'ன்னு டி.வில, நிமிஷத்துக்கு ஒரு தரம் கூவி கூவி விக்கலையா?
பெரிய தவறொன்றும் இல்லை//

சரி

அவரின் தரம் என்னவென்று நீங்களே கூறியபின்னர் அதை மறுக்க நான் யார்

புருனோ Bruno said...

//ஒரு அரசன் இருக்கான்.
பக்கத்து ஊரை போரில் வெல்றான்.
அப்பரம், போனா போதுன்னு, ஊரை திரும்ப கொடுத்துடறான்.

திரும்ப கொடுத்துட்டாங்கரதுக்காக, அரசன் வீரன் இல்லை, 'கோழை'ன்னு ஆயிடுமா?

:)//
வென்று திருப்பி கொடுப்பதற்கும்
வெல்லாமலேயே வென்றதாக புருடா விட்டு திருப்பி கொடுப்பதாக புருடா விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது

//The more info i see on this symphony thing, the more diluted, your case becomes ;)//

இசையை கேட்கும் வரை அல்லது இசைக்குறிப்பை பார்க்கும் வரை என் case அப்படியேத்தான் இருக்கிறது

என்னவோ நீங்கள் எதோ காப்புரிமை, பொலிடிக்கல் காரணம் என்றெல்லாம் முதலில் கூறினீர்கள். இப்பொழுது அதெல்லாம் இல்லை போலிருக்கிறதே :) :)

//I dont expect an apology to the king, but a small token of acknowledgement would suffice ;)//
அவர் இசையை வெளியிட்டபின் தான் !!

புருனோ Bruno said...

http://www.cinesouth.com/masala/hotnews/new/01102005-3.shtml

On the coming 16th, Ilayaraja is to sing at the Nehru Stadium, Chennai. A person who is quite firm on the music front, Ilayaraja has given Jaya TV the rights to telecast this music program that has been organized by Isaignani himself. The music program will include Thiruvasagam symphony also.

புருனோ Bruno said...

உங்கள் உதாரணப்படியே வென்று திருப்பி கொடுப்பதற்கும்
வெல்லாமலேயே வென்றதாக புருடா விட்டு திருப்பி கொடுப்பதாக புருடா விடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது

http://www.cinesouth.com/masala/hotnews/new/17082006-2.shtml

"Thamizh Miyyam had released the audio C.D. and cassettes of Ilayaraja's symphony 'Thiruvasagam'. But that was not symphony. When we pointed out that it was a musical composition called Oratorio. We said that both Ilayaraja and Jegat Casper were cheating. Following that, Ilayaraja conceded it was not symphony.

புருனோ Bruno said...

Amal

ஆக சிம்பொனி வெளிவராமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று கூறுகிறீர்கள்

கொஞ்சம் தெளிவாக கூறுங்களேன் (காப்புரிமை என்றெல்லாம் கூறினார்களே :) :) , அது இல்லையா :) :) :) )

புருனோ Bruno said...

விற்பதற்கு முன்னர் தன் பொருளை பற்றி தவறான தகவல் தருவதும் அதை விற்று காசு + புகழ் கிடைத்த பின்னர் வசமாக மாட்டிக்கொண்டதால் வேறுவழியின்றி பொருளின் உண்மை தரத்தை கூறுவதற்கும் எங்கள் ஊரில் fraud என்று கூறுவார்கள்

உங்கள் ஊரில் பெயர் என்னவோ அதை வைத்துக்கொள்ளுங்கள்

புருனோ Bruno said...

//விக்கும்போது யார் என்ன சொன்னா என்னா? //

கருப்பு வெள்ளை டிவியை கலர் டிவி என்று விற்று, அதன் பிறகு இது கருப்பு வெள்ளை டிவிதான் என்று யாராவது டிவி கடைக்காரன் கூறினால் அவனுக்கு என்ன பெயர் ??

//'உலகிலேயே முதல் முறையாக'ன்னு டி.வில, நிமிஷத்துக்கு ஒரு தரம் கூவி கூவி விக்கலையா?
பெரிய தவறொன்றும் இல்லை.//

சரி சரி. உங்களை பொருத்தவரை கருப்பு வெள்ளை டிவியை கலர் டிவி என்று யாராவது விற்றால் ஏமாந்து வாங்கினால் ”பெரிய தவறொன்றும் இல்லை” அது உங்கள் கருத்து

நானும் அதே போல் ஏமாளியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா :) :) :)

புருனோ Bruno said...

கருப்பு வெள்ளை டிவியை கலர் டிவி என்று விற்ற டிவி கடைக்காரர், அதன் பிறகு இது கருப்பு வெள்ளை டிவிதான் என்று கூறினால், இந்த கடைக்காரன் என்ன கூறி என்ன விற்றாலும் எனக்கு சம்மதம் என்று ஏற்றுக்கொள்வீர்களா

ஒரு சர்வே நடத்துங்களேன்

எத்தனை பேர் சரி என்று கூறுகிறார்கள் என்று பார்ப்போல்

Amal said...

புருனோ,

உங்களின் முதல் கருத்து
"சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் " என்பதுதான். அதற்கான பதில்தான் சர்வேசனும் நானும் கொடுத்த இணைப்பிலேயே உள்ளது மற்றும் ராஜா சிம்பொனி அமைத்தார் என்பது உறுதியாகிவிட்டது.

ஆனால் இப்போது உங்களின் கருத்துகள் "சிம்பொனி வெளிவராமல் இருப்பதற்கு என்ன காரணம்" "திருவாசகம் சிம்பொனியா?" என்கிற ரீதியில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. மகிழ்ச்சி!!!
ஆக உங்களின் கடைசி கருத்துப்படி, சிம்பொனி அமைத்தது உண்மை (சிம்பொனி வெளிவராமல் இருப்பதற்கு என்ன காரணம்-என்ற கேள்வியிலேயே அதற்கான பதிலும் உள்ளது) என்பது தெளிவாகிவிட்டது.
இந்த கேள்விக்குத்தான் பதில் எழுத வந்தேன். விடை கிடைத்துவிட்டது!!!

புருனோ Bruno said...

//ராஜா சிம்போனி போட்டாருங்கறத்துக்கு ஆதாரம் கேட்கும் புரூனோ போடவில்லை என்பதற்கு என்னா ஆதாரம் தருவார்?//

சாமி, போட்டவர் தான் சாமி ஆதாரம் காட்ட வேண்டும்.

சர்வேசன் ஒரு வலைப்பதிவு எழுதுகிறேன் என்றால் அதை காட்டினால் அது ஆதாரம்.

சர்வேசன் வலைப்பதிவு எழுதவில்லை என்று உங்களால் ஆதாரம காட்ட முடியுமா

புருனோ Bruno said...

//ராஜாவினால் தான் சிம்போனிக்கு பெருமையே அன்றி சிம்போனியினால் ராஜாவுக்கு எள்ள்ளவும் பெருமையில்லை. //

அப்படி போடு ... :) :) :) இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன் :) :)

புருனோ Bruno said...

The only Asian to have composed a symphony for RPO is Ilayaraja (an eminent Indian composer).

//"சிம்பொனி அமைத்ததாக ஊரை ஏமாற்றும் பிராடுகள் " என்பதுதான். அதற்கான பதில்தான் சர்வேசனும் நானும் கொடுத்த இணைப்பிலேயே உள்ளது மற்றும் ராஜா சிம்பொனி அமைத்தார் என்பது உறுதியாகிவிட்டது.//

இசையை கேட்கும் வரை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூற எனக்கு உரிமை இருக்கிறது என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

புருனோ Bruno said...

//ஆனால் இப்போது உங்களின் கருத்துகள் "சிம்பொனி வெளிவராமல் இருப்பதற்கு என்ன காரணம்"
"திருவாசகம் சிம்பொனியா?" என்கிற ரீதியில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. மகிழ்ச்சி!!!//

மன்னிக்கவும். முதலிருந்தே எனது கருத்துக்கள் இது தான்.

சர்வேசன் கூறிய காரணமும் நீங்கள் அளித்த சுட்டியில் உள்ள காரணமும் வேறுபட்டிருப்பதால் தான் நான் அந்த சந்தேகத்தை கேட்டேன்.

மற்றப்படி எதிர்ப்பு வந்தவுடன் சிம்பொனி என்று கூறப்பட்டது ஒரடோரியாவாக மாறியது எனக்கும் 2005லேயே நன்றாகவே தெரியும்.

புருனோ Bruno said...

//ஆக உங்களின் கடைசி கருத்துப்படி, சிம்பொனி அமைத்தது உண்மை//

இல்லை !!!
மன்னிக்கவும்

உங்களின் கருத்துப்படி சிம்பொனி அமைத்தது உண்மை. அப்படி கூற உங்களுக்கு முழு உரிமை இருக்கிறது

எனது கருத்து இது தான் : சிம்பொனி இசையை கேட்கும் வரை சிம்பொனி இசை அமைத்து பொய். சிம்பொனி இசையை கேட்டபின்னரே எனது கருத்து மாறும்

(சிம்பொனி வெளிவராமல் இருப்பதற்கு என்ன காரணம்-என்ற கேள்வியிலேயே அதற்கான பதிலும் உள்ளது) என்பது தெளிவாகிவிட்டது.

சிம்பொனி அமைத்தது உண்மை என்று நம்பும் நீங்கள் அது வெளிவராமல் இருப்பதற்கு கூறும் காரணம் வேறாகவும், சிம்பொனி அமைத்தது உண்மை என்று நம்பும் சர்வேசன் அது வெளிவராமல் இருப்பதற்கு கூறும் காரணம் வேறாகவும் இருப்பதால் நான் கேட்டேன்.

என்னைப்பொருத்த வரை அது வெளிவராமல் இருப்பதன் காரணம் - அது அமைக்கப்படாததால்.


//இந்த கேள்விக்குத்தான் பதில் எழுத வந்தேன். விடை கிடைத்துவிட்டது!!! //

இல்லை. உங்கள் விடை தேவை

வலைஞர்! said...

புரூனோ,
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டல்லவா?

புருனோ Bruno said...

Amal

மீண்டும் தெளிவாக பார்ப்போம்

கேள்வி 1 : சிம்பொனி வெளிவந்து விட்டதா, இல்லையா
பதில் 1 : இல்லை

ஏன் வெளிவரவில்லை

நான் நம்பும் காரணம் : இன்னமும் அமைக்கப்படவில்லை
நீங்கள் கூறிய காரணம் (சுட்டியில் இருந்தது) : அது குறித்த விமர்சணம் ........
ச்ர்வே கூறிய காரணம் : வேறு ஏதோ political reasonsக்காக
வேறு சிலர் கூறிய காரணம் : காப்புரிமை பிரச்சனை

---

எனவே இந்த இரண்டாவது கேள்விக்கு நீங்கள் கூறும் விடையும், ச்ர்வே கூறும் விடையும் ஏன் முரணாக இருக்கிறது என்ற கேள்வி அடுத்த கேள்வி

இப்பொழுது புரிகிறதா

புருனோ Bruno said...

//புரூனோ,
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டல்லவா? //

தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)

இது குறித்து இதே இடுகையில் நான் எழுதியுள்ளேன்.

கடவும் என்பது நம்பிக்கை (belief) சார்ந்த விஷயம்.

Any Issue Related to Belief cannot be proved. It cannot be disproved.

இனி நீங்கள் உங்கள் கேள்வியை கேட்கலாம்

வலைஞர்! said...

புரூனோ,
மரணத்தை பற்றி உங்கள் கருத்து என்ன?

புருனோ Bruno said...

தகவல் வேறு (fact)
கருத்து வேறு (opinion)
நம்பிக்கை வேறு (belief)

----

தற்சமயம் சிம்பொனி இசை அமைக்கப்பட்டது எனப்து நம்பிக்கை அளவிலேயே இருக்கிறது

சிலரது நம்பிக்கை - அமைக்கப்பட்டது
சிலரது நம்பிக்கை - அமைக்கப்படவில்லை

--
அது குறித்த கருத்துக்களும் பல
1. காப்புரிமை பிரச்சனை
2. விமர்சணம்

--
இது குறித்த தகவல் ஒன்று தான்
1. இன்னமும் அந்த இசை வெளியிடப்படவில்லை

மணிகண்டன் said...

****
ஒருவரின் ஒரு திறன் எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக அவரது மற்றொரு குறையை அடுத்தவர்கள் விமர்சிக்க கூடாது” என்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
****

ப்ருனோவோட இந்த கருத்த நான் கன்னாபின்னான்னு வழி மொழியறேன்.

இதையே கொஞ்சமா மாத்தி பாத்தா இந்த பதிவோட நோக்கம் கூட புரியும். ப்ருனோ அவரோட பல பதிவுகள் அருமையா எழுதி இருக்கறதுனால அவர் கிட்ட இந்த பதிவு போட்டு சர்வேசன் இந்த கேள்விய கேக்கறாரு. அது ஒரு விதத்துல தவறு தான்.

ஒருவருக்கு ஒரு விசயத்துல திறன் இருக்குன்னா அவர் கிட்ட எல்லா விஷயத்துலயும் அதே திறன் எதிர்பார்க்க கூடாது.

நான் கடைசியா சொன்னது யாரையும் குறிப்பிட்டு இல்ல.

ரவி said...

சாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாவனும்....

ராஜா சார் சிம்பொனி அமைச்சாரா இல்லையா ?

@வலைஞர்.

உங்களோட பின்னூட்டம் சிம்ப்ளி சூப்பர். உடனே வலைப்பதிவை ஆரம்பித்து கன்னாபின்னாவென எழுதவும். அடுத்தவருட தமிழ்மண அவார்டு உமக்குத்தாம் ஓய்..

@ மணிகண்டன்.

மாப்ள நீ எந்த கட்சி ?

@ சர்வேசன்.

நாராயண. நாராயண.

SurveySan said...

புருனோ, நீங்க புடிச்ச முயலுக்கு கதையா இருக்கே இது.

////கேள்வி 1 : சிம்பொனி வெளிவந்து விட்டதா, இல்லையா
பதில் 1 : இல்லை

ஏன் வெளிவரவில்லை

நான் நம்பும் காரணம் : இன்னமும் அமைக்கப்படவில்லை
//////

அமைக்கப்படவில்லைன்னு எத வச்சு சொல்றீங்க?
John SCott பொய் சொல்றாருங்கறீங்களா?

அவருதான் தெளிவா சொல்லிட்டாரே, சில விமர்சகர்களின் கடுமையான விமர்சனத்தால், ஏதோ லடாய் ஆகியிருக்குன்னு.

அவர் கம்ப்போஸ் பண்ணி வாசிச்சு, ரெக்கார்ட் பண்ணியாச்சு. அப்பாலிக்கா, திரும்ப திரும்ப போடலன்னா என்ன அர்த்தம்? காதால கேட்டாதான் ஒத்துப்பேன் என்பது சரி. ஆனா, நீங்க காதால கேக்கரவரைக்கும் ஃப்ராடு பாட்டு பாடரது நியாயமே லேது.

எல்லாத்தையும் கண்ணால பாத்தோ, காதால கேட்டதுக்கோ அப்பரம்தான் நம்புவேன்னு அடம் புடிச்சா கஷ்டம்தான்.
சல்ஃப்யூரிக் ஆசிட், கையில் ஊத்திக்கிட்டா கை அவிஞ்சு போகும். கைல ஊத்திப்பாத்தான் அதையும் நம்புவேன்னா அது உங்க இஷ்டம்.

ஆனா, அதே சல்ஃப்யூரிக் ஆசிட்டை என் மூஞ்சீல ஊத்தி, என் மூஞ்சீக்கு ஏதாவது டாமேஜ் ஆகுதான்னு பாத்துட்டுதான் நம்புவேன்னா அது நியாயமா?

அவரு சிம்ஃபொனி போடலன்னா நீங்க நம்புனீங்கன்னா, உங்க மனசுளவுல அவர 'மேஸ்ட்ரோ'வா ஏத்துக்காதீங்க. ஆல்பம் வந்தப்பரம் கேட்டுட்டு பிடிச்சிருந்தா, ஒத்துக்கோங்க.
ஆனா, அதுவரைக்கும், அவரின் பெயர் எங்க்கெல்லாம் சொல்லப்படுதோ, அங்கெல்லாம் போய், அவரை ஃப்ராடுன்னு அர்ச்சனை பண்றது பெருங்குத்தம்.

விஜய்/அஜித்/ பத்தியெல்லாம் எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், நான்(ங்கள்) எங்கையும் அவங்களப் போய் ஏளனமா, ஆதாரமே இல்லாமல் தனி மனித தாக்குதல் செய்வதில்லை.

again, ஒரு சிலர், சிறு பிள்ளைத்தனமாய் செய்வார்கள். ஆனா, நான் சொல்ல வருவது, பொறுப்புள்ள மெத்த படித்தவர்களாகிய நாம் அப்படி செய்வதை தவிர்த்தல் நலம்.

நீங்க இன்னும் அம்பேல் விடலன்னா, நான் ஒரு சர்வேவை பொதுவில் வைக்கிறேன்.

புருனோவின் நிலைப்ப்பாடு சரியா, தவறா.

டெமாக்ராஸி படி, மக்கள் வாக்கெடுப்பு என்னா சொல்லுதோ, அதன் படி ஒத்துப்பீங்களா?
இல்ல, அதுக்கும் முயல் கதை தானா?

;)

SurveySan said...

மாயு, நல்ல கருத்ஸ். ஆனா, இடையில் சொறுகப்பட்ட, த.ம.தா வார்த்தையால், பின்னூட்டம் தூக்கப்பட்டது ;)

புரிந்துணர்வுடன் கூடிய உங்களின் பேராதரவுக்கு நன்னி! :)

SurveySan said...

//////இளையராஜா அமைத்தது சிம்ஃபொனியே அல்ல என்று பேராசிரியர் வீரபாண்டியன் எழுப்பிய குற்றச்சாட்டைப் பற்றிக் கேட்டபோது, "முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது. இளையராஜாவின் முத்திரைகளை யாராலும் அழிக்க முடியாது. அந்த இசை ஆரடோரியோ வகையைச் சார்ந்தது. அந்த இசையில் சிம்ஃபொனி முத்திரை இருக்கிறது. இதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்" என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.//////

புருனோ Bruno said...

//அவரு சிம்ஃபொனி போடலன்னா நீங்க நம்புனீங்கன்னா, உங்க மனசுளவுல அவர 'மேஸ்ட்ரோ'வா ஏத்துக்காதீங்க. ஆல்பம் வந்தப்பரம் கேட்டுட்டு பிடிச்சிருந்தா, ஒத்துக்கோங்க. //

சரி.

ஆல்பம் வந்தாலே போதும். ஏற்றுக்கொள்கிறேன். (எனக்கு அது பிடிக்குதா இல்லையா என்பதே பிரச்சனை அல்ல. ஆல்பம் வருதா இல்லையா என்பது தான் பிரச்சனை)

SurveySan said...

ராமு சோமு கதை

http://www.ularal.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

புருனோ Bruno said...

//ஆனா, அதுவரைக்கும், அவரின் பெயர் எங்க்கெல்லாம் சொல்லப்படுதோ, அங்கெல்லாம் போய், அவரை ஃப்ராடுன்னு அர்ச்சனை பண்றது பெருங்குத்தம்.//

சரி

ஏற்றுக்கொள்கிறேன் :) :) :)

டீல் :) :)

புருனோ Bruno said...

//again, ஒரு சிலர், சிறு பிள்ளைத்தனமாய் செய்வார்கள். ஆனா, நான் சொல்ல வருவது, பொறுப்புள்ள மெத்த படித்தவர்களாகிய நாம் அப்படி செய்வதை தவிர்த்தல் நலம். //

ஏற்றுக்கொள்கிறேன் !!!

உண்மை வெளிவரும்வரை let us (or me) give the benefit of doubt to John Scott.

சத்யமேவ ஜெயதே !!!

Truth even when it is bitter, will ultimately triumph

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்

SurveySan said...

புருனோ,
//(எனக்கு அது பிடிக்குதா இல்லையா என்பதே பிரச்சனை அல்ல. ஆல்பம் வருதா இல்லையா என்பது தான் பிரச்சனை)///


ப்ரச்சனை அதுவல்ல. ஆல்பம் வரும் வரைக்கும், நீங்க கிங்கை 'ஃப்ராடு' என்பதே ;)

ஸ்ஸ்ஸ்ஸ் :)

சர்வே போட்டாதான் இதுக்கு முடிவு பிறக்கும்னு நெனைக்கறேன்.

;)

SurveySan said...

///ஏற்றுக்கொள்கிறேன் !!!

உண்மை வெளிவரும்வரை let us (or me) give the benefit of doubt to John Scott.

சத்யமேவ ஜெயதே !!!

Truth even when it is bitter, will ultimately triumph

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்////


DANKS!!!!!

முற்றும்.

(ச,ஒரு சர்வே போடும் வாய்ப்பு மிஸ்ஸாயிடுச்சு ;))