recent posts...

Thursday, January 11, 2007

அடப்பாவமே, போதுங்கய்யா விட்டுடுங்க பாவம்யா பாவம்!



மனிதனின் பல தேவைகளுக்காக பறவைகள், மிருகங்களை கொன்று குவித்து வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஒரு பதிவில் (பெயர் குறிப்பிடலை. ஏன்னா பதிவு எல்லோரும் பார்த்து ஜீரணிக்கக் கூடிய ரகம் அல்ல) சொகுசு மேலாடை தயாரிக்க ஏதோ ஒரு பிராணியை தூக்கிப் பிடித்து, தரையில் அதன் தலையை அடித்து கொல்கிறார்கள். பாதி உயிர் பிரிந்த நிலையிலேயே அதன் தோலை ஆடை தயாரிப்பதர்க்காக உரித்து எடுக்கிறார்கள்.
மகா கொடுமையான காட்சிகள்.

பார்க்கும் போது மனது கனமாகிவிட்டது.

அடப்பாவிகளா, அப்படி என்னடா அந்த ஜாக்கெட்ட போட்டுக்கிட்டு கிழிக்கப் போறீங்கன்னு தோணிச்சு.

ஆனால், என் தேவைக்காகக் கூட சில மிருகங்கள் கொல்லப் பட்டுதான் வருகின்றன.

சிக்கன் பிரியாணிக்கு - கோழி
மட்டன் குர்மாக்கு - ஆடு
செருப்பு, (shoe)ஷூ தயாரிக்க - மாடு
fish fry - மீன்
purse - மாடு, பாம்பு, உடும்பு, மான் இன்னும் என்னென்ன பிராணிகளோ
இன்னும் எனக்கே தெரியாமல் பல.

அந்த படத்தை பார்த்து வருந்திய சில நிமிடங்களில் இனி பிராணிகளுக்கு நம்மாலான உபத்திரவம் வரக்கூடாது என்று தோன்றியது.
ஆனால், மேலே குறிப்பிட்ட கோழி, ஆடு, மீன் இதெல்லாம் 'மொத்தமாக' விட்டு விடுவேன் என்றும் தோணலை.

நீங்க எப்படி? (என்னது வீடியோ எங்கவா. அதெல்லாம் நீங்களே தேடிப் பாத்துக்கங்க. நம்ம பதிவுல அதை ஏற்றும் மனம் இல்லை - அதை பதித்த பதிவருக்கு நன்றி. அத பாத்து சில பேர் திருந்த வாய்ப்பிருக்கு)

இன்னிக்கு விஷயம் இதுதான்.
நம் சுயநல தேவைகளுக்காக இப்படி உயிரினங்கள் வதைக்கப் படுதே, இது சரியா?
இந்த வதைக்கப்படுதலுக்கு நீங்களும் காரணம்தான். atleast, ஒரு லெதர் ஷூவோ, ஒரு லெதர் பர்ஸோ உங்க கிட்ட இல்லாமலா இருக்கு?

இந்த புத்தாண்டில், உங்களால் எந்த விலங்கினத்துக்கும் பாதிப்பு வராது என்ற உத்திரவாதம் தர முடியுமா?

வோட்டு போடுங்க கீழ. அப்படியே ஒரு பின்னூட்டம் போட்டு உங்க கேரண்டியயோ (guaranty), மறுப்பையோ பதிவு பண்ணிடுங்க. நன்றி!

(நல்ல காரணங்களோட யாராவது சிக்கன், மீன் சாப்பிடறதெல்லாம் தவறில்லைன்னு போடுங்கப்பா. கொஞ்சம் ஆறுதலா இருக்கும் எனக்கு).

இனி லெதர் ஷூ, லெதர் பெல்ட், லெதர் பர்ஸ் வாங்குவதில்லைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். என்னாலானது இவ்வளவுதான் :)

27 comments:

பொன்ஸ்~~Poorna said...

சர்வேசன்,
நல்ல தலைப்புங்க..

"வராதுன்னு சொல்லத்தான் ஆசை. ஆனால் கஷ்டம்தேன். எப்பயாச்சு தொல்லை வரலாம், வந்திருக்கலாம்" தான் என்னுடைய நிலை :(

சரி, தோலில் பைகள் வாங்குவது எனக்குப் பிடிக்காது. ரெக்ஸின் தான். பர்ஸ் ஒன்று தான் இப்போதைக்குத் தோல் பர்ஸ், அதைக் கூட மாற்றலாம்னு இந்தப் பதிவு படிச்சபிறகு தோணுது..

ஷூவில் தோல் இல்லாத வேற என்ன பொருளில் செய்தது கிடைக்கிறது?

SurveySan said...

பொன்ஸ், வாங்க வாங்க.

//சரி, தோலில் பைகள் வாங்குவது எனக்குப் பிடிக்காது. ரெக்ஸின் தான். பர்ஸ் ஒன்று தான் இப்போதைக்குத் தோல் பர்ஸ், அதைக் கூட மாற்றலாம்னு இந்தப் பதிவு படிச்சபிறகு தோணுது..//

தோணினா மட்டும் போதாதுங்க :)

ஷூ, சிந்தெடிக்ல கிடைக்கும்.

SurveySan said...

எவருய்யா அது. லெதர் ஷு கூட இல்லாதவரூ ?

பேரு செப்புராசா.

Anonymous said...

Surveysan, i still request you to add the link cause then only ppl may realize for the first time. After joining OSHO even we stoped taking milk but not very regid. But this issue is.. if you want to kill it pls kill it first before skinning the animal. it is not about killing but about torturing those lovely animal. So please, for my sake add the link so that a few ppl may obstain buying fur cloths! Once the purchase stops the killing stops! thanks

Anonymous said...

முந்தி மூட்டைப் பூச்சி
நசித்தது,
நுளம்பு அடித்து,
மசுக்குட்டி எரித்தது,
பாம்பு அடித்து
எல்லாம் நினைக்கும்
போது கவலையாகவும்
வருத்தமாகவும் இருக்குது இப்ப.
நிறைய பாவம் சேத்திட்டம்.

SurveySan said...

Chella,

//i still request you to add the link cause then only ppl may realize//

You are right, seeing it definitely makes a big difference.

The faint-hearted ones, please stay away from clicking below. Following is the link from chellas earlier posting about this animal cruelty. It has a very 'strong' hurtful video depicting the cruelty.

click

SurveySan said...

அனானி,

//முந்தி மூட்டைப் பூச்சி
நசித்தது,
நுளம்பு அடித்து,
மசுக்குட்டி எரித்தது,
பாம்பு அடித்து
எல்லாம் நினைக்கும்
போது கவலையாகவும்
வருத்தமாகவும் இருக்குது இப்ப.
நிறைய பாவம் சேத்திட்டம். //

தெரியாம செஞ்சா பரவால்லிங்க. சாமி கண்ண குத்தாது.

fur-coat, leather garments எல்லாம் தெரிஞ்சே செய்ற வேலை. யோசிச்சு பாத்தா எவ்ளோ பெரிய தப்புன்னு புரியுது.

ஆமாம், நம்ம சாமியார்களும் சில சாமிகளும் புலித் தோல் மேல ஒக்காந்துனு இருக்காங்களே - யாருக்காவது என்னு தெரியுமா? கொஞ்சம் விளக்குங்களேன்?

SurveySan said...

மேலே உள்ள சாமியார்கள் கேள்விக்கு யாராவது விடை சொல்லுங்களேன். இணையத்தில் அலசியதில் பெருசா ஒண்ணும் கெடைக்கல.

சேதுக்கரசி said...

வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தேன்.. ஒரு கட்டத்துக்கும் மேல்....... என்ன கொடுமை! பரிதாபம் :-( இத்தனை செய்தபின்னும் அது இன்னும் உயிரோடு :-(((

SurveySan said...

சேதுக்கரசி,

//வீடியோவைப் பார்க்க ஆரம்பித்தேன்.. ஒரு கட்டத்துக்கும் மேல்....... என்ன கொடுமை! பரிதாபம் :-( இத்தனை செய்தபின்னும் அது இன்னும் உயிரோடு :-((( //

என்னாலும் முழுவதும் பார்க்க முடியவில்லை. மிகக் கொடுமை இதெல்லாம். வலிக்காமல் கொன்றிருக்கலாம் என்று தோன்றியது.

கொடுமையான மரணம் மூச்சுத் திணறி தண்ணீருக்குள் மூழ்கி இறப்பது. நான் தினம் தின்னும் மீன்கள் இப்படி மூச்சுத் திணறித்தானே இறக்கிறது என்று மனதில் உரைத்தது இன்று.
( அதற்காக அதை தின்னாமல் இருப்பேனா என்று இன்னும் தெரியவில்லை. )

நண்பர் ஒருவர் இதைப் பார்த்ததும், தான் விலங்குகள் எதையும் உண்பதில்லை, ஆனால் லெதர் பெல்ட், ஷூ மட்டும் போடுகிறேன்.
வேறு யாரோ ஒருவர் சாப்பிடத்தான் ஆடு மாடுகளை கொல்கிறார்கள். அப்படிக் கொல்லப்பட்ட மாடுகளின் தோலில்தான் லெதர் ஷூ செய்கிறார்கள், so, he is not directly creating a demand for the killing of the animals, என்று வாதிட்டார்.

அதுவும் சரிதானோ? லெதர் ஷுவுக்காக கொல்றாங்களா, இல்ல மாமிசத்துக்காகவா? what drives the killing? may be both!

சேதுக்கரசி said...

//அதுவும் சரிதானோ?//

இல்லை. உங்கள் நண்பர் சொல்வது முழுவதும் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று நினைக்கிறேன்.

//லெதர் ஷுவுக்காக கொல்றாங்களா, இல்ல மாமிசத்துக்காகவா? what drives the killing? may be both!//

இரண்டும் என்று நினைக்கிறேன். கல்கத்தா போன்ற ஊர்களில் leather industry இருக்கும் பகுதியில் ஒரு முறை சென்று வந்தாலே உங்கள் நண்பரின் எண்ணம் மாறிவிட வாய்ப்புண்டு.

சேதுக்கரசி said...

இன்று தமிழ்மணத்தில் இணைந்த புதிய வலைப்பதிவைப் பார்த்தீர்களா?

http://porkkalam.blogspot.com/2007/01/blog-post_11.html

Anonymous said...

Dear surveysan,

its really a thought provoking post. keep up your good work.

btw i chose the first option. but not because,i may eat meat or something. because i may kill mosquito/fly/lice/ bugs..etc.

i became a egg-vegetarian 1.5 years ago after seeing the PETA website introduced by my friend amy (she is vegan, no form of animal cruelty or whatsoever )

people get confused with killing bugs with killing animals for meat. nobody kills the bugs on regular basis or breed them & keep them in barns for killing.

moreover mosquitos/flies/bugs cause trouble to mankind. they spread disease which may kill people at times. so we have to stop/fight them. its kind of war. so to protect ourselves from those annoying (mosquitos fits right here), troublecausing little vermins by killing them is not a sin. (amy opposes this too)

even 'cage' farmed eggs also bad too. they keep make hens to lay eggs forever.those hens in pretty bad shape(bald, withered, skinny hens).

they cut the beaks of little chickens so they wont fight& kill each other while they were shoved in tiny place. (its big story..though)

'free range' eggs are ok (as far as me concerned)

still i have leather shoes and wallet. (can't they make these from dead animals skin??; not make them dead by killing them first ofcourse)

Regards
Chinnathambi

Anonymous said...

Dear friend,
Eating non veg is not a crime and it is the very nature of world. What is dangerous is commercialisation of everything. Had it been traditional way the flesh will go as food and skin to cobbler once the animal is killed fully. But since for market and time pressure they are doing such cruel things.
And using synthetic things as alternatives is even more dangerous since they are not eco friendly and could increase global warming which cause danger to entire world finally.
May be you can take a resolution like not to waste non veg food or use the animal good fully before throwing. A life lost is worth its full use.
Murali.

dondu(#11168674346665545885) said...

ஔவை ஷண்முகியில் நாசர் முஸ்லிம் என்று அறிந்து வெகுண்ட ஜெமினி கணேசனை ஔவை ஷண்முகி வேடத்தில் வந்த கமல் என்னென்ன வாதங்கள் கொடுக்கிறார் என்பதைப் பார்த்தீர்கள்தானே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SurveySan said...

சேதுக்கரசி,

//இரண்டும் என்று நினைக்கிறேன். கல்கத்தா போன்ற ஊர்களில் leather industry இருக்கும் பகுதியில் ஒரு முறை சென்று வந்தாலே உங்கள் நண்பரின் எண்ணம் மாறிவிட வாய்ப்புண்டு. //

அந்நியச் செலாவணி இறைச்சியில் அதிகம் கிடைக்கிறதா அல்லது தோலிலிருந்து கிடைக்கிறதா என்பதை வைத்து எதனால் எது என்று முடிவுக்கு வரலாம்.

SurveySan said...

சேதுக்கரசி,

//இன்று தமிழ்மணத்தில் இணைந்த புதிய வலைப்பதிவைப் பார்த்தீர்களா?
http://porkkalam.blogspot.com/2007/01/blog-post_11.html //

நல்ல பதிவு அது. இப்பதான் படிச்சேன்.
இந்த வேகத்தில் மாடுகள் கொல்லப்பட்டால் சில வருடங்களில் மாடுகளே இருக்காது என்பது மிகச்சரி.

கடலில் வாழும் உயிரினங்கள் எல்லாம் 2045ல் காலியாகி விடுமாமே? நவீனமயமாகி விட்ட மீன் பிடி தொழில் செய்பவர்கள், அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்யவும், லாபம் பார்க்கவும் பெருவாரியாக மீன்களை பிடித்து வருவதாலேயே இந்த நிலை வருமாம்.

எங்கே செல்கிறோம் நாம்?

SurveySan said...

Chinnathambi, Thanks for the visit.

//btw i chose the first option. but not because,i may eat meat or something. because i may kill mosquito/fly/lice/ bugs..etc. //

I see no issues in killing flees and mosquitoes. Survival is a good reasoning to qualify these killings as righteous :)

//i became a egg-vegetarian 1.5 years ago after seeing the PETA website introduced by my friend amy (she is vegan, no form of animal cruelty or whatsoever )
//

Veganism is a good thing, if one can follow it. Mahatma Gandhi was a Vegan most of his lifetime.

//they cut the beaks of little chickens so they wont fight& kill each other while they were shoved in tiny place. (its big story..though)//

The increasing demand from mankind is a curse for all other living creatures. Mankind has lost all ethical standards. Overdoing anything and everything for his greed.

//still i have leather shoes and wallet. (can't they make these from dead animals skin??; not make them dead by killing them first ofcourse)//

I think if we are a little considerate when buying leather goods, that will have an impact on the demand.
I read somewhere that the demand for ivory has reduced a lot, because of the bad publicity it receives.
People won't derive pleasure in showcasing their ivory collections anymore, because they are now made aware that ivory comes from elephants and elephants are poached cruely to get their ovory tusks.

I think, the more media exposes the cruelty done to animals, the demand for animal sourced goods will reduce.

for instance, I will NEVER EVER buy/use a jacket made out of 'meer cats' after seeing that video of their killing/skinning. Damn those people who create a demand for these things.

People, stop wearing LEATHER jackets.

SurveySan said...

hi Murali,

//Eating non veg is not a crime and it is the very nature of world. What is dangerous is commercialisation of everything. Had it been traditional way the flesh //

I am glad if its really not a crime:) I understand nature has desingned the circle-of-life where survival for one life depends on the killing of the other.

//What is dangerous is commercialisation of everything. Had it been traditional way the flesh will go as food and skin to cobbler once the animal is killed fully//

Good point. But, commercialisation is becaues of the demand. People wont create industries to kill cows using slaughter machines if we are not creating demands.

I think what can possibly be done is - expose bad publicity for animal killings, which will deter atleast a few people to react and move away from such things.

as I said earlier, like how IVORY has become a 'bad collection', the rest of the animal products could be 'tagged' as bad.

SurveySan said...

dondu, வாங்க வாங்க

//ஔவை ஷண்முகியில் நாசர் முஸ்லிம் என்று அறிந்து வெகுண்ட ஜெமினி கணேசனை ஔவை ஷண்முகி வேடத்தில் வந்த கமல் என்னென்ன வாதங்கள் கொடுக்கிறார் என்பதைப் பார்த்தீர்கள்தானே.//

படத்தை பார்த்தேன். ஆனால், dialogue எல்லாம் நினைவில் இல்லை. தெரிஞ்சவங்க சொல்லுங்களேன் ?

SurveySan said...

அவ்வை ஷண்முகி டயலாக் யாராவது சொல்லுங்களேன். ப்ளீஸ்.

Anonymous said...

saar,
I can't live without eating 'koli'.

SurveySan said...

//saar,
I can't live without eating 'koli'.//

saar, உங்களுக்கு வழி சொல்ற நெலமைலயும் நான் இல்ல. :)

Anonymous said...

ஐயா நானும் அந்த video பார்க்கனும் முகவரி குடுங்க சார் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்......

SurveySan said...

அனானி, என்ன வீடியோ பாக்க இப்படி துடிக்கறீங்க.
சரி இந்தாங்க click

SurveySan said...

யாருங்க அது இதுவரைக்கும் தன்னால் விலங்கிங்கள் துன்பமே படலன்னு வாக்களித்தவர்கள்?

டீடெய்ல்ஸ் ப்ளீஸ்? :)

Anonymous said...

:)